திருவான்மியூர் பாம்பணையப்பன் பெருமாள் கோயில் Thiruvanmiyur Temple in Tamil

 கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பது பழமொழி.  ஆனால் கலகம் செய்பவர்கள் நியாயத்திற்குப்  புறம்பாக செயல்பட்டால் நியாயம் கிடைக்காது.  மாறாக தண்டனைதான் கிடைக்கும் என்பதற்கு  நாரதர் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.  எதுவும் அளவுக்கு மிஞ்சக் கூடாது என்பதை எடுத்துக்காட்ட பகவான் செய்த திருவிளையாடல்களில் திருவண் வண்டூர்  புண்ணிய ஸ்தலத்தில் நடந்திருக்கிறது.

 இந்தக் கோயில்   செங்கண்ணூரில்  இருந்து வடக்கே எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.  மூலவர் பாம்பணையப்பன்.  கமலநாதன் என்ற திருப்பெயரும் உண்டு.  நின்ற திருக்கோலத்தில் தரிசனம்.  மேற்கு திசையை பார்த்து தரிசனம் தருகிறார்.  தாயார் கமலவல்லி நாச்சியார்.  தீர்த்தம் பாபநாச தீர்த்தம்,  பம்பா தீர்த்தம்.  விமானம்  வேதாலய விமானம்.  மார்க்கண்டேய மகரிஷிக்கும்,  நாரதருக்கும் நேர்முக தரிசனம் கொடுத்த புண்ணிய ஸ்தலம்.

 நகுலன் பிரதிஷ்டை செய்த ஸ்தலம்.  சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள பூமியைத் தோண்டும்போது பெருமாள் விக்ரகங்கள் கண்டெடுக்கப்பட்டு இப்போது அதற்கு கோயில் கட்டி ஆராதனை செய்து வருகிறார்கள்.  ஒரு சமயம் நாரதருக்கும்,  பிரம்மாவுக்கு ஏற்பட்ட சண்டையால்,  நாரதரை பிரம்மா சபித்துவிட்டார்.  இந்த சாபத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள நாரதர் இந்த திருவண்வண்டூர் ஸ்தலத்திற்கு வந்து பிரார்த்தனையும்,  தவமும் மேற்கொண்டார்.

 பெருமாளும் நாரதர் கண்முன் தோன்றி பிரம்மாவின்  சாபத்தைப்  போக்கினார்.  இதற்கு பிறகே நாரதர் தனது நாரதீய புராணத்தைக் இயற்றியதாகவும்,  ஸ்ரீமன் நாராயணன் நாரதருக்கு ப்ரதத்துவம் என்று பட்டம் கொடுத்து தன்னை பூஜிக்கும் முறை,  துதி ஆகியவற்றை 25 ஆயிரம் கிரந்தங்களில் சொல்லி முடித்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது.  நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

 பரிகாரம்

 நல்லதை செய்யும் போது,  நம்மையும் அறியாமல் வாக்கினால்,  கொள்கையினால் நிறைய பேர்களுடைய மனதை புண்படுத்தி இருக்கக்கூடும்.  தெரிந்து செய்யும் பாவங்களை விட,  தெரியாமல் செய்யும் பாவங்கள் அதிகம் என்பதால்,  நாம் மறுபிறவி வேண்டாம் என்று  விரும்பினால்,.  இந்த ஜென்மத்திலேயே திருமண் வண்டுர் பாம்பணையப்பன் பெருமாளை நேரடியாக வந்து வணங்கலாம்.  நினைத்ததை பகவான் நடத்தி வைப்பார்.  இதுவரை செய்த பாவங்களும் உடனடியாக விலகும்.

Quickly Find What You Are Looking For