திருக்குளந்தை ஸ்ரீனிவாசன் பெருமாள் கோயில் Srinivasa Perumal Temple, Tirukulandhai in Tamil
அந்த காலத்திலும் கொடிய அரக்கர்கள் இருந்து இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேர்களும் திருமாலால் வதம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது புராண வரலாறு. அரக்கர்களின் சாதாரண மனிதர்களால் ஜெயிக்க முடியவில்லை. பகவான் ஒருவர்தான் அவர்களை வதம் செய்யப் படும் அளவுக்கு வலிமை பொருந்தியவர்களாக வீற்றிருந்தார்கள். அப்படி ஒரு அரக்கனை திருமால் வதம் செய்த புண்ணிய பூமியில் திருக்குளந்தையும் ஒன்று.
ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் வடகிழக்கில் ஏரல் செல்லும் பேருந்தில் திருக்குளந்தைக்கு வரலாம். மற்றுமொரு வழியும் உண்டு. புளியங்குடியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருப்பது திருக்குளந்தை தான். மூலவர் ஸ்ரீனிவாசன், நின்ற திருக்கோலம், உற்சவர் மாயக்கூத்தன். தாயார் அலமேலுமங்கை தாயார், குழந்தைவல்லி என்று இரண்டு உபய நாச்சியார்கள். தீர்த்தம் பெருங்குளம். விமானம் ஆனந்த நிலைய விமானம். குரு பகவானுக்கு பெருமாள் திவ்ய தரிசனம் தந்த ஸ்தலம்.
அச்மஸாரன் என்னும் அசுரன் நாட்டியமாடியே நிறைய பேர்களை கொன்று வந்தான். அவனது மாயாஜாலம் அதிகமாகியது. யாராலும் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. பக்தர்கள் இந்த அசுரனால் கஷ்டப்படுவதைக் கண்டு திருமால், அசிமஸாரனை மாய யுத்தம் செய்து, அவனை போலவே நாட்டியமாடி கொன்றார். இதனால் இங்குள்ள பெருமாளுக்கு மாயக்கூத்தன் என்ற திருநாமம். இன்னொரு புராண வரலாறும் உண்டு. வேதசாரன் என்பவருக்குப் பிறந்த கமலாவதி, விஷ்ணுவையே. கணவனாக அடைய விரும்பி தவம் புரிந்தாள். பகவானும் அவளுடைய கோரிக்கையை ஏற்று அவள் தவம் செய்த பாலிகைவனத்திலேயே மணந்து கொண்டார். இங்கே கருடன் உற்சவருக்கு அருகிலேயே எழுந்தருளியிருக்கிறார். நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த திருக்கோயில்.
பரிகாரம்
நம்மால் பணத்தாலோ, உடலாலோ அல்லது கழிவுகள் துணை கொண்டோ எதிரிகளை வெல்ல முடியாமல் போகலாம். ஆனால் பிரார்த்தனையால் எதையும் வெல்ல முடியும் என்பதையும் அரக்கர்களை மனிதர்கள் அளிக்க முடியாது. ஆனால் ஆண்டவனால் தான் அளிக்க முடியும் என்று எடுத்துக் காட்டிய இந்த திருக்குளந்தை மாயக்கூத்தனை மனதார வணங்கினாள் எதிரிகளினால் இருந்த பயம் விலகும். தெய்வ அனுக்கிரகமும் கிடைக்கும். விவாகம் ஆகாதவர்களுக்கு விவாகம் நடக்கும்.