திருப்பாற்கடல்

எத்தனையோ பேர்களுக்கு பிரார்த்தனையின் காரணமாக பகவான் நேரடியாக தோன்றி,  தரிசனம் கொடுத்திருக்கிறார் என்று  படித்திருக்கிறோம்.  நமக்கும் பகவான் அப்படி ஒரு தரிசனம் தர மாட்டாரா?  என்று நினைப்பதும் உண்டு.  கண்டிப்பாக தருவார். ஆனால் அதற்கு இந்த பூலோகத்தில் இதற்கு முன்பு குறிப்பிட்ட அத்தனை திவ்ய தேசங்களுக்கும் சென்று இருக்க வேண்டும்.  அப்படி சென்றவர்களுக்கு பகவான் திருப்பாற்கடலில் நிச்சயம் தரிசனம் தருவார் என்பது நம்பிக்கை!

 திருப்பாற்கடலில் சென்றடைய இந்த தூல சரித்திரத்தோடு செல்ல முடியாது.  சூட்சம சரீரத்தோடு தான் செல்ல வேண்டும் என்பது நியதி!  அங்கு பகவான் மூலவர் கோலத்தில் க்ஷீராப்தி  நாதனாக வீற்றிருப்பார்.  ஆதிசேஷன் மடியில் சயனம்,  தெற்கே பார்த்து தரிசனம் தருவார்.  தாயார் கடல் மகள் நாச்சியார்.   ஸ்ரீதேவியும் இருப்பார்.  தீர்த்தம் அம்ருத தீர்த்தம், திருப்பாற்கடல்.  விமானம் அஷ்டாங்க விமானம்.  பிரம்மா முதலிய அத்தனை பேருக்கும் தினமும் நேர் முக தரிசனம்  தருவார்.  இந்த திருப்பாற்கடல் பெருமாளை பெரியாழ்வார்,  ஆண்டாள்,  குலசேகர ஆழ்வார்,  திருமழிசை ஆழ்வார்,  பொய்கையாழ்வார்,  பூதத்தாழ்வார், பேயாழ்வார்,  நம்மாழ்வார் ஆகியோர் தங்களது பாசுரத்தால் மங்களாசனம் செய்திருக்கிறார்கள்.

 கருணை சுபிட்சமாக,  காருண்யத்தின் அடையாளமாக ஸ்ரீதேவி பூதேவி  சமிதம் சுற்றிலும் தேவர்கள் புடைசூழ வேத கோஷங்களும் மங்கள  நாங்களும் இனிமையாக கேட்டுக்கொண்டு செய்த புண்ணியங்களுக்கு எல்லாம் மோட்சத்தை கொடுக்க பகவான் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார் என்று ஞானிகளும்,  முனிவர்களும் ஆசார்ய புருஷர்களும் தங்களது பகவானின் பார்க்கடல்  சயன தரிசனத்தை ஞானக்  கண்களினாலும்  சூட்சும சரீரத்தினாலும் கண்டு மெய்மறந்து பாடல்களினால் பாசுரங்களினால் நமக்கு எடுத்துக் காட்டி இருக்கிறார்கள்.

 நாம் செய்த புண்ணியங்கள் நமக்கு ஸ்தூல சரீரம் சென்றபின்பு சூட்சம சரீரம் அடைந்தவுடன் இந்த திருப்பாற்கடலைக் காண வைக்கும்.  பகவான் தரிசனம்  கண்டுவிட்டாள் அடுத்து நமக்கு இந்த மண்ணுலகில் மறுபிறவி என்பதே இருக்காது.  நேராக நிரந்தரமாக வைகுண்டம் தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

Quickly Find What You Are Looking For