திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் Pandava Thoothar Perumal Temple in Tamil

காஞ்சிபுரம்  கோயில்கள் அத்தனைக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புண்டு.  திருமால் பலமுறை பக்தர்களுக்கு நேரடியாக காட்சி தந்த புண்ணிய பூமி.  யமுனை கரையில் இருந்த கிருஷ்ண பரமாத்மா காஞ்சிபுரத்தில் அருள்பாலித்த பல அதிசய சம்பவங்கள் இங்கு உண்டு  பிரார்த்தனை செய்தால் பகவான் எங்கு வேண்டுமானாலும் வந்து அருள்பாலிப்பார் என்பதை  காதால் கேட்டதுண்டு.  ஆனால் இந்த திருப்பாடகதத்தில் நடைமுறையாக  நடந்ததும் உண்மை.

 காஞ்சிபுரம்  திரு ஏகாம்பரநாதர்  கோவிலுக்கு  தென்மேற்கே அமைந்திருக்கிறது  திருப்பாடக பெருமாள்  கோயில்.  மூன்று நிலை இராஜகோபுரம் ஒரே ஒரு பிரகாரம்.  மூலவர் ஸ்ரீ பாண்டவத் தூத பெருமாள்.  வானம் சத்ர விமானம்.  28 அடி உயரத்தில் பெருமாள் வீற்றிருக்கிறார்.  தாயார் ருக்மணி தேவி.  தீர்த்தம் மத்ஸ்ய தீர்த்தம்.

 பாண்டவர்களின் பெரிய பலம் கிருஷ்ணன்.  இதையறிந்த  துரியோதனன்  கண்ணனை  அழித்து விட்டால் பாண்டவர்களை எளிதில் வென்று விடலாம் என்று எண்ணி,  கண்ணனை தன் இடத்திற்கு நயவஞ்சகமாக அழைத்தான்.  கண்ணன் அமரக்கூடிய  இடத்தில் ஒரு ஆசனத்தை போட்டு அதன் அடியில் ஒரு நிலவறையை அமைத்தான்.  அந்த ஆசனத்தில் அமர்ந்தவுடன் கண்ணன்,  அந்த ஆசனத் தோடு பாதாளத்தில்  விழுவான்.  அங்கிருக்கும் மற்போர் வீரர்கள்,  உடனே கண்ணனை கொல்ல வேண்டுமென்று திட்டம் தீட்டி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம்  செய்தான் துரியோதனன்.  கண்ணனும்,  துரியோதனன் அழைப்பை ஏற்று,  அவன் இடத்திற்கு வந்து அங்கு  தனக்காக போடப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்தான்.  துரியோதனன் திட்டமிட்டபடி அந்த ஆசனம் பாதாள குகையில் விலை அங்கு இருந்த வீரர்கள் கிருஷ்ணனைக் கொல்ல முயற்சி செய்தனர்.  பகவான் கிருஷ்ணனும் விஸ்வரூபம் எடுத்து அந்த மல்யுத்த வீரர்களை கொன்றார்.

 இந்தக் கதையைக் கேட்ட ஜனமே ஜெய அரசன்,  காஞ்சிபுரத்தில் அசுவமேத யாகம் செய்து பகவான் கிருஷ்ணனை வரவழைத்து அன்றைக்கு பாதாள அறையில் விஸ்வரூபம் எடுத்து கொன்ற காட்சியை நினைவு படுத்தி தனக்கு இங்கேயே அந்த விஸ்வரூப  காட்சியை காட்ட வேண்டும் என்று வேண்டினான்.  பக்தர்களுக்காக பகவான் ஸ்ரீ  கிருஷ்ணன் அந்த விஸ்வரூப காட்சியைக் காஞ்சிபுரத்தில் காட்டிய இடம் தான் திருப்பாடகம்.  திருமங்கை,  பூதத்தாழ்வார்,  பேயாழ்வார் திருப்பாடக ஸ்தலத்தை  மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.

 பரிகாரம்

  பகவான் நமக்கு மறைமுகமாக உதவி செய்ய வேண்டும் என்றாள் அதற்கு மிக சாதாரண பிரார்த்தனைகளே போதும்.  ஆனால் pavan நேரடியாகவும் தரிசனம் தர வேண்டும் எனில்  'ஹோமம்'  செய்வதின் மூலம் அந்த பாக்கியத்தைப் பெறலாம் என்பது உண்மை.  காரியத்  தடைகள்  நீங்க வேண்டுமென்றாலும் புதிய முயற்சியில் வெற்றி  வாகை சூட வேண்டும் என்றாலும் திருப்பாடகம் வந்து இங்குள்ள கோயிலில் வளர்பிறை சதுர்த்தி அன்று பெருமாளை வேண்டிக் கொண்டு ஹோமம் செய்தால் போதும்.  பகவான் அத்தனை தடங்கல்களையும் போக்கி ஆனந்தமான வாழ்க்கையை அள்ளித் தருவார்.

Quickly Find What You Are Looking For