தல சயனப் பெருமாள் கோயில் Thirukadalmallai Sthalasayana Perumal Temple in Tamil
பக்தியின் மேலீட்டால் நாம் செய்யும் செயல்கள் சிலசமயம் மற்றவர்களுக்கு வியப்பையும் தரும். பைத்தியம் போலவும் தோன்றும். " ஆட்டுகிறார் பகவான் ஆடுகிறோம் நாம்" என்ற உணர்வு எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் முன் வராது. ஆனாலும் இறைவனே பக்தனை வேடிக்கையாக்கி விட்டு பின்பு வியப்புறும் வண்ணம் விளையாடல்களை செய்வது வாடிக்கை தான். அதிலும் கடல் நீரைக் கையால் இறைக்க வைத்து வேடிக்கை பார்த்த நிகழ்ச்சி ஒன்று திருக்கடல் மல்லையில் நடந்து இருக்கிறது.
சென்னைக்கு தெற்கு 58 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மகாபலிபுரம் இதற்கு கடல்மல்லை, கடல் மல்லைத் தய சயணம், அர்த்த சேது, திருக்கடல் மல்லை என்று பல்வேறு பெயர்கள் உண்டு. இக்கோயிலின் நிலப் பரப்பளவு 4 ஏக்கர். சிறு ராஜ கோபுரத்துடன், கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. மூலவர் தல சயனப் பெருமாள். புஜங்க சயனத் திருக்கோலம். வலது கரத்தை மார்பில் வைத்து உபதேச முத்திரையாக வைத்திருக்கிறார். உற்சவர் உலகுய்ய நின்ற பெருமாள். தாயார் நிலமங்கைத் தாயார். தீர்த்தம் புண்டரீக புஷ்கரணி, கருடநதி கடல், விமானம் சுகனாக்குருதி விமானம். திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், மணவாள மாமுனிகள் பிள்ளைலோகம் ஜீயர் ஆகியோர் மங்களம் செய்திருக்கிறார்கள்.
புண்டரீக முனிவர் தாமரை புத்தகங்களோடு மக்ஷீராப்தி நாதனை வழிபட புறப்பட்டார். அவர் கண்ணில் தடையாக தோன்றியது சமுத்திரம். இந்த சமுத்திர நீரை கையால் இழுத்து விட்டாள் பெருமாளை அடையலாம் என்றெண்ணி, தான் கொண்டுவந்த புஷ்பப் கூடையை கீழே வைத்து, கையால் சமுத்திரத்தை இறைக்க ஆரம்பித்தார். தன்மீது கொண்ட பக்தியினால் புண்டரீக முனிவர் இப்படி செய்வதை அறிந்த பெருமாள், ஒரு வயோதிகர் போன் வேடமணிந்து புண்டரீக முனிவரிடம் சென்று ஆகாரம் கேட்டார்.
வந்திருப்பவர் திருமால் என்று அறியாத புண்டரீக முனிவர், அவருக்காக ஆதாரம் கொண்டுவரச் செல்லும்பொழுது திருமால் அவரது கூடைப் புஷ்பங்களை தானே அணிந்து கொண்டு க்ஷிராப்தி நாதனாக மாரி, புண்டரீக முனிவருக்கு தரிசனம் கொடுத்தார் என்பது தல வரலாறு. எம்பெருமான் வெறும் தரையில் சயணித்து அவர் திருவடி அருகில் புண்டரீக முனிவர் இருப்பதைக் காணலாம். பூதத்தாழ்வார் இந்த தளத்தில் உள்ள மல்லிகைக் கொடி காட்டிலுள்ள நீலோத்பல மலரில் தோன்றியவர். உற்சவரான உலகுய்ய நின்றான் தம் கையில் ஒரு தாமரை மொக்குடன் காட்சியளிப்பது வேறு எந்த தளத்திலும் இல்லை.
பரிகாரம்
பக்தி எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். இது மற்றவர்கள் கண்ணுக்கு பைத்தியம் போல் தோன்றலாம். ஆனால் பகவானுக்கும் அதுதான் பேரின்பத்தை கொடுக்கும். உங்களது எண்ணம் நிறைவேற வேண்டுமானால், மற்றவர்களிடம் வேண்டுவதை விட, நேராக திருமாலை பயண பெருமாளிடம் சரண் அடைந்தால் போதும். அவர் எந்த வடிவில் வந்தாவது உங்களது வேண்டுகோளுக்கிணங்கி, நேரடியாகவே தரிசனம் தந்து காப்பாற்றுவார். பகவானை தரிசிக்க வேண்டும், அவனது பாதார விந்தங்களில் சரண் அடைய வேண்டும் என்று எங்கிருந்து பிரார்த்தனை செய்தாலும் இந்த தலசயனப் பெருமாள் மனதால் நினைத்துக் கொண்டான் காரியம் நிறைவேறும்.