ஸ்ரீ சாரங்கபாணி பெருமாள் பெருமாள் கோயில் Sarangapani Temple in Tamil
புண்ணியம் என்பது கோயில்களில் மட்டும் கிடைப்பதில்லை புண்ணிய நதிகளிலும் கிடைத்தது. கோயிலும், புண்ணிய நதியும் அருகருகே அமைந்துவிட்டால் பிறகு கேட்கவே வேண்டாம்? அப்படிப்பட்ட ஒரு அருமையான புண்ணிய பூமி தான் திரு நைமிசாரண்யம். இது வட இந்தியாவில் உள்ள திருப்பதிகளில் அயோத்திக்கு அடுத்தபடி விளங்கக் கூடியது. வைணவர்களாக பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது நைமிசாரண்யம் சென்று வந்தார் பிறவித் துன்பம் விலகும் என்பது ஐதீகம்.
கல்கத்தா டேராடூன் ரயில் மார்க்கமாக செல்லும் ரயில் பாதையில் 'பாவ மாவ்' ஜங்ஷனில் இறங்கி அங்கிருந்து சீதாப்பூர் போகும் மற்றுமொரு ரயில் ஏறினாள் நைமிசாரணிய ரயில் நிலையம் வரும். இங்கிருந்து நடைபாதை ஆகவே கோவிலுக்கு சென்று விடலாம். இங்கு வேண்டிய வசதிகளை செய்துதர அகோபில மடம் இருக்கிறது. மூலவர் தேவராஜன், நின்ற திருக்கோலம், தாயார் ஸ்ரீ ஹரி லட்சுமி. (புண்டரீக வல்லி) தீர்த்தம் சக்கர தீர்த்தம். கோமுகி நதி நேமி திவ்விய விச்ராந்த தீர்த்தங்கள். ஸ்தலவிருட்சம் தபோவனம். விமானம் ஸ்ரீஹரி விமானம்.
இந்த ஊர் காட்டில் பகவான் இப்பொழுதும் நித்திய சொரூபியாக இருப்பதால் இந்த காட்டையே வணங்கி வருகிறார்கள். கோமுகி நதியில் ஸ்நானம் செய்துவிட்டு சக்கர தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்ற நியதி இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சக்கரத்தாழ்வார்; விநாயகர், இராமர், லட்சுமணன் சீதை ஆகியோரின் ஆலயங்கள் இருக்கின்றன.
கோமுகி நதிக்கு போகும் வழியில் வியாசகட்டி என்னும் இடம் உண்டு. இங்கு வேத வியாசருக்கு ஆலயம் இருக்கிறது. இந்த இடத்தில்தான் வியாச பகவான் சுகப் பிரம்மமும் ப்ரவசனங்கள் செய்து, மகாபாரதம் பாகவதம் போன்ற இதிகாச புராணங்கள் இயற்றிய இடம்.
இந்த ஊரின் இன்னொரு புறத்தில் புராண மந்திர் என்னும் கோயில் உண்டு. கிளி முக்குடன் சுகப்பிரம்மம் வெண்கல சிலை இருக்கிறது. இதற்குப் பக்கத்தில் ஒரு குன்றின் மீது அனுமான் ஸ்ரீ இராம லட்சுமணர்களை தன் இரு தோள்களில் தாங்கி கொண்டு நின்ற திருக்கோலத்தில் தரிசனம் கொடுக்கிறார். இந்தக் கோயிலுக்குப் பெயர் அனுமான் கட்டி என்று சொல்லப்படுகிறது.
பரிகாரம்
ஆழ்வார் பாடிய கோயிலும் மூர்த்திகளும் இல்லை. இந்திரன், சுதர்மன், தேவ ரிஷி, சூத புராணிகர் வேத வியாசருக்கு திருமால் நேரடியாக தரிசனம் தந்த இடம். இந்த புண்ணிய சேத்திரத்தில் நமது கால் பட்டாலே அத்தனை கெடுதல் பலனும் விலகிவிடும். இறைவனது கருணைக்குப் பாத்திரமாகி விடலாம். இரவில் துயரிலிருந்து விடுதலையில் பாவங்கள் பயங்களிலிருந்து பயமும் விலகும். குல பரம்பரை தோஷமும் விலகும்