திருவாய்பாடி (கோகுலம்)
கிருஷ்ணர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். மதுராவிலுள்ள சிறைச்சாலையில் கிருஷ்ணன் பிறந்தாலும் அவர் வளர்ந்ததெல்லாம் ஆயர்பாடியில் தான் என்பதால் கிருஷ்ணனை முழுமையாக அனுபவித்து பார்த்தவர்கள் இங்குதான் அதிகம். இதற்கு மற்றுமொரு பெயர் கோகுல் அல்லது கோகுலம் என்று சொல்வதுண்டு.
மதுரா நகரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவாய்பாடி. யமுனை நதியை கடந்து அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் சென்றார் சென்றாலும் திருவாய்பாடி ஊர் வரும். மூலவர் மோகனகிருஷ்ணன். நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம். தாயார் ருக்மணி சத்தியபாமா காட்டினார்கள். தீர்த்தம் யமுனா நதி விமானம் ஹேம கூட விமானம். நந்தகோபருக்கு கிருஷ்ணர் நேரடியாக தரிசனம் தந்த இடம்.
ஆழ்வார்கள் பாடிய கோவில்களும் உருவச்சிலைகளும் இப்போது இல்லை ஊரான கோகுல் என்று ஒன்றுண்டு. கோயில் வாசலில் யமுனை ஓடுகிறது நந்தகோபர், யசோதா பலராமர் விக்ரகங்களுக்கு அருகில் குழந்தையாக ஒரு மரத்தடியில் வைத்து இருக்கிறார்கள். மற்றபடி பஞ்சலோக விக்ரகங்கள் எதுவும் இல்லை. பெரியாழ்வார் ஆண்டாள் திருமங்கையாழ்வார் இந்த திருவாய் பாடி கோயிலுக்கு மங்களாசனம் செய்திருக்கிறார்கள்.
பரிகாரம்
குழந்தை இல்லாதவர்களும் நோயினால் வறுமையினால் அவதிப்படும் குழந்தைகளை பெற்றவர்களும் இந்த திருவாய்ப்பாடி கோயிலுக்கு ஒரு தடவை வந்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை சேவித்தார் அவர்களுடைய புத்திர பாக்கியம் வலுவடையும். குழந்தைகளும் நோய்நொடி வறுமை பிணி இல்லாமல் வாழ்வாங்கு வாழ்வார்கள். ஊனமுற்ற குழந்தைகள் பிறக்காது அப்படியே ஊனமுற்றவராக பிறந்துவிட்டால் வெகுவிரைவில் மற்றவர்களைப் போல் இயல்பான நிலைக்கு மாறவும் ஸ்ரீகிருஷ்ணர் அனுக்கிரகம் செய்வார்.