திருவனந்தபுரம் பத்மநாபசாமி பெருமாள் கோயில் Sree Padmanabhaswamy Temple in Tamil

பகவானுடைய அனுகிரகம் என்பது எல்லோருக்கும் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை.  காலகாலமாக பிரார்த்தனை செய்து கொண்டிருப்பவர்களுக்கு தாமதமான தரிசனம் தருவார்.  ஆனால் கொடியவர்கள் வழிபட்டால் கூப்பிட்ட குரலுக்கு,  ஓடி வருவார்!  இதற்கு என்ன காரணம் என்பது யாருக்குமே தெரியாது.  திருமால் லீலைகளை யார் தான் அறிய முடியும்?  இதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் திவாகரயோகிக்கு எப்படி எல்லாம் கருணை காட்டி இருக்கிறார் என்பதற்கு திருவனந்தபுரத்தில்  பள்ளி கொண்டிருக்கும் அனந்த பத்மநாபன் கோயில் ஒன்றே போதும்.

 கேரளாவின் தலைநகராக விளங்கும் திருவனந்தபுரத்தில் ரயில் நிலையத்திலிருந்து வெகு அருகில் உள்ளது ஆனந்த பத்மநாப சுவாமி ஆலயம்.  மூலவர் ஆனந்தபத்மநாபர்.   ஆனந்த சயனத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.  தாயா ஸ்ரீஹரி லக்ஷ்மி.  தீர்த்தம் மத்ஸ்ய தீர்த்தம்.  பத்ம தீர்த்தம்,  வராஹ தீர்த்தம்.  விமானம் ஹேமகூட விமானம்.  பிரம்மன்,  சந்திரன் ஏகாதச ருத்ரர்களுக்கு திருமால் நேரடியாக தரிசனம் கொடுத்த ஸ்தலம்.

 திருவாதிரை யோகி என்பவர் திருமால் மீது அளவுகடந்த பக்தியும் ஈடுபாடும்  கொண்டிருந்தபோது.  அவரை  அனுக்கிரகிக்க  பகவான் திருவுள்ளம் கொண்டு இரண்டு வயது குழந்தையாக அவர் முன் தோன்றினார்.  ஒரு நாள் தீவாகரயோகி  பூஜை செய்யும்போது ஊரு சாளக்கிராமத்தை குழந்தை வாயில் போட்டுக்கொண்டது.  இதைக் கண்டித்து  குழந்தையை கண்டிக்க குழந்தைக்கு வேகமாக ஓடியது.  அந்த குழந்தையை துரத்திக்கொண்டு யோகியும் ஓடினார்.  அந்த தெய்வீகக் குழந்தை ஒரு  மரப்  பொந்திற்குள் நுழைந்து மறைந்தது.  யோகி பகவானை நோக்கி பிரார்த்தனை செய்ய,  அந்த மரம் விழுந்து பகவான் விஸ்வரூப தரிசனம் ஆக காட்சி தந்தார்.  இதைக்கண்டு ஆனந்தமான யோகி,  அப்படியே சயன கோலத்தில் நிரந்தரமாக காட்சி தரும்படி வேண்டினார்.  பகவானும் அப்படியே ஆனந்த  சயனமானார்.  அதன்படி பகவான் திருமுக மண்டலம்,  நாடி,  பாதம் இந்த மூன்றையும் மூன்று வாசல் வழியாக தனித்தனியாக தரிசிக்க வேண்டும்.

 சன்னதிக்கு முன்னால் ஹனுமானும் சன்னதிக்கு பின்னால் கிருஷ்ணனும் காட்சியளிக்கின்றனர்.  இந்த ஹனுமான் மீது சாற்றப்படும் வெண்ணை எவ்வளவு  நாளானாலும் கெட்டுப் போவதில்லை.  எந்த வெயிலிலும் உருகுவது இல்லை.    தேசிகன்,  நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த  ஸதலம்.

பரிகாரம்

 சோதனைகள் யாருக்கெல்லாம் அதிகமாகிக்  கொண்டிருக்கிறதோ  அவர்கள் எல்லோரும் திருமாலின் நம்பிக்கைக்கு பாத்திரமாக றார்கள்.  பொறுமையாக இருந்து பகவானை வணங்கினால் பொன்னான காலம் நிச்சயம்.  எந்த பிரார்த்தனையும் இங்கு வந்து செய்தால் அது நிச்சயம் நிறைவேறி விடும்.  கஷ்டங்கள் விலக,  காரியசித்தி அடைய,   திருமண தடைவிலக.  மன நிம்மதியோடு வாழ திருவனந்தபுரம் பத்மநாபனை மனமுருக பிரார்த்தனை செய்தால் போதும்.   காணக் கிடைக்காத சந்தோசம் ஏற்படும்.

Quickly Find What You Are Looking For