திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோயில் Thiruninravur Temple in Tamil

 பகவானுக்கும் பக்தனுக்கும் பக்தி விஷயமாக அடிக்கடி பனிப்போர் கூறுவதுண்டு.  கடைசியில் பக்தனின் பக்திக்கு பகவான் இறங்கி  சேவகனாகவே செயல்பட்டு விடுவார் என்பது திருமாலைப் பற்றி பல வரலாறுகள் உண்டு.  பாசுரம் பாடும் விஷயத்தில் தாயாரிடம் போராடிப் பெற்ற ஒரு விசித்திர சம்பவமும்,  நடந்திருக்கிறது.  இதில் தாயாரை சமாதானப்படுத்த பெருமாள்,  என்ன பாடு பட்டிருக்கிறார் என்பதைப் பார்க்கும் பொழுது திருமால் பெருமை நம்மை  பக்திப்   பெருமிதத்தில் மூழ்க வைத்துவிடுகிறது.

 சென்னைக்கு மேற்கே 29 கிலோமீட்டர் தொலைவில் சஷிர நதிக்கரையில்  உள்ளது   தின்ளனூர்.  ஐந்து நிலை ராஜகோபுரம்.  இரண்டு பிரகாரங்கள் உடைய கோயில் இது மூலவர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள்.  தாயார் "என்னை பெற்ற தாயார்"  தீர்த்தம் வருண புஷ்கரணி.  விமானம் ஸ்ரீனிவாச விமானம்.   இராமபிரானுக்கு  ஒரு தனிக்கோயில் உண்டு.  மதுராந்தகம் ஏரி காத்த ராமர் போல ஆறடி உயரத்தில் சீதா லக்ஷ்மண சமேதராக காட்சியளிக்கிறார்.

 மஹாலட்சுமியின் தந்தையான சமுத்திரராஜன் மகாலட்சுமி பார்க்க நினைத்தார்.  ஆனால் மகாலட்சுமி அவர் கண்ணில் படவே இல்லை.  கடைசியாக பூலோகத்தில் தேடியபொழுது திருநின்றவூரில் திருமகளை கண்டு ஆனந்தத்தில் 'என்னைப் பெற்ற தாயே' -  என்று அழைத்தாராம்.  இதனால் அந்தப் பெயர் இங்குள்ள தாயாருக்கு நிலைத்தது.

 திருமங்கையாழ்வார் இந்த ஊர் தலத்திற்கு வந்த போது இறைவன் திருமங்கையாழ்வாரை கவனிக்க தவறிவிட்டார்.  ஆழ்வார் சிறிது நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு -  பாசுரம் பாடாமலே கிளம்பிவிட்டார்.  ஆழ்வார் சென்ற பிறகுதான் பெருமாளுக்கும் தாயாருக்கும் ஆழ்வார் காத்திருந்து சென்றுவிட்டது தெரியவந்தது.  உடனே ஆழ்வாரை தேடி பெருமாள்  மாமல்லபுரம் சென்றார்.  அங்கு ஆழ்வாரை கண்டார்.  பெருமாள் தன்னை தேடி வந்திருப்பதைக் கண்டு திருமங்கை ஆழ்வார் ஒரே ஒரு பாசுரம் பாடி கொடுத்தார்.  பெருமாள் அந்த ஒரு  பாசுரத்தை எடுத்துக்கொண்டு  தாயாரிடம் கொடுத்தபோது  ஒரே ஒரு பாசுரம் தானா?  என்று கோபத்தோடு பெருமாளிடம் கேட்க,  பகவான் மறுபடியும் ஆழ்வார் தேடிக் கொண்டு போனார்.

 திருமங்கையாழ்வார் அப்பொழுது திருக்கண்ண மங்கையில் இருந்தார்.  அவரிடம் பெருமாள் ' தாயாரின் கோபத்தை சொல்லியபொழுது',  ஆழ்வார் இன்னொரு பாசுரம் பாடி அதை பெருமானிடம் கொடுத்தார்.  தாயாரிடம் அந்த இரண்டாவது  பாசுரத்தை பெருமாள் கொடுத்த பின்புதான் தாயார் மகிழ்ச்சி  அடைந்தாராம்.

  பரிகாரம்

 காணாமல் போன பெருமாளைக் கண்டு  பிடிப்பதற்கும் -  ஆட்களை தேடி பிடிப்பதற்கும்,  அநியாயமாக  சொத்தை பிடுங்கி கொண்டவர்களிடமிருந்து இழந்த சொத்தை முறைப்படி  மீட்பதற்கும் இழந்த பதவியை மீண்டும் பெறுவதற்கும்,  பதவி உயர்வு பெறுவதற்கும் பகவானது அருட்பார்வை நம் மீது   படர்வதற்கும் வேலைப் கிடைப்பதற்கும்  வியாபாரத்தில் இழந்த நஷ்டத்தை மீண்டும் லாபமாக மாற்றுவதற்கும் பெரியவர்கள் செய்யாமல் போன பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கும் தின்னனூர் வந்து ஸ்ரீ பக்தவச்சலப் பெருமாளை மனமார பிரார்த்தனை செய்தால் நல்ல பலனை உடனே அடையலாம்.

Quickly Find What You Are Looking For