திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில் Vijayaraghava Perumal Temple in Tamil

 மனிதர்களுக்கு மட்டும்தான் பகவான் இரங்குவாரா  என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.  மனிதர்கள் இறைவனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்வதால் அது பகவானுக்கு கேட்கிறது.  மற்றவர்கள் எப்படி பிரார்த்தனை செய்ய முடியும்?  என்ற சந்தேகத்தை இராமபிரான் மூலம் தீர்த்துவைத்த சம்பவம் ஒன்று  நடந்திருக்கிறது.  அப்படிப்பட்ட இந்த புண்ணிய ஷேத்திரம் ' திருப்புட்குழி'  என்னும் பெயருடையது.  காஞ்சிபுரத்திலிருந்து வடமேற்காக 12 கிலோ மீட்டர் தூரத்தில்,  வேகவதி  நதிக்கரையோரம் சத்திய விரத  ஷேத்திரம். மூன்று  நிலைகொண்ட இராஜகோபுரம்,  இரண்டு பிரகாரங்களுடைய  இந்தக் கோயிலின் மூலவர் விஜயராகவ பெருமாள்.  தாயார் ஸ்ரீ மரகத வல்லி தாயார்.  விமானம் விஜயகோடி,  தீர்த்தம் ஜடாயு தீர்த்தம்.  கல்வெட்டுக்களில் இந்த கோயிலுக்கு போரேற்று பெருமாள்  கோவில் என்று குறிப்பிட்டிருக்கிறது.

 சீதையை  இராவணன்  சிறையெடுத்துச் சென்றபோது ராவணனுடன் சண்டை போட்டு,  தன் இறக்கையை இறந்த கழுகு அரசனான ஜடாயு இந்த இடத்தில் வீழ்ந்து கிடந்தபோது,  இராமபிரான் ஜடாயுவை பார்க்க நேரிட்டது.  இராமனிடம் எல்லா விவரங்களையும் சொல்லி உயிர் நீத்த' ஜடாயு'  இராமபிரான் கையாலேயே அந்திம கடன் செய்கின்ற பாக்கியத்தை அடைந்தது.  இதனால் ஜடாயுவுக்கு  மோட்சம் கிடைத்தது.  அதனால் தான் இந்த தலத்திற்கு திருப்புட்குழி என்று பெயர் வந்தது.  ஜடாயு என்று  இராமபிரானுக்கு ஏற்படுத்திய தீர்த்தம்தான் கோயிலுக்கு எதிரே உள்ளது!  மூலவர் தமது தொடையில் ஜடாயுவை வைத்துக்கொண்டு இருக்க திருமகளும்  பூமிதேவியும்  இடம் வலமாறி காட்சி கொடுக்கின்றனர்.  பெருமாளின் திருவீதிப் புறப்பாடு நடக்கும் பொழுதெல்லாம் ஜடாயுவுக்கும் அதே மரியாதை தரப்படும்.

 ஜடாயுகென்று  ஒரு தனி சன்னதி  இங்குண்டு.  திருமங்கையாழ்வார் ஸ்ரீ ராமானுஜர்,  ஸ்ரீ மணவாள மாமுனிகள் பலமுறை  இத்தலத்தில்  மங்களாசாசனம் செய்து இருக்கிறார்கள்.  நம்பிள்ளையின் சீடர் பின்பழகிய பெருமாள் ஜி எஸ் அவதரித்த ஸ்தலம்  இங்குள்ள கல் குதிரை வாகனம் உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புகளைக் கொண்டது.

 பரிகாரம்

 குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இத்தலத்திற்கு வந்து ஜடாயு தீர்த்தத்தில் நீராடி -  இரவில்,  வருத்த  பயிரை மடியில் கட்டிக்கொண்டு சன்னதியில் படுக்க மறுநாள் காலையில் அப்பயிறு  முளைத்திருந்தால் அவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டு.  மூதாதையர்களுக்குத் செய்யவேண்டிய கடன் ஏதாவது  பாக்கி இருந்தால்  அதை இத்தளத்தில் செய்யலாம்.  குடும்ப பிரச்சனை தாம்பத்திய பிரச்சனை சொத்து சுகம் சம்பந்தமான பிரச்சனை கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தால்  அந்தப் பிரச்சனை ஆகியவை சாதகமாக மாறி சௌபாக்கியம் பெறுவதற்கு இத்தலம்  வேண்டிய வாய்ப்பினை உருவாக்கும்.  மனம் நிம்மதி அடைய இத்தல பெருமாளை வணங்குவது நல்லது.

Quickly Find What You Are Looking For