ஸ்ரீ திருச்செங்குன்றூர் பெருமாள் கோயில் Chengannur Temple in Tamil
நிறைய திருத்தலங்களில் சிவபெருமான்தான் பெற்ற சாபத்தைப் போக்க திருமால் கோவிலுக்கு வந்து சாபம் நீங்கியதாக வரலாறு உண்டு சைவமும், வைணவமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இந்து மதத்தை பேணி வந்தது என்பதற்கு பாண்டவர் காலத்து வரலாறு ஒன்று கேரளாவில் உள்ள திருச்செங்குன்றூர் என்னும் இடத்தில் இருக்கிறது! ஒரு சாரார் இதனை முருகன் கோயிலாகவும், மற்றொரு சாரார் இதை வைணவத் தலமாகவும் போற்றுகின்றனர். நம்மாழ்வார் இந்த கோயிலை மங்களாசாசனம் செய்து இருப்பதால் வைணவ திருப்பதியாக ஏற்க வேண்டும் என்பது உண்மை.
திருவனந்தபுரத்திலிருந்து கொல்லம் வழியாக எர்ணாகுளம் செல்லும் ரயில் பாதையில் இருக்கிறது புகழ்பெற்ற செங்கண்ணூர். தர்மர் இங்கு வந்து தவம் செய்த புண்ணிய ஸ்தலம். மூலவர் இமயவரம்பன், நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மேற்கே திருமுக மண்டலம், தாயார் செங்கமலவல்லி, தீர்த்தம் சங்க தீர்த்தம், திருச்சிற்றாறு, விமானம் ஜெகத்ஜோதி விமானம். சிவபெருமானுக்கு பெருமாள் காட்சி தந்த திருத்தலம்.
சூரபத்மனை முருகப் பெருமான் போரில் கொன்று அவனை கொடியில் சேவலாகவும், மயிலாகவும் ஆக்கிக் கொண்ட இடம் என்று சொல்லப்படுகிறது. சத்தியத்தை கடைபிடித்தவர். இருப்பினும் குருச்சேத்திரப் போரில் தனது குருவான துரோணரை கொல்வதற்காக 'அஸ்வத்தாமா ஹத' என்று உரக்கச் சொல்லி பின்பு ' குருஜர' என்று மெதுவாக சொன்னார்! இதனால் துரோணர் கொல்லப்பட்டார். தான் சொன்ன சொல் தர்மத்தை களங்கப்படுத்தி விட்டதாக எண்ணி அதற்கு பரிகாரம் செய்ய இந்த ஸ்தலத்திற்கு வந்தார். திருச்சிற்றாற்றில் ஸ்நானம், பகவதி பூஜையும் செய்து மன நிம்மதி அடைந்தார். அவரால் ஏற்பட்ட குரு கொலை பாவமும் கரைந்தது என்பது ஸ்தல வரலாறு.
பரிகாரம்
பாவம் செய்வது மனிதனுக்குரிய பழக்கம். அதைப் போக்க பிரார்த்தனை செய்து பகவானிடம் வேண்டினால் பகவான் அந்த பாவத்தை நீக்கி மன்னித்து அருளுகிறார் என்பதை நிரூபிக்கும் பொருட்டு ஏற்பட்ட ஸ்தலம். வார்த்தைகளால் செய்த பாவத்தை நீக்கவும். தெரிந்தோ தெரியாமலோ செய்த கொலை பாதகச் செயல் தொடர்ந்து குடும்பத்தையோ, மற்றவர்களையும் தொற்றி கொள்ளாமல் இருக்கவும். மன நிம்மதி இல்லாமல் தவித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு மாமருந்தாக திருச்செங்குன்னுரில் குடியிருக்கும் எம்பெருமான் இமயவரம்பன் கோவிலுக்கு சென்று வரலாம். தர்மர் பிரதிஷ்டை செய்த கோவில் என்பது மிகவும் சிறப்பு.