திருப்பிருதி Tiruppirudi Temple in Tamil
திருமாலை வணங்கிய அனைவருமே பெற்றவர்கள்தான். இதில் மொழி, இன, ஜாதி என்ற வேறுபாடு இல்லை. இந்த பூமியில் மனித ஜென்மம் எடுத்த அத்தனை பேர்களும் திருமாலை சரண் அடைவதை பெரும் பாக்கியமாகவே கொண்டிருக்கிறார்கள். அதிலும் சிவபெருமானது சொரூபமாக பிறந்த ஆதிசங்கரரே பெருமாளை நோக்கி தவமிருந்து அருள் பெற்றிருக்கிறார் என்றால் கேட்கவே வேண்டாம்? அப்படிப்பட்ட புண்ணிய ஸ்தலம் தான் 'ஜோஷிமட்' என்று சொல்லப்படும் திருப்பிருதி என்னும் திவ்ய ஸ்தலம்.
ரிஷிகேஷிலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ளது மிகவும் புகழ்பெற்ற 'ஜோஷிமட்' . தமிழில் திருப்பிருதி என்று பெயர் இது ஹரித் வாரிலிருந்து சரியாக 154 மைல் தொலைவில் இருக்கிறது. மூலவர் பரம புருஷர். புஜங்க சயனத்தில் எழுந்தருளியிருக்கிறார். தாயார் பரிமள வல்லி நாச்சியார். தீர்த்தம் இந்திர தீர்த்தம் கோவர்த்தன தீர்த்தம் மானஸ ஸரஸ். விமானம் கோவர்த்தனம். பார்வதி தேவிக்கு திருமால் நேரடியாக தரிசனம் கொடுத்த அருமையான புண்ணிய பூமி.
இங்குள்ள வாசுதேவர் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இக்கோயிலை சென்றடைய சுமார் ஒரு மைல் தூரம் படியில் இறங்கி செல்ல வேண்டும். நந்த பிரயாகை என்பதுதான். திருப்பிருதி என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆதிசங்கரரால் கட்டப்பட்ட நரசிம்மர் ஆலயம் உண்டு. ஆதிசங்கரர் இந்த இடத்தில்தான் ஒரு முசுக்கொட்டை மரத்தடியில் தவமிருந்து திவ்விய ஞானம் பெற்றார். பிறகு தான் அவரால் சங்கர பாஷ்யம் எழுதப்பட்டது. அதுவும் இங்கு தான். கடல் மட்டத்திலிருந்து 6150 அடி உயரம். மனதிற்கு ரம்மியமான சூழ்நிலை நீடிக்கிறது.
வைணவ திருத்தலங்களில் முக்கியமான திருப்பதிகளில் இதுவும் ஒன்று என்றாலும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருந்தாலும் இந்தக் கோயில் அந்த வாசுதேவர் கோயில் தானா என்ற சந்தேகம் உண்டு. திருமால் திருத்தலங்களில் மலை மேல் வீற்றிருப்பதில் தரிசனம் காணச் சொல்ல நினைத்தாலே புண்ணியம்தான். கஷ்டப்பட்டு பகவானை தரிசனம் காண்பது என்பது மேலும் புண்ணியத்தை சேர்க்கும். இங்கு ஒருதடவை வந்து பகவானை தரிசனம் செய்தால். மறுபடியும் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை வரும். அதோடு நாம் படும் அனைத்து கஷ்டங்களும் அனுஅனுவாக விலகிவிடும்.
பரிகாரம்
இந்த ஜோஷிமட் வாசுதேவ பெருமாள். மிகவும் பிரசித்தி பெற்றவர். இவரை தரிசனம் செய்தாலே பரிகாரம் தான். அவரருள் பெற்றவர்கள் இன்றைக்கு மிகவும் சவுகரியமாகவும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறார்கள் என்றார் இது வாசுதேவ பெருமாளின் புண்ணியம்தான். அந்த புண்ணியம் நாம் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.