திருவல்லவாழ் ஸ்ரீவல்லப பெருமாள் கோயில் Sree Vallabha Temple in Tamil
தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்கள் திருமால் கோயிலால் புனிதத் ஸ்தலமாக மாறி இருப்பதை போல கேரளாவிலும் பல புண்ணியத் ஸ்தலங்கள் உண்டு. வைணவ சம்பிரதாயங்களின் அருமை, பெருமையோடு அவைகள் ஏன் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது என்பதை அசைக்க முடியாத ஆதாரங்களோடு திருவல்லவாழ் என்னுமிடத்தில் இன்றைக்கும் காணலாம்.
கொல்லம் எர்ணாகுளம் ரயில் பாதையில் திருவில்லா ரயில் நிலையம் உண்டு. இங்கிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திருவல்லவாழ் பெருமாள் கோயில். இயற்கை சூழ்நிலைகளால் சூழப்பட்ட இந்த திருக்கோயிலில் மூலவர் கோலப்பிரான், திருவாழ்மார்பன், ஸ்ரீவல்லபன் என்ற வேறு பெயர்களும் உண்டு. தாயார் செல்வத்திக் கொழுந்து நாச்சியார். வாத்ய தேவி என்ற வேறு பெயரும் தாயாருக்கு உண்டு. தீர்த்தம் கண்டாகர்ண தீர்த்தம், பம்பா நதி. விமானம் சதுரங்க போல விமானம். சிவபக்தனான கண்டாகர்ணனுக்கு பகவான் பிரத்யட்சம் என்பது சிறப்பு.
கோயிலில் சுதர்சன சக்கரம் மிகப்பெரிய அளவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. துவாஜ ஸ்தம்பம் முழுவதும் தங்கத்தினால் வேயப்பட்டு இருக்கிறது. பெண்கள் அனைவரும் சன்னதிக்குள் வர முடியாது. வெளியிலிருந்துதான் செய்விக்க வேண்டும். இந்த ஸ்தலத்தில் சங்கர மங்கலதம்மை என்ற பக்தை ஏகாதசி விரதம் இருந்து துவாதசி அன்று ஒரு பிரம்மச்சாரி அன்னதானம் செய்து வந்தார். அந்த ஊரில் இருந்த தேவகாசுரன் என்பவன் அங்க பதிவிரதை பக்திக்கு தடை செய்து வந்தான். அதனால் கோபமடைந்த திருமால் விற்கும் பிரம்மச்சாரி வேடத்தில் இந்த தேவகாசுரனைக் கொன்று அந்த பதிவிரதையும் அவரது பக்தியையும் மெச்சியதாக வரலாறு.
பகவானுடைய திருமார்பில் இருக்கும் நகைகள் பகவானது மார்பை மறைப்பதால் சங்கரமங்களதன்மை பிரார்த்தனை செய்ய, பகவான் தன் நகைகளை கழற்றி மார்புப் பகுதியை காட்டினார். அன்று முதல் இன்று வரை இங்குள்ள பகவான் திறந்த மார்புடன் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்து இருக்கிறார்கள்.
பரிகாரம்
ஏழை என்றாலும், வசதியுள்ளவர் என்றாலும் பகவானிடம் அளவு கடந்த பக்தி வைத்துவிட்டால் பகவான் அதன் பிறகு கருணை காட்டுவார் என்பதற்கு அடையாளமாக திருவில்லா கோலப்பிரானை சொல்லலாம். கஷ்டம் விலக, தெய்வ அருள் அல்லது மோட்சம் கிடைக்க தொழிலில் நல்ல மேன்மை ஏற்பட, விரோதி பயம் விலக. குழந்தைகளால் அனுகூலம் தொடர்ந்து பெற, திருவல்லவாழ் கோவபிரானைத் தரிசித்து விட்டால் போதும். தடங்கல் இல்லாமல் வாழ்க்கை செல்லும்.