திருத்தேவனார் தொகை Thirudevanar Thogai Temple in Tamil
திருமாலை தேவலோகத்தில் காணுகின்ற பாக்கியம் சில சமயம் தேவர்களுக்கே கிடைப்பதில்லை என்பது ஒரு ஆச்சர்யம். காரணம், திருமால் பெரும்பாலும் பூலோகத்தில் இன்னும் சொல்லப்போனால் குறிப்பாக தமிழகத்தில் அடிக்கடி அவதாரம் எடுத்து, தன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதால் தேவலோகத்தில் தங்குவது சொற்ப காலம். இதனால் வானுலகத்து தேவர்களும் இறைவன் இறைவியும் கூட திருமாலை தரிசனம் செய்வதற்கு பூலோகத்தை நோக்கி வந்த சம்பவங்கள் ஏராளம். அதிலொன்றுதான் திருத்தேவனார் தொகை என்னும் கீழச்சாலை பெருமாள் ஸ்தலம்.
சீர்காழிக்கு தென்கிழக்கே எட்டு கிலோமீட்டர் திருநாங்கூருக்கு வடக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தேவனார் தொகை மாதவப் பெருமாள் கோவில். திருநாங்கூர் 11 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. மூலவர் ஸ்ரீ தெய்வ நாயகப் பெருமாள், நின்ற திருக்கோலம். திருமகள் பூமி தேவியுடன் மேற்கு நோக்கி தரிசனம். தாயார் தெய்வநாயகி. கடல் மகள் நாச்சியார். மாதவ நாயகி என்று வேறு பெயர்களும் உண்டு. தீர்த்தம் சோபன புஷ்கரணி, விமானம் சோபன விமானம். இத்தல உற்சவ மூர்த்தியின் மாதவ பெருமாள் தலம் என்று அழைக்கப்படுகிறது.
வசிஷ்டர் நீண்ட காலம் நிஷ்டையில் ஆழ்ந்து பெருமாள் தரிசனம் கிடைக்கவில்லை. எனவே இங்கு வந்து தவம் இருந்தார். திருமாலும் உடனடியாக சித்தருக்கு காட்சி தந்தார். வசிஷ்டருக்கு தரிசனம் தந்த திருமால் தங்களுக்கும் தரிசனம் வேண்டும் என்று தேவலோகத்து பெருமக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டமாக இங்கு வந்து பெருமாளிடம் பிரார்த்தனை செய்தார்கள். தேவலோகத்தில் தரிசனம் தராத' பெருமாள்' தேவர்கள் அனைவருக்கும் பிரட் சாத்தியமாக தரிசனம் கொடுத்த ஸதலம். அதனால் தேவனார் தொகை என்றழைக்கப்படுகிறது. திருமங்கையாழ்வார் வாசம் செய்த ஸதலம். திருநாங்கூர் கருட சேவையில் இந்த மாதம் பெருமாளுக்கு பங்கு உண்டு.
பரிகாரம்
மற்ற எல்லா ஸ்தலங்களுக்குச் சென்றும் தங்கள் பிரார்த்தனைகள் ஈடேயறாத நிலையில் பக்தர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தார் பகவான் இந்த ரூபத்தில் வந்தாவது தரிசனம் கொடுத்து அவர்தம் பிரார்த்தனையை நிறைவேற்றிக் காட்டுவார். மகான்கள் வாக்கு நல்லபடியாக நடக்க இத்தலத்து பெருமாள் வழிகாட்டுவார். வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்தவர்கள் , தொழிலால், உடலால், மனதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தலம் ஒரு அருமருந்தாக இருக்கும். அமைதியான வாழ்க்கையை அதில் முழுவதும் தரும். இங்கு கருட சேவை செய்தால் அவர்கள் பரம்பரை கொடி கட்டி பறக்கும்.