ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் பெருமாள் கோயில் Alwarthirunagari Temple in Tamil

தெய்வத்தை நேரிடையாக தரிசனம் செய்வதை விட ஆழ்வார்கள் மூலம் பகவானை அடையலாம் என்று ஒரு நம்பிக்கை முன்பு இருந்தது.  ஆழ்வார்கள் தங்களது பக்தியின் மேலீட்டால் பகவானை நினைத்த நேரத்தில் தரிசனம் செய்து விடும்  பாக்கியம் பெற்றிருக்கின்றனர்.  இதைவிட மேலாக சொல்லப்பட  வேண்டுமானால் மிக சாதாரண கீழ் குலத்தைச் சேர்ந்த ஒருவனுக்கும்,  ஆழ்வார்களுக்கு இணையாக பகவான் மோட்சம் கொடுத்த நிகழ்ச்சி திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் நடந்திருக்கிறது.

 திருநெல்வேலியில் இருந்து தென்கிழக்காக  சென்றால் 20 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்வார்திருநகரி என்னும் ஊர் வரும்.  அதுதான் திருக்குருகூர்.  தாமிரபரணி ஆற்றங்கரையில் 5 ஏக்கர் நிலப்பரப்பில்,  5 நிலை  இராஜகோபுரமும்,  மூன்று பிரகாரங்களும் கொண்டுள்ளது.  மூலவர் ஸ்ரீ ஆதிநாத பெருமாள்.  தாயார் ஆதிநாதவல்லி,  குருகூர் வல்லி.  விமானம் கோவிந்த விமானம்.  தலவிருட்சம் புளிய மரம்.  தீர்த்தம் தாமிரபரணி,  பிரம்ம தீர்த்தம்.  பிரம்மா,   தங்கன் முனிவர்,  மதுரகவியாழ்வார்,  நம்மாழ்வார் ஆகியோர் திருமாலின் திருமேனி அழகை நேரடியாக தரிசித்தனர்.

 சுயம்புவாக தோன்றிய மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம்.  இந்திரன் தன் பெற்றோர்களை உபசரிக்காமல்  சாபம் அடைந்து,  இத்தலத்தில் உள்ள பெருமாளை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றான்.  முனிவர்களுக்கு பெருமாள்  பூமி பிராட்டியுடன் வராக  வராக அவதாரத்தை காட்டிய இடம்.  தாந்தன் என்ற தாழ்த்தப்பட்டவனுக்கு பகவான் மோட்சம் கொடுத்ததால் தாந்த சேத்திரம் என்றும் பெயர் உண்டு.  ஸ்ரீ லக்ஷ்மி, பெருமாளை அடைய இங்கு தவமிருந்து பின்னர் திருமால் லட்சுமியை மாலையாக மார்பில் தரித்துக் கொண்ட  சேத்திரம்.

  காரியர்  உடைய நம்பிக்கு மகனாக பிறந்த சடகோபன் பிறந்ததிலிருந்து  அழமல் கண்விழிக்காமல்  உணவு கொள்ளாமல்  இருந்ததால்,  இந்த  கோவிலுக்கு கொண்டு வந்தனர்.  குழந்தை சடகோபன் இத்தலத்தை அடைந்ததும்,  தவழ்ந்து  கோயிலில் பிரகாரத்தில் உள்ள உரிய மரப்பொந்தில் அமர்ந்து உணவு உண்ணாமல் 16 வருஷம் இருந்தான்.  வட நாடு யாத்திரைக்கு சென்ற மதுரகவியாழ்வாருக்கு இந்த செய்தி கிடைத்தது.  திரும்பி வந்தார்.  புளியமரம்   பொந்தில் இருப்பவன் மஹா ஞானி என்றுணர்ந்து சடகோப நம்மாழ்வார் என்று பெயர் சூட்டினார்.  பின்னர் தான் நம்மாழ்வார் பாட பேச ஆரம்பித்தார்.

 அரையர் சேவை உண்டு.  திருவரங்கத்தை பூலோகவைகுண்டம் என்றாள்  இந்த ஆழ்வார் திருநகரி  பரமபதத்தின்  எல்லை  என்று சொல்வதுண்டு.  இங்குள்ள கல் நாதஸ்வரம் உறங்காத புளியமரம் மிகவும் விசேஷமானது.  நம்மாழ்வார், இராமானுஜர்,  ஸ்ரீ மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்த இடம்.

 பரிகாரம்

 ஊனமுற்றவர்களாக பிறந்தவர்கள் எந்த சிகிச்சையும் பயனளிக்காத அவர்கள்,  கண்பார்வையற்றோர்,  காது கேளாதவர்கள் முன்பிறவியில் செய்த பாவத்தின் காரணமாக பலவிதத்திலும் அல்லல்படுவோர்  அத்தனை பேர்களுடைய ஊழ்வினைகளும்  பஞ்சாய் பறந்து போக வேண்டுமானால்.  ஆழ்வார்திருநகரி வந்து ஆதிநாத பெருமாளுக்கு என்னென்ன பிரார்த்தனைகள் செய்ய  வேண்டுமோ அதை செய்தால் போதும்.  ஒரு அற்புதமான எதிர்காலம் அமையும்,   விதியும் மாறும்.

Quickly Find What You Are Looking For