திருத்தலைச்சங்க நாண்மதியம் பெருமாள் கோயில் Thalai Sanga Nanmathiyam Temple in Tamil
மாயவரம் என்று சொல்லப்பட்டு வந்த மயிலாடுதுறையிலிருந்து வடகிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவில், சங்குவனம், சங்காரண்யம். தலைச் செங்கானம் என்னும் பல்வேறு பெயர்களைக் கொண்ட புண்ணிய பெருமாள் தலம் ஒன்று உண்டு. தற்சமயம் தலச்சங்காடு என்று ஒரு பெயரும் உண்டு. இங்கேயும் 'திருமால்' தன் கருணை வெள்ளத்தால் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் என்பது மனதிற்கு உற்சாகத்தை தரும் செய்தி.
சிறிய கோவில் ஒரே ஒரு பிரகாரம் கொண்டது. கருவறையில் மூலவர். நாண்மதியப் பெருமாள். திருமகள் பூமி தேவியுடன் நின்ற திருக்கோலம் தாயார். தலைச்சங்க நாச்சியார். உற்சவர் வெண்சுடர்ப் பெருமாள், விமானம் சந்திர விமானம், தீர்த்தம், சந்திர புஷ்கரணி, சந்திரன், தேவப் பருந்தங்கர், தேவர்கள், நித்திய சூரியகளுக்கு பெருமாள் நேரடியாக தரிசனம் கொடுத்ததாக வரலாறு.
சந்திரனுக்குரிய சாபம் நீங்க சந்திரனே இங்கு வந்து பெருமாளை தரிசித்து நாமும் நீங்கியதாக ஒரு வரலாற்று குறிப்பு இருக்கிறது. திருமால் தவம் செய்யப் போன பொழுது தனது துணைவியான திருமகளை திருவலம்புரத்திலுள்ள வடுவாகிர்கண்ணியம்மையின் தோழியாக விட்டு விட்டு சென்றார். இந்த திருத்தலைச் சங்கபாட்டுத் தலத்தில் சிவபெருமானை நினைத்து கடுந்தவம் புரிந்த போது சிவபெருமான் பஞ்சசன்யம் என்னும் சங்கினைப் பெருமாளுக்கு கொடுத்தார். திருமாலுக்கு சங்கினை வழங்கியதால், சிவபெருமானுக்கு சங்க கருணாதேஸ்வரர், சங்காரண்யேஸ்வரர், சங்கவனநாதர் என்ற சிறப்புப் பெயர் உண்டு. சங்கினைப் பெற்றதோடு இல்லாமல், மறுபடியும் திருவலம்புரத்திலுள்ள அம்மையை தவம் புரிந்து பத்மமும் அவற்றை தாங்கக்கூடிய இரு கைகளையும் பெற்றார் என்பது இன்னொரு தல வரலாறு.
சங்கினை பெற்ற ஸ்தலம் என்பதால் இந்த ஸதலத்திற்கு திருத்தலைசங்க நாண்மதியம் என்ற பெயர் வந்தது. இதையெல்லாம் கூர்ந்து கவனித்த பொழுது இங்கு பெருமாளை விட சிவபெருமானுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக திரிகிறது. திருமங்கையாழ்வார் இந்த கோவிலுக்கு பாசுரம் பாடி இருக்கிறார்.
பரிகாரம்
நினைத்ததை அடைய வேண்டும் என்பவர்களும் வெளிநாட்டில் சில எதிர்பார்ப்புகளை எதிர்பார்க்கிறார்களும் வியாபார ரீதியாக புதிய முயற்சியில் இறங்க துடிப்பவர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பவர்களுக்கும் இந்த ஸ்தலம் ஒரு வரப்பிரசாதமாகும். இங்குள்ள சந்திர புஷ்கரணியில் ஸ்நானம் செய்து, சிவனை மனதில் தியானம் செய்துவிட்டு - விஷ்ணுவை பிரார்த்தனை செய்தால் நினைத்ததை விட அதிகமானவற்றை அடைய முடியும். பெருமாளுடைய கிருபையின் சிவபெருமானுடைய வாழ்த்தும் கிடைப்பதால் ஆயுள் பலமும் சௌபாக்கிய பலமும் பரம்பரை பரம்பரையாக கிடைக்கும் என்பது நீண்ட நாள் நம்பிக்கை.