திருப்பரமபதம்

 யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காத பதவி என்று ஒன்று இருக்கும் என்றால் அது திருப்பரமபதம் தான்.  இது பூலோகத்தில் இல்லை.  எம்பெருமான் எப்பொழுதும் நித்திய வாசம் செய்கிற புண்ணியமான  ஸ்தலம்.  இங்குதான்  ஜீவாத்மாக்கள் பகவானை போலவே உருவம் கொண்டு,  பகவானுக்கு சதா சர்வ காலமும் கைங்கரியம் செய்து கொண்டிருப்பார்கள்.  திருப்பாற்கடலை தரிசனம் செய்தவர்களுக்கு எல்லாம் நிச்சயம் திரு பரமபதத்தில் இடம் உண்டு.  பகவானே  இந்த அற்புதமான காரியத்தைச் செய்கிறார்.

 பரமாத்மா எப்படி இருக்கும் என்பதை முன்னோர்கள் தங்கள் கருணையில் விவரித்திருக்கிறார்கள்.  பெருமாள் மூலவரும்  அவரே உற்சவரும்  அவரே.  வீற்றிருந்த திருக்கோலத்தில் தெற்கு திருமுக மண்டலம் ஆக தரிசனம் கொடுத்துக் கொண்டிருப்பார்.  தாயார் பெரிய பிராட்டியார்.  தீர்த்தம்   விரஜா நதி,  ஆயிரமத புஷ்கரணி.  விமானம் அனந்தாங்க விமானம்.  தேவலோகத்திலுள்ள அத்தனை பேர்களுக்கும், புண்ணியம் செய்து மோட்சம் அடைந்த பக்தர்களுக்கும் நித்திய தரிசனம் கொடுத்துக் கொண்டிருப்பார்.  காணக்கிடைக்காத தரிசனம்.

 இந்த பரமபதம் வைணவர்களின் மோட்ச ஸ்தலம்.  இந்த இடத்தில் நுழைபவர்கள் யாருக்கும் மறுபிறவி கிடையாது.  திரும்பி பூலோகத்திற்கு வரவும் முடியாது.  இதைத்  'திருநாடு'  என்றும் சுடரொளியாய் என்ற தன்னுடைச்  சோறி  என்றும் முன்னோர்கள் சொல்லி  வைத்திருக்கிறார்கள்.

 106 திவ்ய தேசங்களை கண் கூடாகத்  தரிசித்துவிட்டு.  திரும்பி ஸ்தூல சரீரத்தை வீட்டு சூட்சம சரீரத்தோடு வைகுண்டத்திற்கு வரும் பக்தர்களை பகவானே வாசலில் நின்று வரவேற்று தன்னுடைய பரமபத வேதத்தில் அவர்களை நிரந்தரமாக்கி மகிழ்வித்து கொண்டிருப்பான் என்று ஸ்ரீமத் ராமானுஜர் சொல்லி இருக்கிறார்.  இந்த பாக்கியம் கிட்ட நாம் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.  இதைவிட மிக உயர்ந்த பதவி வேறு எதுவும் எவ்வுலகத்திலும் இல்லை.   கிடைத்ததற்கரிய இந்தப் பதவியைப் பெற பகவான் திரு நாமத்தை சதா சர்வகாலமும் மறக்காமல் சொல்லி எல்லோருக்கும் நன்மைகளை செய்து பிறந்த மனிதகுல பிறப்பை எண்ணி மகிழ்ந்து  பெருமாளின் திருவடித் தாமரையில் நம் முகத்தை ஆனந்த கண்ணீரோடு பதித்து நல்லெண்ணத்தோடு வாழ்வோம்!

 

Quickly Find What You Are Looking For