திருநாவாய் நவ முகுந்தன் பெருமாள் கோயில் Thirunavaya Navamukunda Temple in Tamil
மன அமைதிக்காக பிரார்த்தனை செய்கிறோம். பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள் பெருமாள் கோயிலுக்கு இதெல்லாம் சென்று திருமாலுக்கு கண்டு தங்களது பாவத்தைப் போக்கிக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வட நாட்டிலும் திருமால் நிறைய பேருக்கு தரிசனம் கொடுத்த வரலாறும் உண்டு. அதேபோல் கள்ளிக்கோட்டை அருகே திருமால் பக்தர்களுக்காக தரிசனம் கொடுத்த வரலாறும் உண்டு. கேரளாவில் உள்ள கோயில்களுள் பிரசித்தி பெற்ற திருமால் ஸ்தலம் தான் ' திருநாவாய்'.
அமைதியான சூழ்நிலையில்அமைந்துள்ள இந்த திருநாவாய் சென்னை - கள்ளிக்கோட்டைரயில் மார்க்கத்தில் உள்ளது. ஷோரனூரில் இருந்து பஸ் மூலம் குட்டிபுரம் வந்து, அங்கிருந்து வேறொரு பஸ் மூலம் திருநாவாய் கோயிலை அடையலாம். மூலவர் நாவாய் முகுந்தன் நாராயணன் என்று வேறு பெயரும் உண்டு. தாயார் மலர்மங்கை நாச்சியார். சிறுதேவி என்று வேறொரு பெயரும் உண்டு. தீர்த்தம் செங்கமல ஸரஸ், விமானம் வேத விமானம்.
'பாரதப்புழை' என்னும் ஆறு கோயிலையொட்டி ஓடுகிறது. எதிர் கரையில் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் கோயில்கள் தனித்தனியாக இருக்கின்றன. இங்கு காசிக்கு சமமாக எண்ணி, முதியோர்களுக்கு சிரார்த்தங்கள் செய்கின்றனர்.
இந்த புனிதமான இடத்தில் ஒன்பது யோகிகள் யாகம் செய்து பெருமாளின் தரிசனத்தை கண்டதால் முதலில் இந்த ஸ்தலத்திற்கு திருநவயோகி என்று பெயர்! நாளடைவில் இது மருவி ' திருநாவாய்' என்று மாறி விட்டதாக சொல்லப்படுகிறது.
இன்னொரு சமயம் மகாலட்சுமி, கஜேந்திரனும் தாமரைப் பூக்களைப் பறித்து தினமும் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தனர். திடீரென்று தாமரை பூ கிடைக்கவில்லை என்று கஜேந்திரனும், லட்சுமியும் திருமாலை நோக்கி பிரார்த்தனை செய்தனர். உடனே திருமால் பிரதட்சியம் ஆகி இதுவரை செய்த பூஜைகள் போதும். இனியும் தாமரைப் பூவால் அர்ச்சனை வேண்டாம்" என்று சொல்லி கஜேந்திரனுக்கு வாழ்த்துக் கூறி, மகாலட்சுமியை தன்னுடன் அழைத்துச் சென்றதாக புராண வரலாறு சொல்கிறது. திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.
பரிகாரம்
வேறு எந்த இடத்தில் யாகம் செய்தும் அதன் முழு பலனை அனுபவிக்க இயலாதவர்கள், பல்வேறு காரணங்களினால் தொடர்ந்து திருமாலுக்கு பூஜையோ, அபிஷேகமோ அல்லது வேறு கைங்கரியமோ முடியாதவர்கள் இங்கு வந்து ஒரு தடவை முறைப்படி ஓமம் செய்தால் காரியங்கள் பலிதமாகும். கல்யாணங்கள் கூடிவரும், கஷ்டங்கள், நோய்கள் விலகும் பகவானுடைய தரிசனம் கிடைக்கும்.