திருக்கடிகை சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் Thirukkadigai Temple in Tamil

 மானிடனாக நாம் இப்பிறவியை  எடுத்ததற்கு காரணமே சதா சர்வ காலம் இறைவனது திருநாமத்தைச் சொல்லியபடி மறு பிறவி என்னும் தீராத நோய்க்கு ஆளாகக் கூடாது என்பதுதான்.  எப்பொழுதும் பெருமாளை தியானம் செய்வது சந்தோசம் தான் என்றாலும் மற்ற பொறுப்புக்களையும் பார்க்கவேண்டுமே அதற்கு ஏதாவது வழியை பெருமாள் காட்ட மாட்டாரா?  என்று எங்கும் பக்தர்கள்  திருக்கடிகை சென்று  பெருமாளைத் தரிசனம்  செய்தால் போதும்.  பகவானை நம் பக்கத்தில் நின்று அருள்பாலிப்பதை கண்டு சந்தோஷப்படலாம்.

 அரக்கோணத்திலிருந்து மேற்கு 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது,  சோளிங்கபுரம்.  இதற்கு  திருக்கடிகை,  கடிகாசலம்,  சோளிங்கபுரம் என்று வேறு பெயர்களும் உண்டு.  பழைய பெயர் ' கொண்ட பாளையம்'.  750 அடி உயரமுள்ள மலை.  1305 படிகள்,  ஏழு மண்டபங்கள் கடந்து மலையை அடையலாம்.  வடக்கு நோக்கிய நிலையில் 5 நிலை இராஜகோபுரம் இரண்டு பிரகாரங்கள்.  மூலவர் ஹேமா கோடி விமானத்தின்  கீழ் இருக்கும் யோக நரசிம்மர்,  சிம்மமுகம்.  உற்சவர் பக்தவத்சலப் பெருமாள்.  தாயார் அமிர்தவல்லி.  உற்சவத்  தாயார் சுதாவல்லி.  தீர்த்தம் மலையடி வாரத்தில் உள்ள பிரம்ம  தீர்த்தம்.  

 தவ முனிவர்களான அத்திரி,  காஷ்யபர்,  வசிஷ்டர்,  ஜாமதக்னி,  கௌதமர்,  பரத்வாஜர்,  விஸ்வாமித்ரர்   என்னும் சப்தரிஷிகளும் இத்தலத்தில் தவமிருந்து பெருமானின் நரசிம்ம அவதாரத்தைக் காண ஆசைப்பட்டனர்.  அதேசமயம்   அனுமானும்,  ஸ்ரீராம அவதாரம் முடிந்து ஸ்ரீராமன் வைகுண்டத்திற்கு செல்லும்பொழுது தானும் உடன் வருவதாகக்  கூறியதால் அவரும் இந்த தலத்தில் வந்து காத்திருந்தார்.

 இத்தலத்தில்  தவம் செய்து கொண்டிருந்த சப்த ரிஷிகளுக்கு காலன்,  கேயன்  என்னும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதை கண்டு அனுமன் ஸ்ரீராமனிடம் பிரார்த்தனை செய்தார்.  ஸ்ரீராமபிரான் தன்னுடைய சங்கு சக்கரத்தை அனுமானிடம் கொடுத்து இதைக் கொண்டு அரக்கர்களை அழிக்க உத்தரவிட்டார்.  அனுமானும் அப்படியே செய்தார்.  காலன்,  கேயன் என்ற அரக்கர்கள் மாண்டனர். சப்தரிஷிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  இதைக் கண்டு அங்கு வந்த இறைவன்,  தனது நரசிம்ம அவதாரத்தை காட்சியாக தந்தார்.  சப்தரிஷிகள் மட்டுமின்றி  அனுமானுக்கும் இந்த நரசிம்ம மூர்த்தியின் தரிசனம் கிடைத்தது.  இதைக் கண்டு பரவசம் அடைந்த அனுமன் சங்கு சக்கரத்துடன் பக்கத்தில் உள்ள சிறிய மலையில் யோக நிலையில் அமர்ந்தார்.

 அனுமன் நான்கு கைகளுடன் யோக நிலையில் அமர்ந்த மலை 350 அடி உயரம் கொண்டது.  மலை ஏறிச் செல்ல  406 படிகள் உண்டு.  150 அடி அகலம் 250 அடி நீளம் கொண்ட 3 நிலை இராஜகோபுரம் உள்ளது.  மூலவர் யோக ஆஞ்சநேயர்,  மலை அடிவாரத்தில் பாண்டவ தீர்த்தம்,  ராம தீர்த்தம் சக்கர தீர்த்தம் உள்ளது.  துர்வாச முனிவர் சாபத்தால் பிடிக்கப்பட்ட புதனுக்கு சாபம் நீங்கிய ஸ்தலம்.  ஒரு கடிகை அதாவது 24 நிமிடம் இங்கு தங்கினால் மோட்சம் உண்டு என்பது ஐதீகம்.  திருமங்கை ஆழ்வாரும்  பேயாழ்வாரும்  மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.

 பரிகாரம்

 துர்தேவதைகளின் ஆர் பிடிக்கப்பட்ட பேய் பிசாசு சூனியம் போன்றவைகள் இந்த ஸ்தல பெருமாளை வழிபட்டால் விலகும்.  பேய்கள் மூலம் சித்திரவதை படுகிறவர்கள் தினமும் அடிவாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி மலை மீது ஏறி பிரார்த்தனை செய்பவரின் அந்த நோய்கள் அனைத்தும் விலகும் என்பது மிகுந்த நம்பிக்கை.

Quickly Find What You Are Looking For