திருக்காரகம் கருணாகரப் பெருமாள் கோயில்

இந்த உடல் மனம் பொருள் எல்லாம் திருமாலுக்குச் சொந்தம்.  ஏன் இந்த உலகமே பெருமாளுக்கு தான் சொந்தம்.  அவன் உலகை அளந்தவன் ஆயிற்றே.  அந்த உலகளந்த பெருமாள் அதோடு மாத்திரம் விடவில்லை.   இன்னும் ஏராளமான அதிசயங்களை தன் பக்தர்களுக்காக செய்திருக்கிறார்.  அதுவும் காஞ்சிபுரம் உலகளந்த  பெருமாள் கோயிலில் உள்ளிருந்தே என்றாள் நாம் ஆச்சரியப்படாமல் என்ன செய்ய முடியும்.

  காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் இரண்டாவது   தென் பிரகாரத்தில்,  தனக்கென்று ஒரு தனி  சன்னதியை அமைத்து கொண்டு  அருள்பாலித்து வருகிறார்   திருக்காரப் பெருமாள்!  மூலவரின் திருநாமம் கருணாகரப் பெருமாள்.  தாயார் பத்மாமணி நாச்சியார்.  அக்ராய தீர்த்தம்.

 அக்ராயர் என்ற அரசனுக்கு ஏற்பட்ட கொடுநோய் குணமாகாமல் தவித்தபோது இந்த தளத்தில் உள்ள புஷ்கரணியில் நீராடி  கருணாகரப் பெருமாளை பிரார்த்தனை செய்தால்,  கொடிய நோய் விலகிவிடும் என்று சொன்னதின் பேரில் இந்த ஸ்தலத்திற்கு  வந்தார் அக்ராயர்.  பிறகு தனக்கென்று ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டு அதில் நீராடி பெருமாள் பிரார்த்தனை செய்தார்.  பெருமாளும்  அக்ராயருக்குத்  தரிசனம் கொடுத்து அவரது தீராத வியாதியை நீக்கியதாக ஒரு செவிவழி செய்தி.

 முனிவர்களுள்  தனக்கென்று ஒரு தனி இடம் வகித்துவந்த கார்ஹ முனிவரது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கருணாகரப் பெருமாள் பிரத்தியாசம்  ஆன ஸ்தலம்  என்ற பெருமையும் உண்டு.  தொண்டைமண்டல திவ்யதேசங்களில் முன்னிலை வகிக்கிறது.  திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற ஸ்தலம்.

 பரிகாரம்

 ஒருவன் புண்ணியம் செய்தவன  இல்லை பாவம் செய்தவனா  என்பதை அவனுக்கு வந்திருக்கும் நோயை வைத்து சொல்லிவிடலாம் என்று சொல்லுவதுண்டு.  தீராத நோய் என்று  வந்தான் மருத்துவரிடம் செல்வதை விட திருமாலிடம் சரணடைவதுதான் மிகுந்த புத்திசாலித்தனம்.  அக்ராயர்  அப்படி செய்து தான் நோயிலிருந்து  குணமானார்.  தீராத நோய்கள் கொண்டவர்கள், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்,  மனநோயாளிகள்,  எதிர்பார்த்து ஏமாந்து போனவர்கள்,  அதிர்ச்சியினால் பேச முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து கருணாகர பெருமானை முறைப்படி வணங்கி,  பிரார்த்தனை செய்தால் அவர்களுடைய தீராத வியாதிகள் மட்டுமல்ல மனக்குறைகளும் விலகி வாழ்வாங்கு வாழ்வார்கள்.

Quickly Find What You Are Looking For