திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் பெருமாள் கோயில் Thirukkurungudi Temple in Tamil
சிவ வைணவ பேதம் வரக்கூடாது என்பதற்காக அந்த காலத்திலிருந்தே கோயில்களில் சிவ வைணவ சன்னதிகளை உண்டாக்கினர். அப்படிப்பட்ட அருங் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பாண்டிய நாட்டு திருப்பதிகளில் முக்கியமானதாக விளங்கும் திருக்குறுங்குடியும் ஒன்றாகும். சுற்றுப்புறம் இயற்கை எழில் நிரம்பி கண்ணுக்கும், மனதுக்கும் உற்சாகத்தை தரும்படி அமைந்திருக்கிறது இந்த திருக்கோயில்.
திருநெல்வேலியில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் நான்கு நெறிக்கு வந்து அங்கிருந்து வேறு ஒரு பஸ்ஸில் 12 கிலோமீட்டர் கடந்தால் திருக்குறுங்குடி வரும். மூலவர் நின்றநம்பி. இதைத் தவிர குறுங்குடி நம்பி, திருப்பாற்கடல் நம்பி, மலைமேல் நம்பி என்று வேறு பெயர்களும் உண்டு. தாயார் குறுங்குடிவல்லி நாச்சியார். தீர்த்தம் திருப்பாற்கடல். பஞ்சதுறை சிந்துநதி. விமானம் பஞ்சகேதக விமானம். சிவபெருமானுக்கு திருமால் பிரட்சியமான ஸ்தலம்.
இந்தக் கோயிலில் தாயாருக்கு தனி சன்னதி இருந்தாலும் அர்ச்சனை கிடையாது. நின்ற நம்பி, கிடந்த நம்பி இந்த இரு சன்னதிக்கும் இடையில் சிவன், பைரவர் சன்னதி உண்டு. பெருமாள் மடப்பள்ளி இவர்களுக்கும் நைவேத்யம் செய்யப்படுகிறது. அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திருப்பாற்கடல் ஓடையில் திருப்பாற்கடல் நம்பி சன்னதியும், பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைமேல் மலைமேல் நம்பி சன்னதியும் இருக்கிறது. ஊருக்கு கிழக்கே திருமங்கையாழ்வார் திருவரசு என்றும் கோயிலும் ஊரில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் திருப்பரி வட்டப்பாறை மேல் உடையவர் சன்னதியும் உண்டு.
உடையவரை பெருமாள் காப்பாற்றி அவருக்குத்தானே சீடனாக இருந்து உபதேசம் பெற்றார். கைசிக துவாதசியன்று நம்பாடுவான் எனும் பக்தர் பிரம்ம ராட்சசனுக்கு தன் புண்ணியத்தின் ஒரு பாகத்தை கொடுத்து ரட்சித்தார். பகவான் வாமன திருவிக்ரம அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்த போது அவரது திருவடி இலங்கையிலிருந்து சிலம்பாறு இங்கு உண்டானதாக ஐதீகம்.
கொள்வது என் தொழில் என்று சொன்ன அரக்கனுக்கு 'கொள்வது பாவம்' என்று வாதிட்ட பிராமணனுக்கு பகவான் நேரிடையாக தரிசனம் தந்து அவர்களுக்கு உபதேசித்து இருவருக்கும் முக்தி கொடுத்தார். பிரம்மாவின் தலையைக் கிள்ளி கபாலம் கையில் ஒட்டிக் கொள்ள சிவபெருமான் இந்த திருக்குறுங்குடி பெருமாளை வணங்கி சாபம் வாங்கினாராம். இவன் சுதர்சன மந்திரம் ஜெபித்த ஸ்தலம். பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் பாடியிருக்கிறார்கள்.
பரிகாரம்
கஷ்டங்கள் இருவருக்கும் பொது பாவம் செய்யத் தோன்றும். எனவே பாவத்தை செய்யாமல் இருக்க நமக்கு கஷ்டம் வரக்கூடாது. அந்த கஷ்டம் வராமல் இருக்கவும் வந்த அனைத்து கஷ்டங்களும் உடனடியாக விலகிப் போகவும், நோய்களினால் உள்ளமும், உடலும் கெட்டு தீண்டாடாமல் இருக்கவும், மாணவர்கள் நன்கு படிக்கவும், குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலைக்கவும் வானமாமலை ஜீயர் கட்டுப்பாட்டில் இயங்கும் தோத்தாரி நாத பெருமாளை வணங்கி, அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தைலத்தை உண்டு வந்தால் போதும். வாழ்க்கை இனிக்க ஆரம்பிக்கும்.