திருவிச்சிக்கோடு பெருமாள் கோயில்

மகான்கள் தவம் செய்வதற்கு பெரும்பாலும் காட்டில் அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.  கேரளாவில் இயற்கை எழிலும் உண்டு,  அமைதியாக தவம் புரிய அருமையான காடுகளும் உண்டு.  இங்குள்ள திருவித்துவக்கோடு கோயிலின் சூழ்நிலை  எப்பேர்பட்டவர்க்கும்  மிகவும் பிடித்தமான,  ரம்மியமான சூழ்நிலையாகும்.  எனவேதான் பஞ்ச பாண்டவர்களும் இங்கு வந்து தவம் புரிந்து இருக்கின்றனர்  என்பது ஆச்சரியம் எதுவுமில்லை.

  ஷோரனூர் -  கள்ளிக்கோட்டை ரயில்வே பாதையில் ' பட்டாம்பி'  என்னும் ஸதலம் உள்ளது.  இந்த இடத்திலிருந்து இரண்டு  மைல் அல்லது நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவித்துவக்கோடு. ஷோரனூர்,  குருவாயூர் போகும் பஸ்ஸில் சென்றார் 16 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தக் கோயிலை அடையலாம்.   பட்டாம்பி  ரயில் நிலையத்திலிருந்து அருகே இருக்கும் பாரதப்புழை  ஆற்றின் குறுக்கே கடந்தாலும் இந்தக் கோயில் வந்து விடும்.  மூலவர்,  உய்யவந்த பெருமாள் அபயப்பிரதன்   என்ற பெயரும் உண்டு,  நின்ற திருக்கோலம்.  தெற்கே பார்த்து தரிசனம்.  தாயா வித்துவக்கோட்டு வல்லி  பத்மபாணி நாச்சியார்.  தீர்த்தம் சக்கர தீர்த்தம்.  விமானம்    தத்வகாஞ்சன விமானம்.

 கோயிலில் சிவபெருமான் சன்னதியும் உண்டு.  பெருமாள் சன்னதியும் உண்டு.  அம்பரீஷன்  என்னும் பக்தனுக்கு பெருமாள் முக்தி கொடுத்த புண்ணிய ஸ்தலம்.  பகவான் நான்கு வடிவங்களாக இங்கு எழுந்தருளி இருக்கிறார்.  நடுவில் உள்ள மூர்த்தியை  தர்மபுத்திரரும்,   இடப்பக்கம் உள்ள மூர்த்தியை  பீமசேனனும்,   வலப்புறத்தில் உள்ள பெருமாளே ஸஹதேவனும்,  மேற்கில் இருக்கும் பெருமாளே அர்ஜுனனும் பூஜித்தனர்.  நகுலனும் வலப் புறத்தில் உள்ள பெருமானை வணங்கியதாக புராண வரலாறு.

 கேரளாவிலுள்ள  இந்தக் கோயிலில் பஞ்சபாண்டவர் ஒன்றாக சேர்ந்து தவமிருந்து பெருமாள்  சேவித்ததால்,  புண்ணிய ஸ்தலமாக மாறிவிட்டது.  குலசேகர ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

பரிகாரம்

 மனிதனாக பிறந்தால்  தெரிந்தோ,   தெரியாமலோ ஏதோ ஒரு பாவத்தை தினமும் செய்ய வேண்டி இருக்கிறது.  இப்படி செய்கின்ற பாவம் திடீரென்று ஒன்று சேர்ந்து நமது எதிர்காலத்தை  கவிழ்த்துவிடும்.  அப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால் பஞ்சபாண்டவர்கள் தவமிருந்த பெருமாளை வணங்கிய திருவித்துவக்கோடு புண்ணிய தளத்திற்கு கண்டிப்பாக நாம் சென்று வருவது நல்லது.

Quickly Find What You Are Looking For