திருமூழிக்களம் ஸ்ரீ லட்சுமணப் பெருமாள் கோயில் Thirumoozhikkulam Lakshmana Perumal Temple in Tamil
இராமாயணம் சம்பந்தப் பட்ட சில வரலாற்றுச் செய்திகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு. குறிப்பாக பரதனுக்கு மிகப்பெரிய வரலாறும் மதிப்பும் உண்டு என்பதை திருமூழிக்களம் கோவிலில் காணலாம். பெருமாளின் திவ்ய தரிசனமும், அண்ணன், தம்பிகளுகிடையுள்ள பிரிவுகள் அரை நொடியும் நீங்கி விடும் என்பதற்கு உதாரண பூமியாகவும், திருமூழிக்களம் இன்றைக்கும் விளங்குகிறது.
ஆல்வாய் நகரில் இறங்கி பஸ்ஸில் எறியும் வரலாம். நடந்தும் வரலாம். பாரதப் புழ ஆற்றங்கரைக் கோயில் அருகே உள்ளது இந்த திருக்கோயில். இங்குள்ள திருமால் கோயில்களில் பெருமாள் பெயரோடு கூடவே 'அப்பன்' என்று சேர்த்துக் கொள்ளும் வழக்கம் உண்டு. மூலவர் திருமுழிக் காத்தான் அப்பன். ஸ்ரீ ஸிக்திநாதப் பெருமாள் என்ற பெயரும் உண்டு. நின்ற கோலத்தில் சாதிக்கிறார். தாயார் மதுரவேணி நாச்சியார். தீர்த்தம் பெருங்குளம். சங்க தீர்த்தம் சிற்றாறு. சௌந்தர்ய விமானம். ஹரிதமகரிஷிக்கு பெருமாள் திவ்ய தரிசனம் செய்த புண்ணிய ஸ்தலம்.
இந்தப் பெருமாளை லட்சுமணனாக எண்ணி வணங்குகிறார்கள். மிகவும் புகழ்பெற்ற ஹரித மகரிஷி இந்த தலத்தில் பல வருஷம் தவம் இருந்து, பெருமாளுடைய தரிசனம் கண்டார்! அப்போது அவர் ' அர்ணாச்சரம் தர்மங்களையும், ஐந்து காலங்களில் செய்யவேண்டிய அனுஷ்டானங்களையும் சொல்லித் தரும் ஸ்ரீ ஸுக்தி எனும் மொழியை இயற்றினாராம்! அதனால்தான் இங்குள்ள பெருமாளுக்கு, திருமொழி களதான் என்று பெயர் வந்தது. அதோடு இந்த புண்ணிய ஸ்தலம் திருமொழி களத்தான் என்று மாறியது.
இராமபிரானை அயோத்திக்கு திரும்ப அழைத்து போக வந்த பரதனை - லட்சுமணன் சந்தேகப்பட்டு கொள்ள நினைத்தான். பிறகு தான் தன் தவற்றை உணர்ந்தான். தனது தவறான எண்ணங்களில் பாவத்தை சம்பாதித்து விட்டதாக எண்ணி, லட்சுமணன் எந்த திருமூழிக்களத் தானிடம் அடிபணிந்தான். அப்பொழுது பரதனே இங்கு வந்து. இன்சொல் லட்சுமணனை ஆலிங்கனம் செய்து கொண்ட சம்பவம் இங்குதான் நடந்தது! பரதனும் லக்ஷ்மணனும் சேர்ந்து இந்த ஊர் பெருமாளை வணங்கினார்கள் என்பது வரலாறு. திருமங்கையாழ்வார் நம்மாழ்வார் இந்த கோவிலுக்கு மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.
பரிகாரம்
குடும்பத்திலுள்ள தகராறுகள் உடனடியாக விலகவும், பிளவுபட்ட உறவுகள் மீண்டும் ஒன்று சேரவும், கோபத்தினால் செய்த தவறுகளுக்கெல்லாம் பிராயச்சித்தம் செய்யவும் விசயமாக ஏற்பட்ட கசப்புணர்வு விலகவும், வேத பாடங்களை கற்று முன்னுக்கு வரவும், இறை பக்தி குறையாமல் இருக்கவும், சகலகலா பெருமைகளையும் அடையவும், இந்த திருமுழிக்களப் பெருமாளை தரிசனம் செய்வது அற்புதமான பலனை அளிக்கும்.