திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் Arulmigu Veeraraghava Temple in Tamil
நின்றபடி அருள்பாலிப்பதை விட சயனம் பண்ணிக்கொண்டே அருள்பாலிப்பது பகவானுக்கு ரொம்பவும் பிடித்தம் என்பதை பெரும்பாலான பெருமாள் கோயில்களில் காணுகிறோம். திருமாலின் திருவிளையாடல்கள் எத்தனை எத்தனையோ. அவற்றுள் படுக்க இடம் கேட்டு பக்தரிடம் வந்து நின்ற சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. இந்த அதிசயம் நடந்த இடம் சென்னைக்கு மேற்கே சுமார் 44 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூரில் தான்.
பத்து ஏக்கர் பரப்பளவில் 5 நிலை இராஜகோபுரம் இரண்டு பிராகாரங்களைக் கொண்டுள்ளது இந்தக் கோயில். மூலவர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள். புஜங்க சயனம், தாயா கனகவல்லி வசுமதி தாயார் என்ற சிறப்பு பெயரும் உண்டு. விமானம் விஜயகோடி, தீர்த்தம் ஹ்ருத்தாப நாசினி தீர்த்தம். வடலூர் இராமலிங்க அடிகளார் இத்தளத்தைப் பற்றி ஐந்து பாசுரம் பாடி இருப்பது விசேஷமான செய்தி. பெருமாளுக்கு வைத்திய வீரராகவன் என்ற பெயரும் உண்டு, 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது இந்த கோயில்.
சாலியோத்திர என்ற வயதான முனிவர் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த பொழுது வயோதிகராக வந்த திருமால், அவரிடம் உணவு உண்டு 'படுக்க இடம் எவ்வுள்' என்று கேட்டாராம் முனிவர் காட்டிய பரன் சாலையில் வயோதிகராக வந்த பெருமாள் உண்மையாகவே சயன கோலத்தில் வீரராகவ பெருமாளாக பள்ளிக் கொண்டாராம். அதனால் இத்தலத்திற்கு திருஎவ்வுள் என்று பெயர் வந்தது. பின்னர் திருவள்ளூராக மாறியது.
பெருமாள் தனது வலது திருக்கையை காலிஹோத்ர முனிவர் தலைமீது வைத்து, நான்முகனுக்கு உபதேசிக்கும் திருக்கோலத்தில் ஞான முத்திரையோடு காட்சியளிக்கிறார். மூலவருக்கு சிவப்பு வெள்ளைக் கட்டம் போட்ட வஸ்திரம், வேண்டுகோளாக சாத்தப்படுகிறது. உப்பும் விலகும் காணிக்கை செய்வதும் உண்டு. சிவபெருமான், தட்சனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இந்த தீர்த்தக் கரையில் நீங்கியது. இதனால் தீர்த்தக் கரையில் சிவன் கோயில் உண்டு. மனதில் கைடபர் என்னும் அரக்கர்களை பெருமாள் வதம் செய்த இடம் இது. இந்தக் கோயில் குளத்தில் அமாவாசை அன்று நீராடினால் எல்லா விதமான நோய்களும் அகலும். புண்ணியமும் அதிகமாகும். திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.
பரிகாரம்
திருமணமாகாதவர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொண்டார் திருமணமாகும். இங்குள்ள புஷ்கரணியில் அமாவாசை தோறும் வந்து நீராடினால் எப்பேர்ப்பட்ட கொடிய நோய்களும் விலகும். எதிரிகள் பயத்தால் நிம்மதியற்று காணப்படுகிறார்கள் இந்த பெருமாளை தரிசனம் கண்டு நேரடியாக வேண்டினால் அவர்களது பயத்தை போக்குவதோடு எதிரிகளை விரட்டி விடுவார் என்பது வெகுகாலமாக இருந்து வரும் ஐதீகம். சிவபெருமானுடைய பிரம்மகத்தி தோஷமே இங்குள்ள குளத்தில் குளித்தால் விளங்கியது என்பதால் தெரிந்தோ அல்லது தெரியாமலோ நான் செய்த அத்தனை பாவங்களும் விலக இந்த குளத்தில் நீராடினால் போதும் புண்ணியசாலி ஆக மாறிவிடலாம்.