அழகர் கோவில் Alagar Koyil in Tamil
கருணையே வடிவம் தான் திருமால் என்றாலும் சில சமயம் தனது போர்க்குணத்தையும் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எல்லாக் கோவில்களும் காணாத ஒரு யுத்த போர் வீரன் போல் வித்தியாசமான தரிசனத்தை பெருமாள் காட்டுகின்ற ஒரு இடம் மதுரைக்கு பக்கத்தில் உண்டு. திருமாலின் அந்த கொடூரமான பாவத்திலும் கருணை மழை பொழிகிறது. இதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது.
மதுரையிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருமாலிருஞ்சோலை. சுற்றிலும் அழகிய மலைகள். அற்புதமான இயற்கை எழில்கள். இதற்கு மற்றுமொரு பெயர் அழகர் கோவில். சுற்றிலும் மிகப்பெரிய மதில் சுவர்கள். மூலவர் அழகர், கள்ளழகர், மாலாங்காரர், மாலிருஞ்சோலை நம்பி என்ற வேறு பெயர்களும் உண்டு. நின்ற திருக்கோலம். தாயார் சுந்தரவள்ளி, தீர்த்தம் நூபுர கங்கை, சிலம்பாறு, தலவிருட்சம் வ்ருஷ்பகிரி, சந்தன மரம். விமானம் சோமஸுந்தர விமானம். தர்ம தேவதைக்கும் மலயத்வஜ பாண்டியனுக்கும் பகவான் நேரடியாக காட்சி தந்த ஸ்தலம்.
உற்சவர் முழுவதும் தங்கத்தால் ஆனவர். மூலவர் உற்சவர் இருவருமே பஞ்ச் ஆயுதங்களுடன் விளங்குகின்றனர். பதினெட்டாம்படி கருப்பு என்ற தேவதை காவல் புரிவதாக சொல்லப்படும் கோபுர வாசல் சமீப காலமாக திறக்கப்படுவதை இல்லை. வேறொரு கதவு வழியாக தான் தரிசனத்திற்கு செல்ல வேண்டும். கோயிலுக்கு அருகே உள்ள மலை மேல் நான்கு கிலோமீட்டர் சென்றால் சிலம்பாறு என்னும் நூபுர கங்கை சிறிய அருவியாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது.. திருவிக்கிரம அவதார காலத்தில் பிரும்மா, பகவான் பாதத்தில் நம் மண்டலத்தால் தீர்த்தம் சேர்த்தார். அந்த நீ தெறித்து விழுந்த இடம் 'சிலம்பாறு' என்று சொல்லப்படுகிறது. இங்கே க்ஷேத்திர பாலருக்கும் ஒரு சன்னதி உண்டு. அர்ச்சகர்கள் கோயில் சாவியை இரவில் இவரிடம் ஒப்படைத்துப் போவதாக ஐதீகம்.
ராமானுஜர், ஸ்ரீ மணவாள மாமுனிகள், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கிறார் திவ்ய தேசம்.
பரிகாரம்
நிம்மதியாக நாம் தூங்க வேண்டும் என்றார் நமது பொருட்கள் பத்திரமாக பாதுகாக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நமது வாழ்க்கை அமைதியாக செல்ல வேண்டுமென்றால் பகவானிடம் முற்றிலுமாக சரணடைந்து அத்தனையும் அவன் ஒரு பாதத்தில் வைத்து விட வேண்டும். அழகர் மலை காட்டில் விஸ்வரூபம் போல் நின்ற பஞ்ச் ஆயுதங்களால் எதிரிகளை விரட்டி நம்மை நிர்ப்பயமாக இருக்க வைத்து பார்த்துக் கொண்டிருக்கும் திருமாலிடம் நாம் நமது கவலைகளை நேரில் சென்று ஒப்படைத்து விட்டால் போதும். திருமால் நம்மை ஒரு போதும் கைவிடமாட்டார் இது சத்தியம்.