திருவட மதுரை மதுரா

"நடந்து முடிந்த சம்பவத்திற்கும் நடப்பதற்கும் இனி எதிர்காலத்தில் நடக்கப் போகும் அனைத்து சம்பவங்களுக்கும் நான் தான் காரணம்"  என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ண பரமாத்மா சொன்னது விளையாட்டு வார்த்தைகளாக இருக்க முடியாது.  ஆடவைகிறவனும் அவனே,   ஆட்டுபவனும் அவனே என்ற அனுபவ சித்தாந்தத்தை இந்த பாரினில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உணர்த்திய கிருஷ்ண பரமாத்மா இறந்த பேறுபெற்ற தலம் தான் திரு வடமதுரை  என்னும் மதுரா.

 டெல்லியிலிருந்து ஆக்ரா போகும் ரயில் பாதையில் மதுரா என்னும் ரயில் நிலையம் இருக்கிறது.  இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருப்பது தான் மதுரா கிருஷ்ணர் கோவில்.  மூலவர் கோவர்த்தநேசன்.  பாலகிருஷ்ணன் என்ற வேறு ஒரு திருநாமமும் உண்டு.  நின்ற திருக்கோலம்.  தாயார் சத்தியபாமா.  தீர்த்தம் இந்திர தீர்த்தம் கோவர்தன தீர்த்தம் யமுனா நதி.  விமானம் கோவர்த்தன விமானம் பிரம்மா இந்திரன்  உள்ளிட்ட அனைத்து தேவர்கள் வாசுதேவர்,  தேவகி ஆகியோருக்கு பகவான் தெய்வீக  திரு தரிசனம் கொடுத்த ஸ்தலம்.

 மதுரா நகரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் ஜென்ம பூமி என்று அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த சிறைச்சாலையில் கோயில் உண்டு.  இக்கோயிலில் கைங்கர்யம் செய்பவர்கள் தமிழ்நாட்டு  வைஷ்ணவர்கள்.  கோவர்தனம்,  பிருந்தாவனம்,  மதுரா என்ற மூன்றும் வடமதுரை திவ்ய தேசங்கள் என்று கருதப்படுகின்றன.

 லவணாசுரனை-  சத்ருகனன்  கொன்று யமுனை நதிக்கரையில் ராஜ்ஜியத்தை நிறுவினார்.  சத்ருக்கனனுக்குப்   பின்பு மதுரா நகரம் யாதவர்கள் வசமாகியது.  இன்று யாதவ குலத்தில் தான் கிருஷ்ண  பரமாத்மா பிறந்தார்.  ஸ்ரீ கிருஷ்ணரின் ஜென்ம பூமி என்பதால் விசேஷம்.  இதைத் தவிர  துவாரக் நாத்ஜி,   மதுரா நாத்ஜி என்று பிற்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களும் இங்கு உண்டு.  பெரியாழ்வார்,  ஆண்டாள் தொண்டரடிப்பொடி ஆழ்வார்,  திருமங்கையாழ்வார்,  நம்மாழ்வார் ஆகியோர் இந்த ஸ்தலத்தை மங்களாசாசனம் செய்திருக்கின்றனர்.

 பரிகாரம்

 எது நடந்தாலும் எப்படி நடந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் சர்வமும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு அர்ப்பணம் என்று சொல்லி,  துவாரகாபுரி கிருஷ்ண பரமாத்மாவை மனதால் நினைத்து விட்டு விடுங்கள்.  மதுராவில் கிருஷ்ணன் பிறந்தாலும் நிச்சயம் உங்களது பிரார்த்தனைக்கு மதிப்பு கொடுத்து ஓடோடி வந்து காப்பாற்றுவார்.  முற்றிலும் முழுமையாக நம்பினால் போதும்.  திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றியது போல் கவலைகளை விரட்டி கஷ்டத்தைப்  காட்டுவார்   ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

Quickly Find What You Are Looking For