திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் Thirumohoor Kalamegaperumal Temple in Tamil
ஜனனம் ஆகும் போது எல்லோரும் நல்லவர்கள்தான். பிறகுதான் அவர்கள் செயல்பாட்டை பொறுத்து நல்லது, கேட்டதும் நடக்கிறது. அதிலும் நல்லவர்களுக்கு தான் நிறைய துன்பமும் தொல்லையும் ஏற்படுகின்றன. இந்த தொல்லைகளை விரட்ட பகவானிடம் இருக்கும் ஒரே ஆயுதம் சுதர்சன சக்கரம் தான். அப்படிப்பட்ட சுதர்சன சக்கரம் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத அளவுக்கு பெருமையுடன் ஜொலிக்கிற ஒரு கோவில் திருப்பூரில் தான் இருக்கிறது.
மதுரைக்கு வடகிழக்கே 12 கிலோமீட்டர் தொலைவில் இருப்பது மோகூர். இது மோகனபுரம், மோகன சேத்திரம் என்றும் அழைக்கப்படும். ஐந்து நிலை இராஜகோபுரம் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் விசாலமான நான்கு பிரகாரங்களுடன் அமைந்திருக்கிறது. மூலவர் காளமேகப் பெருமாள். பஞ்சாயத் கோலமாக சேவை சாதிக்கிறார். நின்ற திருக்கோலம். உற்சவர் திருமோகூர் ஆப்தன். தாயார் மேகவல்லி, தீர்த்தம் ஷிராப்த புஷ்கரணி. தலவிருட்சம் வில்வம். விமானம் கேதகி விமானம். நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் மணவாள மாமுனிவரால் பாடப்பெற்ற ஸ்தலம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில். அகநானூறு, பதிற்றுப்பத்து, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் இடம் பெற்ற ஸ்தலம்.
அமிர்தம் கிடைக்க திருப்பாற்கடலை கடையும் சமயம். அந்த அமிர்தத்தின் ஒரு துளி இங்கு உள்ள தெப்பக்குளத்தில் விழுந்ததாகவும். இதற்கு தெற்கே பெருமாள் பள்ளி கொண்டிருப்பதாகவும் புராண வரலாறு. இவ்வித பிரார்த்தனா சயன திருக்கோலம். 108 திவ்ய தேசங்களில் காண முடியாதது. சுதர்ஸன சன்னதி முன் பக்கம் சக்கரத்தாழ்வார், பின் பகுதியில் நரசிங்க பெருமாள். 48 தேவதைகள் சூழ வீற்றிலிருந்து ஆறு வட்டங்களுக்குள் 154 அட்சரங்கள் பொறித்திருக்க 16 ஆயுதங்கள், 16 திருக்கரங்கள் கொண்டு மூன்று கண்களுடன் நெருப்பாக ஜொலிக்கும் வண்ணம் காணப்படுகிறது. இது மிகவும் சிறப்பான அமைப்பு. இந்த இடத்தில்தான் விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு அமிர்தம் வழங்கிய தலம். புலஸ்திய முனிவருக்கு பகவான் தெய்வ தரிசனம் கொடுத்த இடம்.
பரிகாரம்
எந்த காரியத்தை எடுத்தாலும் தடங்கல் ஏற்பட்டு கொண்டிருப்பவர்களுக்கும், தொடர்ந்து பல வருடங்களாக வாழ்க்கையில் முன்னேற்றம் பெறாதவர்களுக்கும், கில்லி, சூனியம், ஏவல், பேய் பிசாசு, போன்ற துர்தேவதைகளால் பாதிக்கப்பட்டு நொந்து போன அவர்களுக்கும் விடிவெள்ளியாக விளங்குவது திருமோகூர் காளமேகப் பெருமாள் சன்னதிதான். இங்கு தங்கி முறைப்படி என்னென்ன பரிகாரங்களைச் செய்ய வேண்டுமோ அதை செய்தால் போதும். வாழ்க்கையில் மறுமலர்ச்சியும், சந்தோசத்தையும் உடனடியாகவே பெற முடியும். அவ்வளவு வரப்பிரசாதம் பெற்ற புண்ணிய ஸ்தலம்.