ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் பெருமாள் கோயில் Srivaikuntanathan Perumal Temple in Tamil

' வைகுண்டம்"  என்பது மேலோகத்தில் தான் உண்டு. பூலோகத்தில் எது என்று  நினைப்பவர்களுக்கு கண் கொள்ளாகாட்சியாக  இருப்பது திருநெல்வேலிக்கு மிக அருகில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் எனும் திருத்தலம்.  புண்ணியம்  செய்தவர்களும் சரி,  பாவம் செய்தவர்களும் சரி தங்கள் நிலையை முற்றிலும் மறந்து பகவானை நோக்கி காலெடுத்து வைத்தால் போதும்.   பாவம் கரைந்து போகும்.  பகவானது அருளும் கிடைக்கும்.

திரு நெல்வேலி -  திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஸ்ரீவைகுண்டம் இருக்கிறது.  ரயில் நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.  மூலவர் ஸ்ரீ வைகுண்ட நாதன்,  கள்ளபிரான் என்று மற்றொரு பெயரும் உண்டு.  நின்ற திருக்கோலம்.  தாயா வைகுந்தவல்லி,  ஸ்ரீதேவி.  தீர்த்தம்  ப்ருகு தீர்த்தம்,  தாமிரபரணி நதி.  விமானம் சந்திர விமானம்.  இந்திரனுக்கும் ப்ருகு சக்கரவர்த்திக்கும் பெருமாள் நேரடியாக தரிசனம் தந்த இடம்.

 காலதூஷகன் என்பவன் ஒரு திருடன்.  எப்பொழுதும் தான் திருடிய பொருட்களில் பாதியை வைகுண்ட நாதனுக்கு சமர்ப்பிப்பது வந்தான்.  ஒரு சமயம் அரண்மனையில் திருடும் போது வசமாக மாட்டிக் கொண்டான்.  அப்போது அவன் வைகுண்ட நாதனை நோக்கி பிரார்த்தனை செய்ய பெருமாள்  தானும் ஒரு திருடனாக வேடம் போட்டு அரசனுக்கு தத்துவத்தை உபதேசித்து ' கால தூஷகன்' திருடன் அல்ல.  அவன் ஒரு யோகி என்று நிரூபித்துக் காட்டி,  அரசனது தண்டனையிலிருந்து தப்ப வைத்தார்.  பிறகு தான்  யார் என்பதை அரசனுக்கு உணர்த்தினார்.  இதனால் பெருமாளுக்கு ' கள்ளபிரான்'  என்ற திருநாமம் ஏற்பட்டது.

'சோமகன்  என்னும் அரக்கன்,  பிரம்மாவின் ஞானத்தை அதிகரித்து   விட்டதால் பிரம்மா இங்கு வந்து பெருமாளை நோக்கி பிரார்த்தனை செய்தார்.  திருமால், உடனே பூ சோமகனிடமிருந்து  பிரம்மாவின் ஞானத்தைப்  பிடுங்கி மீண்டும் பிரம்மாவிடம் ஐ  கொடுத்த புண்ணியத் ஸ்தலம் இதுதான்.  மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்த இடம்.

பரிகாரம்

பெருமாளிடம் மிகுந்த பற்று வைத்து செய்கின்ற காரியங்கள் தவறாக இருந்தாலும் பகவானை மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்தாள் மாட்டிக் கொண்டவர்கள் பகவான் எந்த உருவத்தில்  வந்தாவது காப்பாற்றுவார்.  திருடியவர்கள்,  இன்னும் தெரிந்தோ,  தெரியாமலும் திருடிக் கொண்டு இருப்பவர்கள்,  மாட்டிக் கொள்ளாமல் இருக்கவும்,  நீதிபதியின் முன்பு தண்டனைக்காக காத்துக் கிடப்பவர்களும்,  செய்த தவறுக்காக உண்மையில் பிரார்த்தனையோடு மன்னிப்பு கேட்க இந்த ஸ்ரீவைகுண்டம் பெருமாளை  நேரடியாக சேவித்து ,  பிரார்த்தனை,  பரிகாரங்களை  செய்துவிட்டாள் அவர்களுடைய கோரிக்கை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு புனிதனாக மாற்றப்படுவார்கள்.

Quickly Find What You Are Looking For