திருத்தொலைவில்லி மங்கலம் பெருமாள் கோயில் Thiruththolaivilli Mangkalam Temple in Tamil

 முன்காலத்தில் யார் சாபம்  விடுகிறார்கள்,  எப்போது இடுகிறார்கள் என்பது தெரியாது.  ஆனால் யார்  சாபமிட்டாள் அந்த சாபம் பலித்தது.  பிறகு சாபவிமோசனமும் திருமால் அருளால் கிடைத்தது என்பது புராணங்களில் காணப்படுகிறது.  இதற்கேற்ப சில சம்பவங்கள் தாமிரபரணி நதிக்கரையில் நடந்திருக்கின்றன.  அவற்றுள் இரட்டைத் திருப்பதி என்றழைக்கப்படும் தேவபிரான் திருக்கோவிலும்,  தாமரைக்கண்ணன் திருக்கோவிலும் ஒன்று.

 தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஆழ்வார் திருநகரில் இருந்து வடகிழக்காக திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் ஸ்தலம் இருக்கிறது.  இங்கு தேவபிரான் திருக்கோவில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு பிரகாரங்களுடன் இருக்கிறது.  மூலவர் தேவபிரான் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.   தாயார் உபயநாச்சியார். தீர்த்தம்  வருண தீர்த்தம் தாமிரபரணி,  விமானம் குமுத விமானம்.  தலவிருட்சம் விலாமரம்.

 யாகம் செய்வதற்காக பூமியைத் தோண்டிய போது சுப்ரபர்  முனிவர் கையில் ஒரு தராசு,  வெல்லும் கிடைத்தது.  அடுத்த நிமிடம் அவை இரண்டும் ஆணாகவும்,  பெண்ணாகவும் மாறியது. " குபேரன் இட்ட சாபம் இது.  தங்களின் கை பட்டதால் மீண்டும் மனித உருவம் பெற்றோம்"  என்று சுப்ரபர் முனிவரிடம் நன்றி கூறி விடை பெற்றார்.  இந்திரன், வாயு,  வருணன் போன்றோர் இத்தலத்தில் தவமிருந்து இறைவனை கண்டதாக வரலாறு.  பாண்டிய நாட்டு நவ திருப்பதிகளில் இது கேது ஸ்தலமாக போற்றப்படுகிறது.

 இரட்டை திருப்பதிகளில் இன்னொன்று செந்தாமரைக் கண்ணன் திருக்கோயில்.  ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு பிரகாரங்களுடன் கூடியது.  மூலவர் செந்தாமரைக்கண்ணன்.  ஆதிசேஷன் மீது வீற்றிருந்த திருக்கோலம்.  தாயார் பெயர் கருந்தடங்கண்ணியார்.  தீர்த்தம் வருண தீர்த்தம்.  விமானம் குமுத விமானம்.

கங்கை நதிக்கரையில்  வசித்துவந்த  சத்யசிலரின்  மகனான விபீதகனுக்கு  குஷ்டம் பிடித்தது.  நாரத முனிவர் கட்டளைப்படி விபீதகன்  இந்த தளத்திற்கு வந்து அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கினான்.  இன்னொரு செய்தியும் உண்டு.  யாகத்தின் புண்ணியம் எல்லாம் தேவர்களுக்கு மட்டுமே போய் சேருகிறது.  இதில் தனக்கு  பங்கு வேண்டும்  என்று அஸ்வினி தேவன் பிரம்மாவிடம்  முறையிட்டார்.  ஊடகம் என்று தாமிரபரணி நதிக்கரையில் கோயிலில் குடி கொண்ட அரவிந்தலோசன  பெருமாளை வழிபட்டால் யாகத்தின் புண்ணியம் உனக்கு கிடைக்கும் என பிரம்மா சொல்ல,  அஸ்வினி தேவன் இங்கு வந்து வழிபட்டு பெருமாள் புண்ணியத்தால் யாகத்தின் பலனை பெற்றான்.  செந்தாமரை கொண்டு அஸ்வின் பூஜித்தான்.  அதனால் பெருமாளுக்கு செந்தாமரைக்கண்ணன் என்று பெயர்.  நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

 பரிகாரம்

 தெரிந்தோ தெரியாமலோ  முன் ஜென்ம  பாவம் இன்னும் நம்மை சுற்றிக்   கொண்டிருந்தால் அது விலகவும்,  நமக்கு கிடைக்கவேண்டிய பணம்,   சொத்து,  பொருள்,  நிதி,  தடைகள் நீங்கி கிடைக்கவும்,  ஜாதிகள் தொல்லை படுத்தாமல் ஒதுங்கி செல்லவும்,  பிரார்த்தனைகள் ஜெயிக்கவும் இரட்டை திருப்பதி  என்னும் இந்த ஸ்தலத்திற்கு  வந்து என்னென்ன பிரார்த்தனைகளை முறைப்படி செய்ய வேண்டுமோ அதை செய்தார் புனிதனாக மாறி நிம்மதியான வாழ்க்கையை பெறலாம்.

Quickly Find What You Are Looking For