திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோயில் Arulmigu sri Vilakoli Perumal Temple in Tamil

 படைப்பது எளிது படைத்த பின்பு அதை காப்பது தான் கஷ்டம்.  இந்த கஷ்டமான காரியத்தை 'எம்பெருமான்'  அன்று முதல் இன்று வரை ஆனந்தமாக செய்து வருகிறார்.  பிரார்த்தனை செய்தவுடன் பகவான் காப்பாற்ற வரவில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம்.  பிரார்த்தனை  செய்வதுதான் நமது கடமை மற்றவை எம்பெருமான் கவனமாக பார்த்துக் கொள்வார்.  இதை உறுதி செய்வதற்காக  எழுப்பப்பட்ட கோயில்தான் காஞ்சிபுரத்தில்   அஷ்டபுயகரத்திற்கு அருகேயுள்ள  திருத்தண்கா கோயிலாகும்.

 தூப்புல்,  திருத்தண்கா,  விளக்கொளி பெருமாள் என்று வெவ்வேறு தேர்தலுடன் விளங்கி வரும் இந்த கோயில் குமார் 3 ஏக்கர் நிலப்பரப்பளவில் 3 நிலை இராஜகோபுரத்துடன்,  இரண்டு பிரகாரங்களைக் கொண்டது.  மூலவர்,  விளக்கொளி  பெருமான்.  இறைவனுக்கு தீபப் பிரகாசர்,  திவ்யப் பிரகாசர் என வேறு பெயர்களும் உண்டு.  தாயா மரகதவல்லி தாயார்.  தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம் விமானம்  ஸ்ரீகர விமானம்.

 இது அஷ்டபுயகர  ஸ்தல  வரலாற்றை பெரிதும் கொண்டிருக்கிறது.  ஆனால் சிறு மாற்றம் உண்டு.  சரஸ்வதி தேவி துணையில்லாமல் தன்னால் யாகம் நடத்தி திருமாலை நேரடியாக தெய்வ தரிசனம் காண முடியும் என்ற வேகத்தில் பிரம்ம தேவன்  தன்னிச்சையாக நின்று யாகம் செய்ய ஆரம்பித்தார்.  பிரம்ம தேவனுக்கு தான் யார் என்பதை காட்ட சரஸ்வதி தேவி' 'மாயநலன்'  எனினும் கொடிய அரக்கனை ஏவி யாகத்தைத் தடை செய்ய சொன்னாள்.  சரஸ்வதி தேவைக்காக அந்த மாய நலன் இந்த உலகம்  முழுவதையும் இருட்டாக்கி விட்டான்.

 பிரம்மதேவர் இந்த கொடுமையை சொல்லி,   திருமாலிடம் வேண்ட திருமால் ஒரு பேரொளியாக தோன்றியதோடு தனது கையில் ஒளி விளக்கை ஏற்றி இருட்டை போக்கி பிரம்மாவுக்கு உதவினார்.  அதனால் தான் இந்த ஸ்தலத்திற்கு விளக்கொளி பெருமாள் கோவில் என்று பெயர் வந்தது.  ஸ்ரீ பாஷ்யகார சித்தாந்தம் பொதித்த  ஸ்ரீவேதாந்த தேசிகர் இத்தளத்தில் அவதரித்தததனால் இந்த தளத்திற்கு பெருமை.  திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

 பரிகாரம்

  வாழ்க்கையே  இருண்டு போய் விடுமோ என்று தினமும் பயந்து கொண்டிருப்பவர்கள்.  ஒவ்வொரு நாளும் கெட்ட சொப்பனத்தாலும்,  ஏவல்,  பில்லி,  சூன்யம்  போன்ற  துர்தேவதைகளால்  மனதளவில்  பாதிக்கப்படுபவர்களும்,  சுபகாரியங்கள் தடைப்பட்டு கொண்டிருக்கிறதே என்று வருகிறவர்களும்,  எந்தெந்த உருவத்தில் கெடுதல் வருமோ என்று பயத்தால் முன்பு கொண்டிருப்பவர்களும் இந்த விளக்கொளிப் பெருமாள் கோவிலில் வந்து மூன்று வேளைகளிலும் பிரார்த்தனை செய்தாள் பகவான் ஒளி ரூபமாக வந்து அத்தனை கஷ்டங்களையும் தீர்ப்பார் என்பது காலம் காலமாக நிலவி வரும் ஐதீகம்.

Quickly Find What You Are Looking For