திருப்பார்த்தன் பள்ளி பெருமாள் கோயில் Thiruppaarththanpalli Temple in Tamil

காவிரியாற்றின் கரையோரத்தில் அமைந்த இன்னொரு பெருமை பெற்ற ஸ்தலம் திருப்பார்த்தன்பள்ளி.  அமைதியான சூழ்நிலையில் இந்தத் ஸ்தலம் காட்சியளிக்கிறது.  திருமால் பரிபூரண ஆனந்த கோலத்தோடு காட்சியளிப்பதை எவ்வளவு நேரம் ஆனாலும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.  பகவான் விரும்பி அமர்ந்த ஸ்தலங்களில்  இந்தத் ஸ்தலமும் ஒன்று என்பதால் அனைவரும் தரிசித்து பகவான் திருவருள் பெற தினமும் வந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

 திருப்பார்த்தன்பள்ளி என்ற பெயருடைய இந்தத் ஸ்தலம்  சீர்காழியிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில். ( காவிரி ஆற்றைக் கடந்தால்)  அமைந்திருக்கிறது.  மூலவர் தாமரையால் கேள்வன்.  நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.  மேற்கே பார்த்து தரிசனம்.  தாயார் தாமரை நாயகி.  உற்சவர் பார்த்தசாரதி.  தீர்த்தம் சங்க ஸரஸ் (கங்கா தீர்த்தம்  என்று  வேறொரு பெயர்)  விமானம் நாராயண விமானம்.  வருண பகவானுக்கும் ஏகாதசத்ருரர்களுக்கும்  அவர்களின் வேண்டுகோள்படி காட்சி தந்த புனித ஸ்தலம்.  திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

 மூலவருக்கும் சரி,  உற்சவருக்கும் சரி ஸ்ரீதேவி,  பூதேவி,  நீலாதேவி என்று மூன்று  தேவிகள் உண்டு என்பது  சிறப்பு அம்சம்.  உற்சவர் பார்த்தசாரதி என்றாலும் கோலவில்லி ராமர் என்று மற்றுமொரு அழகிய உத்தவர் உண்டு.  சங்கு சக்கர கதையுடன்  நிற்கும் இவருக்கு வில்லும் அம்பும்  சாற்றி வைக்கப்பட்டிருக்கிறது.  இந்த கோலவில்லி  இராமரின் மூலவர் சிறிது தூரம் தள்ளி இருக்கும் ஒரு தோப்பில் தனிக் கோயில் கொண்டிருக்கிறார்.

 ஒரு சமயம் வருண பகவான் மன நிம்மதியின்றி தவித்த பொழுது மன அமைதி வேண்டுமானால்  திருநாங்கூருக்கு  அருகேயுள்ள திருப்பார்த்தன் பள்ளிக்குச் சென்று அங்குள்ள கங்கா தீர்த்தம் என்று அழைக்கப்படும்.   சங்க ஸரஸ்  புஷ்கரணியில் நீராடி பெருமாளை நோக்கி தவம் செய்தார் மன நிம்மதி கிடைக்கும்.  யாராலும் எவராலும் எத்தனை பெரிய சக்தியினாலும் எக்காலத்திலும் இடையூறு இல்லாமல் பக்கத்திலிருந்து பார்த்தான் காப்பாற்றுவார் என்று சொன்னதின் பேரில் வருணன் இங்கு வந்து முறைப்படி பிரார்த்தனை செய்து மனநிம்மதியை பெற்றார்.  வருணனுக்கு அனுக்கிரகத்தை  தந்தது போல பத்து வகை  புத்திரர்களுக்கும் திருமால் தரிசனம் தந்து அவர்களது வாழ்க்கையை ஒளிவீச செய்தார்.

 பரிகாரம்

 ஆரோக்கியம் குன்றியவர்கள்,  வியாபாரத்தில் நம்பி ஏமாந்து போனவர்கள்,  வேலை கிடைக்காமல் அவதிப்படும் இளைஞர்கள்  இளைஞிகள்,  வேலை கிடைக்கும் அதில் முன்னேற முடியாமல் அவதிப்படும் அலுவலக பணியாட்கள்,  பாலியல் தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்கள்,  குழந்தைகளினால் வெறுக்கப்பட்டு போக்கிடம் இல்லாமல் தனிப்பட்ட குழுவினர் துடிக்கும் வயதானவர்கள் ஆகியோர் இந்த தலத்திற்கு வந்து  பெருமாளை தரிசனம்  செய்தாள் கஷ்டங்கள் விலகி மன நிம்மதியோடு வாழ்நாட்களை கழிப்பார்கள்.

Quickly Find What You Are Looking For