திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில் Sathyamurthi Perumal Temple in Tamil

 பக்தர்களுக்கு சோதனை  வந்தாள் பகவான் காப்பாற்றுவார்.  அந்த பகவானுக்கு சோதனை வந்தால் என்ன நடக்கும்?  என்றதொரு கேள்வி நமக்கெல்லாம் வந்தாலும் வரலாம்.  அதற்கு சரியான விடை என்ன என்பதை பகவான் முன்கூட்டியே நமக்கு தந்திருக்கிறார்.  பகவானுக்கு சோதனை எப்படி வரும் என்பதை விட அப்படி வந்து பகவான் காப்பாற்றப்பட்டு இருக்கிறார் என்பதற்கு திருமயம் குகைக்கோயில் ஒரு  ஒரு சாட்சியாகும்.

 புதுக்கோட்டைக்கு தெற்கே 24 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது  திருமெய்யம், ஆதிரங்கம்,  பத்மகக் கோட்டை,  ஊமையன் கோட்டை இன்று இதற்கு வேறு பெயர்களும் உண்டு.  இக்கோயில் 40 ஏக்கர்  நிலப்பரப்பளவில்,  சிறுமலை கோட்டையாக ஒன்றின் தெற்குப்பக்கம் உள்ளது இது ஒரு குடைவரைக் கோயில்.  கோயிலை சுற்றி ஏழு சுற்று மதில்கள் உண்டு. வட்டவடிவிலான கோட்டைக்குள் இந்த கோயில் இருந்தாலும் வடக்கு தெற்கு தென்கிழக்கு ஆகிய மூன்று நுழைவுவாயில்கள் தான் உண்டு.  மூலவர் சத்தியகிரி நாதன், சத்தியமூர்த்தி பெருமாள்.  நின்ற திருக்கோலம் தாயார் உய்ய வந்த நாச்சியார்.  விமானம் சத்தியகிரி விமானம்.  தீர்த்தம் கதம்ப புஷ்கரணி, சத்திய தீர்த்தம் நல்ல பரிச்சயம் ஆலமரம்.

 இந்த குகைக்  கோயிலிலுள்  பகவான் ஆனந்த சயனம் கொண்டு அருள்பாலிக்கிறார்.    பாறையோடு வடிக்கப்பட்ட சிலை.  ஆதிசேஷன் மீது  சயணம்.   பகவானது கை ஆதிசேஷனை  தட்டிக் கொடுக்கிறது.  சகலவிதமான தேவர்களும் ரிஷிகளும் புடைசூழ காட்சி தரும் இந்த குடைவரைக்  பெருமாள்,  திருவரங்கம் ரங்கநாதரை விட பெரிய  திருமேனியை கொண்டுள்ளார்.

 ஆதிசேஷன் பாதுகாப்பிலிருந்த பெருமாளை அசுரர்கள் தாக்க வந்தபோது.  ஆதிசேஷன் தன் விஷக் காற்றை விட்டு அத்தனை  அசுரர்களையும் கொன்றதாகவும் இன்றைக்கும் ஆதிசேஷன் தான் இத்தளத்தை பாதுகாப்பதாகவும் வரலாறு.  சந்திரன், சத்திய முனிவர்,   புருவரச் சக்கரவர்த்தி ஆதிசேஷன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலம். கருடனுக்கு மகா பலத்தையும் சக்தியையும் கொடுத்த ஸ்தலமும் கூட.  திருமங்கை ஆழ்வார் பாடல் பெற்ற ஸ்தலம்.

 பரிகாரம்

 ராகு கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் கொடியவர்களாக அன்றாடம் துன்பப்படுகிறவர்கள் இசிஆர் வியாதிகளால் நிம்மதி இல்லாமல் தவிக்கிறவர்கள் போட்டி பொறாமை போன்ற  துஷ்டத்தால் நொந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் அனைவரும் இந்த சத்திய கிரிநாதர் பெருமாளையும் ஆதிசேஷனின் வழிபாடு செய்ய வேண்டிய பிரார்த்தனைகள் பரிகாரங்களை செய்தால் கிரகணம் நீங்கியது போல் மலர்ந்த முகத்தோடு பெருவாழ்வு பெறுவார்கள்.

Quickly Find What You Are Looking For