திருநீர்மலை பெருமாள் கோயில் Tiruneermalai Temple in Tamil
மலை மீதுள்ள திருமால் ஸ்தலங்களில் மகத்தான மகிமை பொருந்திய ஸ்தலங்கள் பல உண்டு. அதிலும் தானாக தோன்றிய ஸ்தலம் ஒன்று உண்டு. அந்தத் ஸ்தலம் சென்னைக்கு தென் மேற்கு 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதற்கு தோயாசம்; காண்டவ வனம், மலை தோயத்ரி சேத்திரம் என்று பலவகை பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இப்போது 'திருநீர்மலை' என்று அழைக்கப்பட்டு வருகிறது.
சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் 3 நிலை இராஜகோபுரம் தோடு ஒரு பிரகாரம் கொண்டு இந்த கோவில் விளங்குகிறது. இறைவன் சுயம்புவாக நீலமுகில் வண்ணன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தாயார் அணிமா மலர் மங்கைத் தாயார்; விமானம் தோயகிரி விமானம். தீர்த்தம் மணிகர்ணிகா, கடகம்,. க்ஷிர புஷ்கரணி, காருண்ய புஷ்கரணி, ஸித்த புஷ்கரிணி, ஸ்வர்ண புஷ்கரணி என்று நான்கு தீர்த்தங்களைக் கொண்டது.
வால்மீகி முனிவர் இத்தலத்தை அடைந்து மலை மீதேறி அரங்கநாதன், நரசிம்மன் திருவிக்கிரமன் என்ற மூர்த்திகளை வழிபட்டு கீழே இறங்கினார். எனினும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. அடிவாரத்தில் இருந்து ஸ்ரீ ராமனை நோக்கி தியானம் செய்தார். உடனே அரங்கநாதன் ஸ்ரீராமனாகவும், லக்ஷ்மி ஜானகியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் சங்கு சக்கரங்கள் பரதசத்துருக்கனன் ஆகவும், விஷ்வக்ஸேனர் சுக்ரீவனாகவும், கருடன் அனுமார் ஆகவும் காட்சி தந்து மறைந்தார்கள். அப்படியும் வால்மீகி திருப்தி அடையாததால் பகவான் நீர் வண்ணமாக காட்சி தந்தார்.
இந்த மலை 15 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. மலையின் மீது ஏறிச்செல்ல 200 படிகள் உண்டு. தெற்கு நோக்கி மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம். இரண்டு பிரகாரங்களைக் கொண்டது. திருமங்கையாழ்வார் இங்கு வந்த பொழுது இம்மலையில் சுற்றி நீர் அரண் போல் சூழ்ந்திருந்தது. ஆறு மாத காலம் ஊருக்கு வெளியே காத்திருந்தார். அதனால்தான் இந்த மலைக்கு திருநீர்மலை என்று பெயர் வந்தது. திருமங்கையாழ்வார் பூதத்தாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். மலைமேல் உள்ள வைணவக் கோயில்களில் இது பிரசித்தி பெற்றது. நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு கோணங்களில் பெருமாளை இங்கே தெளிக்கலாம்.
பரிகாரம்
ஆயுள் பலம் அதிகரிக்க வேண்டும் என்றாலும் அன்றாடம் நடக்கும் வாழ்க்கை பிரச்சனையின்றி செல்ல வேண்டுமென்றாலும் குழந்தைகள் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றாலும் குடும்ப பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அது மறைந்து சுகபோகமான வாழ்க்கை தொடர வேண்டும் என்றாலும் திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெற வேண்டும் என்றாலும் திருநீர் மலைக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்துவிட்டு சென்றால் போதும். அவர்களுக்கு பஞ்ச கிரகங்களின் அனு கிரகங்களும் கிடைக்கும். கடன் தொல்லையும் நிவர்த்தியாகும்.