திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில் Ninra Narayana Perumal Temple in Tamil

 இப்பூமியில் எல்லாமே பூர்வஜென்ம நல்லது கெட்டதற்கு ஏற்ப ஜனனம் பிறக்கிறது. ,  மனிதர்களுக்கு மட்டுமின்றி மிருகங்களுக்கும் கூட பூர்வ புண்ணிய,   பாவம் உண்டு  என்றதொரு அரிய தத்துவத்தை பகவான் தன் திருவிளையாடல் மூலம் நமக்கெல்லாம் எடுத்துக்காட்டுகிறார் ஒரு ஸ்தலம் தமிழ்நாட்டில் உண்டு.  அந்த ஸ்தலம் திருத்தண்கல் என்பது.

   ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும்  விருதுநகரில் இருந்தும் இந்த ஊருக்கு வரலாம்.  மூலவர் நின்ற நாராயணன்.   கிழக்கே திருமுக மண்டலம்.  உற்சவர் திருத்தண்காலப்பன்,  தாயார் செங்கமலத் தாயார்.  அன்ன நாயகி,  ஆனந்தநாயகி,  அம்ருத நாயகி,  ஜாம்பவதி,  என்ற வேறு பெயர்களும் உண்டு.  தீர்த்தம் பாபவிநாச தீர்த்தம்.  விமானம் தேவ சந்திர விமானம்.  சல்ய பாண்டியனுக்கும்,   புலிக்கும்,  ஸ்ரீவல்லபன்,  ஸ்ரீதேவிக்கும் பகவான் காட்சி கொடுத்த ஸ்தலம்.

 குன்றின் மீது இருக்கும் கோயில் இது.  எல்லா திருமேனிகளும் வர்ண பூசப்பெற்ற  சுதையால் ஆனவை.  எனவே பெருமாளுக்கு திருமஞ்சனம் கிடையாது.  எங்க மல்லி தாயாருக்கு மட்டும் தினந்தோறும் எண்ணெய்க் காப்பு உற்சவம் நடக்கும்.  இங்கு கருடன் ஸர்பத்தோடும்,  அமிர்த  கலாச்சாரத்தோடும் காணப்படுகிறார்.  ஸ்ரீ   கிருஷ்ணனின் பௌத்திரன்  அனிருத்தன் உஷையை மணந்த ஸ்தலம்.
 சந்திர கேது என்ற மன்னன் ஏகாதசி உபவாசம் இருந்து மறுநாள் துவாதசி ஆரம்பிக்கும் முன்னே என்னை  தேய்த்து ஸ்நானம் செய்தபடியால்  புலியாக  பிறக்க நேரிட்டது.  இந்த க்ஷேத்திரத்திற்கு வந்ததும்  தன் பூர்வ ஜென்ம ஞாபகம்  ஏற்பட பகவானை நோக்கி பிரார்த்தித்தது.   பகவானும் திருவருட் கொண்டு  அந்த புலிக்கு தரிசனம் கொடுத்து முக்தி கொடுத்தார்.

 ஸ்ரீதேவி இந்த  ஸ்தலத்தில்  தவம் செய்து பகவானை அடைந்ததாக புராணம்  கூறுகிறது.   திருமங்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும்  மங்களாசாசனம் செய்த ஸ்தலம் இது.  இன்னொரு செய்தியும் உண்டு.  முருகப்பெருமான் இந்த ஸ்தலத்தில் சில காலம் தங்கியதால் திருத்தங்கல் என்ற பெயர் ஏற்பட்டதாக ஒரு குறிப்பும் உண்டு.

 பரிகாரம்

 மனிதர்களை விட தினமும் அதிக பாவம்  செய்பவை  புலிகள் தான்.  அப்படிப்பட்ட புலிக்கே பகவான் கருணை காட்டினார் என்றால் நிச்சயம் நமக்கு பகவான் அருள் புரிவார்.  பிரார்த்தனைகளை மட்டும் செய்வோம்.  மற்றபடி நம்முடைய அனைத்து கஷ்டங்களையும் பகவான் பார்த்துக்கொள்வார்.  துன்பம் இனி தொடராது என்ற நம்பிக்கையோடு ஒரு தடவை இந்த  திருத்தண்ஙகால்  நின்ற நாராயணனின் அடிமலர்களைப் பணிவோம்.  புண்ணியம் பெறுவோம்.

Quickly Find What You Are Looking For