திரு நிலாத்திங்கள் துண்டம் பெருமாள் கோயில் Nilathingal Thundam Perumal Temple in Tamil

 விஷ்ணுவுக்கும் சிவபெருமானுக்கும் வேறுபாடு எதுவுமில்லை.  நாம்தான் வித்தியாசமாக பார்க்கிறோம் என்பதை  திருமாலே மெய்ப்பித்துக் காட்டிய சம்பவங்கள் எத்தனையோ உண்டு.  சிவபெருமானுடைய மனைவி பார்வதி தேவியை தனது தங்கையாக ஏற்றுக்கொண்ட திருமால் என்னென்ன வகையில் உதவி செய்திருக்கிறார் என்பது ஒரு பெரிய வரலாறு.  அதன் ஒரே ஒரு சம்பவத்தை மாத்திரம் இந்த காந்திபுரம் மண்ணில் மிகவும் அற்புதமாக திருநிலா திங்கள் துண்டம் கோயிலில் காணலாம்.  இந்தக் கோயில் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் உட்புறத்தில்  இருப்பதுதான் மிகப் பெரிய சிறப்பு.

 மூலவர்  நிலாத் திங்கள் தூண்டத்தான்.  விமானம்  புருஷ சுக்தம் நின்ற திருக்கோலம்.  தாயார்   நேர் ஒருவரில்லா  வள்ளி தாயார்.  தீர்த்தம் சந்திர புஷ்கரணி.  சிவபெருமானுக்குரிய பெருமையை பறைசாற்றும் விதத்தில் திருமாலை இந்த திருத்தலத்திற்கு வந்ததாக ஒரு தல புராணம் உண்டு.

 இன்னொரு தல புராணம் இது.  திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த எடுக்கும்பொழுது ஏற்பட்ட வெப்பத்தை நீக்குவதற்காக பிரம்மனை நோக்கி திருமால் பிரார்த்தனை செய்தார்.  அமிர்த கடல் வெப்பம் நீங்க வேண்டுமானால் காஞ்சியிலுள்ள சிவ பெருமான் குடிகொண்டிருக்கும் ஏகாம்பரநாதன் திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை  வணங்கினாள் போதும் என்று பிரம்மன்  வழிகாட்ட  திருமால் இக்கோயிலில் வந்து தவம் செய்தார்.

 சிவபெருமான் தலையில் இருக்கும் சந்திர ஒளி திருமால் மீது பட்டதும்  திருமாலுக்கு வெப்பம் நீங்கியது.  இதனால் பெருமாளுக்கு நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் என்று பெயர் வழங்கலாயிற்று.

 சிவபெருமானின் சடையில் அணிந்துள்ள  பிறைத்  துன்பத்தின் குளிர்ந்த ஒளி,  திருமால் மீது பட்டதால்,  திருமாலின் நோய் தீர்ந்தது.  அதனால் தான் நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டதாக இன்னொரு செய்தி.  ஒரு மாமரத்தின் கீழே பார்வதி தேவி தவம் செய்யும் பொழுது,  இந்த ஜெபத்தை சோதிக்க சிவன் அந்த  மாமரத்தை எரித்ததாகவும் அப்பொழுது பெருமாள் தனது அம்ருத கிரகணங்களை கொண்டு எரிந்து போன மாமரத்தை தழைக்கச் செய்து குளிர்ச்சியை உண்டு  பண்ணியதாகவும் மற்றும் ஒரு வரலாறு.  இந்த கோயிலில் பார்வதியின் அருகே வாமனர் இருக்கிறார்.  இந்த வாமனர் தான் மாமரத்தை தொலைக்க வைத்த பெருமாள் என்று புராணச் செய்தி கூறுகிறது.

 பரிகாரம்

 கோபத்தால் செய்த பஞ்சமஹா பாவங்கள் எதுவாக இருந்தாலும் அத்தகைய பாவங்களைப் போக்க இந்த ஸ்தலத்திற்கு வந்து   பெருமாளை சேவித்தால் போதும்.  அத்தகைய பாவங்கள் விலகி விடும்.  அது மட்டுமல்ல நெருப்பினால் எந்த வகையான ஆபத்தும் ஏற்படாமல் இருக்கவும்.  பொருள் நஷடம்   வியாபார நஷ்டம் ஏற்படாமல்  தடுக்கவும்,  பெரியவர்கள்,  பெரும் பதவியில் இருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாகி பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பாதிப்பு  நீங்கவும், ' கெமிக்கல்'  விஷம் சம்பந்தமாக நோயினால் திண்டாடிக் கொண்டிருப்பவர்கள்,  அதிலிருந்து விலகவும் இங்குள்ள பெருமாளை வேண்டி பிரார்த்தனை செய்தால் போதும்.   புண்ணியவானாக மாறிவிடலாம்.

Quickly Find What You Are Looking For