திரு சாளக்ராமம் (முக்திநாத்)
பெருமாளை முன்காலத்தில் பிரார்த்தனை மூலம் நேரடியாக தரிசனம் கண்டனர். இப்பொழுது அப்படிப்பட்ட பாக்கியம் கோடியில் ஒருவருக்கு தான் கிடைக்கிறது. மற்றவர்கள் என்ன செய்தால் பெருமாளின் திருவடியை காணலாம் என்று நினைக்கும் பொழுது பெருமாளுக்கு பிடித்தமான, பெருமாள் உறைந்து கிடப்பதாக என்னும் சாலை கிராமத்தை வைத்து வீட்டில் பூஜை செய்தால் அது பெருமாளுக்கு செய்கின்ற பூஜை ஆகும் என்று பெரியவர்கள் சொல்லி வழிகாட்டி இருக்கிறார்கள். அந்த திருச்சாளக்கிராமம் மிகப்பெரிய புண்ணிய பூமி, இது இந்தியாவில் இல்லை.
பெருமாள் நிரந்தரமாக குடிகொண்டிருக்கும் இந்த புண்ணிய தேசம் நேபாள நாட்டில் உள்ளது. மலையின் மீது அமர்ந்திருக்கிறார். மூலவர் ஸ்ரீ மூர்த்தி அமர்ந்த திருக்கோலம். வடக்கே பார்த்து தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தாயார் ஸ்ரீதேவி நாச்சியார். தீர்த்தம் சக்கர தீர்த்தம் கண்டகி நதி. விமானம் கனக விமானம். பிரம்மா ருத்ர கண்டகிக்கு திருமால் பிரத்யட்சமாகி அருள் பாவித்த புண்ணிய பூமி. பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களாசனம் செய்திருக்கிறார்கள்.
இந்தத் ஸ்தலத்தைப் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. எனினும் நேபாள தலைநகர் காத்மாண்டு நகரில் இருந்து சுமார் இருநூறு மைல் தொலைவில் உள்ள முக்தி நாராயண சேத்திரம் போகும் வழியில் கண்டகி நதிக்கரையில் உள்ளது தான் சாளக்கிராமம் என்பது ஒன்று.
சாளக்கிராமம் என்பது வேறு எதுவும் இல்லை. முக்தி நாராயண சேத்திரம்(முக்திநாத்) நான் என்று வாதிடுவோரும் உண்டு. இந்த முக்தி நாராயண சேத்திரத்தில்யிலிந்துதான். கண்டகி நதியே ஆரம்பமாகிறது. மற்றுமொரு குறிப்பில் காத்மாண்டு தலைநகரிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாமோதர குண்ட் என்பதுதான் சாளக்கிராமம் என்றும் கூறுகிறது.
எது எப்படியோ பகவானுக்குரிய சொரூபமான சங்கு சக்கரத்தோடு கூடிய சாளக்கிராமம் கண்டகி நதிக்கரையில்தான் கிடைக்கிறது. தரிசிக்க வேண்டிய மிக மிக புண்ணியமான ஸ்தலம். நேபாள நாட்டு அனுமதியை பெற்று இயற்கை சூழலுக்கு ஏற்ப நமது பயணம் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது.
பரிகாரம்
திருமாலே ஜானகிராமன் உறுதி குடி கொண்டிருக்கிறார் என்பதால் கஷ்டமோ நஷ்டமோ நாம் அனைவரும் சாலிகிராம புண்ணிய சேர்த்து இடத்திற்குச் செல்ல முடிகிறதோ இல்லையோ தங்கள் வீட்டில் சாளக்கிராமத்தை வைத்து தினமும் பூஜை செய்து வந்தால் போதும். நமது ஜென்மத்திற்கு முக்தி கிடைத்ததாகவே எண்ணிக் கொள்ளலாம். பாவங்கள் கரையும் பகவானது திருவடித் தாமரையின் அனுக்கிரகம் கிடைக்கும்.