திருவயிந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில் Thiruvahindrapuram Temple in Tamil

 பெருமாளின் திவ்ய தேசங்கள் இவ்வளவுதான் எண்ணிக்கை என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்றாலும் இல்ல திவ்ய தேசங்களில் பக்தர்களை எப்படி எல்லாம் சோதனைகளுக்கு உட்படுத்தி பின்னர் அவர்களுக்கு தாமே தரிசனம் கொடுத்திருக்கிறார் என்பதை பார்க்கும் பொழுது பெருமாளின் திருவிளையாடல் எத்தனை எத்தனை என்று நினைத்து மனம் ஆனந்தத்தின் மூழ்குகிறது.  இதற்கு அடையாளமாக திருவஹீந்திரபுரம்  தெய்வ நாயகன் கோயிலை சொல்லலாம்.

 கெடிலநதி தென்கரையில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் 5 நிலை இராஜகோபுரம் 3 பிரகாரங்களைக் கொண்டது.  மூலவர் தெய்வநாயக பெருமாள் நின்ற திருக்கோலம்.  இருபுறங்களில் மார்க்கண்டேயர்.  பூமிதேவி காட்சியளிக்கிறார்கள்.  உற்சவர் தேவநாதன்.  தாயா ஹேமாம்புஜவல்லி.  ஸ்ரீ பார்கவி தாயார் என்பது மற்றுமொரு பெயர்.  விமானம் சந்திர விமானம்.  தலவிருட்சம் வில்வம்.  தீர்த்தம் சேஷ  தீர்த்த கிணறு.   கருட நதி இவ்வாலயத்தின் எதிரி 74 படிகள் கொண்ட  ஔஷதாசலம்  என்ற மழையில் லக்ஷ்மி ஹயக்ரீவர் காட்சி தருகிறார்.

 தேவர்களுக்கு அசுரர்களுக்கும் நடந்த போரில் திருமால்,  தேவர்களுக்காக அசுரர்களை தனது  சக்ராயுதத்தால்  கொன்றார்.  அவர்களுக்காக சிவபெருமான் போராடிய பொழுது சிவபெருமான்  சக்கராயுதத்திற்கு எதிராக தனது சூலத்தை ஏவினார்.  அதையும் சக்கராயுதம் வென்றது.  அப்பொழுது சிவபெருமானுக்கு ஸ்ரீமத் நாராயணன் மூர்த்தியும் தாமே என்று வடிவத்தை காட்ட சிவபெருமான் சாந்தமானார்.  அவருடைய  சூலாயுதத்தை பெருமாள் சிவனிடமே கொடுத்தார்.  பிறகு இங்கேயே கோயில் கொண்ட பெருமாள்.

 ஒரு சமயம் தாக  சாந்திக்கு பகவான் நீர் கேட்க  ஆதிசேஷன் தனது வாளால்  பூமியை வெடித்துப் பிளந்து தீர்த்தம் கொடுத்தார்.  இதனால் இங்குள்ள தீர்த்தத்திற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர்.  கருடனும் பகவானுக்கு நீர் கொண்டு வந்தார்.  அதுதான் கருட நதி ஆயிற்று.  இப்பொழுது அது கெடில நதியாக மாறி விட்டது.   கருடன் கைகளைத் தட்டிக்கொண்டு சேவை சாதிப்பது அபூர்வமான காட்சி,  பெருமாள் சங்கு சக்கரதாரியாய்,  நான் முகத்தோடு நெற்றிக்கண் கொண்டு 'மூவரும் நாமே'  இன்று காட்சியளிப்பது மிகப்பெரிய விசேஷம்.  ஸ்ரீமத் வேதாந்த தேசிகருக்கு கருட பகவான் மூலம் ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசமாக பெற்ற ஸ்தலம்.

 பரிகாரம்

 நோய்களினால் கஷ்டப்படுகிறவர்கள் டாக்டரிடம் சென்று குணமாகாமல் இருந்தாலும் சரி,  வறுமையில் பலகாலம் வருபவர்களும் சரி,  கடன் தொல்லையில் மாட்டிக் கொண்டு சங்கடப்படுவார்கள் சரி வாழ்க்கையில் தொந்தரவுகளிலிருந்து விடுபட்டு இனி மனித பிறவியே வேண்டாம் மோட்சம் தான் வேண்டும் என்று   நினைப்பவர்களும்  இங்குள்ள பெருமாள் இவர் நேரடியாக பிரார்த்தனை செய்தால் அவர்கள் எண்ணியது அப்படியே நடக்கும்.  இந்த தேச குலத்தில் பால் உப்பு மிளகு ஆகியவைகளை போட்டாள் அத்தனை நோய்களும் விலகும்.

Quickly Find What You Are Looking For