திருக்காழிச்சீராம விண்ணகரம் பெருமாள் கோயில் Kazheesirama Vinnagaram Temple in Tamil
சீர்காழிக்கு பெருமை தரும் வகையில் நகரின் நடுவே அமைந்த அழகு மிக்க கோயில் சீர்காழிச் சீராம விண்ணகரம் இதற்கு க பாடலீகவனம், உத்தம சேத்திரம் என்று வேறு சிறப்பான பெயர்களும் உண்டு. உப்பனாற்றின் வடகரை பகுதிக்கும். கொள்ளிடம் ஆற்றின் தென்கரை பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில்.
மூன்று நிலை இராஜகோபுரத்துடன், இரண்டு பிரகாரம். மூலவர் தாடாளன். நின்ற திருக்கோலம். தாயார் திரிலோக நாயகி. உற்சவர் திருவிக்கிரமன். தாயார் மட்டவிழ்குழலி. தீர்த்தம் சங்க புஷ்கரணி, சக்கரதீர்த்தம். விமானம் புஷ்கலாவர்த்த விமானம். மணவாள மாமுனிகள் இந்தக் கோயிலைப் பற்றி பதிகம் பாடி இருக்கிறார். அஷ்டகோண மகரிஷிக்கு பெருமாள் தரிசனம் தந்த காட்சி இந்தத் ஸதலத்தில் நடந்தது.
பெரிய முனிவர் என்று அழைக்கப்படும் உரோமச முனிவர். பெருமாளிடம், "இடது காலால் முன்பு விண்ணை அளந்தீர்களே. அந்த அற்புதக் காட்சியை எனக்கு இப்பொழுது காட்டவேண்டும்" என்று ஆசைப்பட்டார். பெருமாளும், முனிவரின் வேண்டுகோளை பூர்த்தி செய்ய இடது காலைத் தூக்கி விண்ணை அளந்து காட்டினார். இதேபோல் பிரம்ம தேவனுக்கு தன் ஆயுளைப் பற்றி தர்மம் கொண்ட பொழுது ரோமச முனிவர்' உன் ஆயுளும் என் ஒரு ரோமமும் சமம்' என்று சொல்லி பிரம்மனுடைய கர்வத்தை அடக்கிய ஸதலம் இது.
ஒரு சமயம் திருஞான சம்பந்தருக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் கடும் வாதம் ஏற்பட்டது. இந்த வாதத்தில் திருமங்கையாழ்வார் வெற்றி பெற்றார். அதற்குப் பரிசாக சம்மந்தர் தன்னுடைய வேலை பரிசாகக் கொடுத்தார். இதனால் திருமங்கையாழ்வாருக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற விருதும் கிடைத்த ஸதலம் இது. மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
பரிகாரம்
அதிகார துஷ்பிரயோகத்தால் கஷ்டப்படுகிறவர்கள், அடிமையாக தொழிற்சாலைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த பெருமாளை நினைத்து காணிக்கை அனுப்பி வைத்தாள் அவர்களுக்கு மறுபடி சுதந்திரமான வாழ்க்கை அமையும். போட்டியில் தோற்று கொண்டிருப்பவர்கள், செய்து கொண்ட வியாபார ஒப்பந்தத்தை சரிவர செயல்பட முடியாமல் மாட்டிக் கொண்டிருப்பவர்கள், உறவினர்களது பகையில்இருந்து மீள வேண்டும் என்று துடிப்பவர்கள் அனைவரும் இங்கு வந்து புஷ்கரணியில் நீராடி பெருமாளை சேவித்தால் நினைத்ததை சீக்கிரமே அடையலாம். எஞ்சிய நாட்களை மன நிம்மதியோடு பறிக்கலாம்.