மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் Koodal Azhagar Temple in Tamil

 திருமாலுக்கு தேவர்கள் செய்யாத திருமதி மங்களாசாசனத்தை பூமியில் பிறந்த மாமனிதர்கள்,  முனிவர்கள்,  ரிஷிகள் செய்திருக்கிறார்கள்.  அதனால்தானோ என்னவோ திருமாலுக்கு பூலோகம் மிகவும் பிடித்து  போயிற்று.  பகவானை அதிகாலையில் துயிலெழ வைக்கும் அற்புதமான பாட்டு ' பல்லாண்டு பல்லாண்டு'  என்று தொடங்கும் மங்களப்பாட்டு.  அதை பாடிய இடம் தான் மதுரையம்பதியில் இருக்கும் கூடலழகர்  சன்னிதி.  எவ்வளவு பெருமையாக இருக்கிறது நமக்கு.

 மதுரை  நகரின் மத்தியில் பஸ் நிலையத்திற்கு  மிக அருகில் இருப்பது கூடலழகர் திருக்கோயில்.  வீற்றிருக்கும் திருக்கோலம்.  தாயார் மதுரவல்லி நாச்சியார். வகுலவல்லி,  வரகுணவல்லி,  மரகதவல்லி என்று வேறு பெயர்களும் உண்டு.  தீர்த்தம் ஹேம புஷ்கரணீ,  சக்கர தீர்த்தம் க்ருதமாலா  நதி,  வைகை நதி.  விமானம் அஷ்டாங்க விமானம்.ப்ருகு   முனிவருக்கும்,   பெரியாழ்வாருக்கும் செள  நாகதிகளுக்கும்  பகவான் திரட்தட்சயம். 

 நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தின் முதல் பாசுரமான ' பல்லாண்டு பல்லாண்டு என்ற பாசுரத்தை பெரியாழ்வார் இங்குதான்.  அரங்கேற்றினார்.  மேல்தளத்தில் அஷ்டாங்க விமானம் உள்ளது.  இதில்  ஒரு தட்டில் பள்ளிகொண்ட பெருமாள் சயனத் திருக்கோலத்திலும்  மற்றொரு தட்டில் சூரிய நாராயணன்  நின்ற  கோலத்திலும் காட்சி.  வைணவக் கோயில்களில் இங்கு மட்டும் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

 முன்னொரு சமயம் பெருமழை பெய்த பொழுது மதுரையே வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.  பக்தர்கள் இதை கண்டு பகவானிடம் பிரார்த்தனை செய்தனர்.  பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட பகவான் நான்கு திசையிலும்வேறொரு மேகங்களை ஏவ  இந்த மேகங்கள் மழை மேகங்களை தடுத்து நிறுத்திவிட்டன.  நான்கு திசையிலிருந்தும் மேகங்கள் கூடியதால் நான்மாடக் கூடல் என்று பெயர் ஏற்பட்டதாக ஐதீகம்.  திருமங்கையாழ்வாரும் திருமழிசை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.

 பரிகாரம்

 பிரச்சனையைக்  கொடுப்பதும் பகவான்தான்.  பிரச்சினையை தீர்ப்பதும் பகவான்தான்.  எனவே நமக்கு எப்பேர்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் அதை நினைத்து கண் கலங்காமல் அப்படியே இந்த கூடலழகர் சன்னதியில் வந்து  மழை போல் கொட்டிவிட்டால் போதும்.  பகவான் ஏதாவது ஒரு வழியை நமக்குக் காட்டி கஷ்டங்களை விலகி விடுவார்.  நமக்கு வேண்டுமானால் பிரச்சனை பெரிதாக இருக்கலாம்.  ஆனால் பகவானுக்கு இது ஒரு தூசி.  எனவே அவரையே சரண் அடைவோம். கூடலழகர் பெருமாள் நம்மை கைவிடமாட்டார்.

Quickly Find What You Are Looking For