திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் Tiruvekkaa Temple in Tamil

 திருமாலுக்கு காஞ்சிபுர ஸ்தலம் மிகவும் பிடித்தமான ஸ்தலம் என்று சொன்னால் அது மிகை இல்லை.  பக்தர்களின் குறைகளை,  பிரார்த்தனை மூலம் அறிந்து உதவும் பரோபகாரியான  திருமால்.  காஞ்சிபுரத்தில் உள்ள இன்னொரு திவ்யதேசமான திருவெட்காவில்  அமர்ந்து சில அறிய நற்காரியங்களைச் செய்து எல்லோரையும் வியக்க வைத்திருக்கிறார்.  இங்கு நடந்த பல சம்பவங்கள்,  பகவான் பக்தர்கள் மேல் எவ்வளவு கருணை கொண்டு குழந்தையாய் ஓடி வந்திருக்கிறார்  என்பதை நினைக்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது.

 காஞ்சிபுரம் ரெங்கசாமி  குளத்திற்கு  வடக்ககே  4 ஏக்கர் நிலப்பரப்பில் 5 நிலை இராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்களுடன் உள்ள கோயில் தான்   திருவெட்கா.  மூலவர் ஸ்ரீ சொன்ன வண்ணஞ் செய்த பெருமாள்.  விமானம் வேதசார விமானம்.  புஜங்க சயனத்தில் திருக்கோலம்.  பாதத்தின் அருகில் சரஸ்வதி தேவி. தாயார் கோமளவல்லித் தாயார்.  தீர்த்தம் பொய்கை புஷ்கரணி.

 பிரம்மதேவன் செய்யும் யாகத்தை அழிக்க சரஸ்வதி தேவி வேகவதியாக மாறி  படுபயங்கரமாக வரும் பொழுது  பிரம்மா  திருமாலை வேண்டினார்.   திருமாலும் உதவி செய்ய ஆசைப்பட்டு வேதவதியின் வெள்ளத்தைத் தடுக்க,  வேகவதி ஆற்றின் குறுக்கே  அணை போல்  சயணித்தார்.  இதனால் சரஸ்வதி தேவி தான் செய்த செயலுக்காக வெட்கமுற்று தலை குனிந்தாள்.  இதனால் இந்த தளத்திற்கு திருவெஃகா என்று பெயர் வழங்கலாயிற்று.  தன்னுடைய சீடன்  கணிகண்ணன்  என்பவனுக்காக திருமழிசை ஆழ்வார் இந்த ஊரை விட்டு புறப்பட நேர்ந்தது.  அப்பொழுது  இந்த தலத்தில்பள்ளி  கொண்டிருந்த  பெருமாளையும் தன்னுடன்  அழைக்க,   பெருமாளும் பாம்பணையை சுருட்டிகொண்டு கிளம்பினார்.  இதனால்  என் நகரம் பின்னர் பல்வேறு இயற்கை சோதனைகளுக்கு உள்ளாயிற்று.  யாரும் முன்வந்து காப்பாற்றவில்லை.  இதை அறிந்த காஞ்சி மன்னன் கோரிக்கையை ஏற்று அவர்களும் காஞ்சிபுரத்திற்கு திரும்பினர்.  பக்தனே மீண்டும் காஞ்சிபுரத்திற்கு திரும்பும் பொழுது பகவான்  திருமாலும் அவர்களுடன் மீண்டும் திரும்பினார்.  சொன்னதை  செய்ததால் இந்த ஊர் பெருமாளுக்கு சொல் வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயரும் உண்டு.

பொய்கை,  பேயாழ்வார்,  திருமழிசை ஆழ்வார்,  திருமங்கையாழ்வார்,  நம்மாழ்வார் இந்த பெருமாளுக்கு மங்களாசனம் செய்திருக்கிறார்கள்.

 பரிகாரம்

  பெருமாள் ஒரு குழந்தையைப் போல் பழகும் உள்ளம் கொண்டவர்.  தனது அடியாட்கள் பக்தியின் பரவசத்தால் என்ன கட்டளை இட்டாலும் அதை மறுவினாடியே செய்து காட்டுவார்.  எனவே பகவானிடம் உரிமையாக நாம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம்.  சண்டை போடலாம்.  கோபித்துக் கொள்ளலாம்.  ஆனால் பகவான் ஒரு போதும் பக்தர்கள் மீது கோபித்துக் கொள்ளவே மாட்டார் என்பதால் நமக்கு வேண்டியவற்றை உரிமையோடு கேட்கின்ற ஸ்தலம் கஷ்டப்படும் பொழுது மனம் உருகி  கூப்பிட்டாள் மங்கலமாக வந்து அருள் தருவார்.  வேண்டிய வரங்களை கேட்டு வாங்கக் கூடிய ஒப்பற்ற புனிததலம் இது.

Quickly Find What You Are Looking For