திருப்புல்லாணி ஆதி ஜெகநாதன் பெருமாள் கோயில் Adi Jagannatha Perumal Temple in Tamil

 எத்தனையோ பிரச்சினைகள் கவலைகள் அன்றாடம் வந்தாலும் நிரந்தரமான கவலை என்பது புத்திரப்பேரிமை தான்.  இந்த  அபாக்கியம் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை.  ஒரு சிலருக்கு மட்டும் தான் உண்டு.  ஏன் இப்படி ஏற்படுகிறது என்பதை மருத்துவக் குறிப்பு பலவாறு சொன்னாலும் தெய்வ அருள் இருப்பின் இந்த குறையை வென்று விடலாம் என்பதுதான் உண்மை.  அப்படிப்பட்ட குறை தீர்க்கும் ஒரு இனிமையான ஸ்தலம் உண்டு.  அதுதான் திருப்புல்லாணி.

  இராமநாதபுரத்திற்கு தெற்கு எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருப்புல்லாணி.  இதற்கு  புல்லாரண்யம்,  ஆதிசேது, புல்லணை, திருவணை,  தர்ப்ப சயனம், நளசேறு, ரத்தினாகர ஷேத்திரம்,  சரணாகதி ஷேத்திரம்,   புல்லாங்காடு என்ற வேறு பெயர்களும் உண்டு.  இரண்டு பிரகாரங்கள் கூடிய ஒன்றரை ஏக்கர்  நிலப்பரப்பளவில் 120 அடி உயர ராஜகோபுரம் உடையது.  மூலவர் ஆதி ஜெகநாதன்.  நின்ற கோலம்.உத்ஸவர் கல்யாண ஜெகநாதன்.  தாயார் ஸ்ரீ  பத்மாஸனி தாயார்!   விமானம் கல்யாண விமானம். தலவிருட்சம் அரசமரம்.  தீர்த்தம் சக்கர தீர்த்தம் இதைத்தவிர ஹம்ச,  வருண தரும,   இராம அகத்திய  தீர்த்தங்களும்,  இரணிய,  கண்வ, க்ஷிர நதிகளும்,  ஆதி சேது என்ற கடலும் உண்டு.

 சுவாமி சன்னதிக்கு வடக்கிகே தனி  தனி சன்னதியில் மூலவர் தர்ப்ப சயன  இராமன் பட்டா கத்தியுடன் சயனத் திருக்கோலம்.  தர்பை பொருட்கள் மீது ஸ்ரீராமன் பள்ளி கொண்டதால் புல்லணை  என்று பெயர்.  இராமன்,  இத்தலத்து  பெருமானை பூஜித்து,  ஆதிஜெகநாத   பெருமாளால் கொடுக்கப்படவில்லை பெற்று இராவணனை வதம் செய்ததாக வரலாறு.

 விபீஷணன் இங்குதான் சரணடைந்தான்.  இலங்கை வேந்தனாக முடிசூட்டப்பட்டதும் இங்குதான்,  கடல் அரசனுக்கு பகவான் மன்னிப்பு வழங்கிய இடம். புல்லர்,  கண்ணுவர் போன்ற  ரிஷிகளுக்கு பகவான் மோட்சம் தந்த புனித இடம்.  புத்திரப்பேறு இல்லாதவர்கள் நாக பிரதிஷ்டை செய்து இங்கு தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் மலட்டுக்குறை  நீங்கும்.  திருமங்கையாழ்வார்,  ஞானசம்பந்தர்,  திருநாவுக்கரசர் மட்டுமின்றி இலக்கிய நூலான புறநானூற்றிலும் இந்த ஸ்தலத்தை பற்றி விரிவாக குறிப்பிட்டு இருக்கிறது.

 பரிகாரம்

 புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் -  புத்திரர்கள் இருந்தும் அந்த சந்தோசத்தை அனுபவிக்க முடியாதவர்கள்,  புத்திரர்களால் கஷ்டப்படுகிறவர்கள்,  நாக தோஷத்தால் குடும்பத்தில் சந்தோஷத்தை இழந்தவர்கள் திருமணமாகி தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம் பெற இயலாதவர்கள் -  ஆண் வாரிசு இல்லாதவர்கள்,  பிரம்மகத்தி தோஷம் உடையவர்கள் அனைவரும் இத்தலத்திற்கு வந்து நாக பிரதிஷ்டை செய்து கோவில் பால் பாயசத்தை உண்டு,  சர்ப்ப சாந்தி ஹோமம் செய்தால் முன்வினைப் பாவம் விலகும்.  நல்ல ஆரோக்கியம் உள்ள வாரிசு உண்டாகும்.  மன நிம்மதி கிடைக்கும்.

Quickly Find What You Are Looking For