திருச்செம்பொன் செய் பெருமாள் கோயில்
பெருமாளை ஒரு சமயத்தில் பார்த்தாள் விளையாட்டு குழந்தை. இன்னொரு சமயத்தில் பார்த்தால் மகாகுரு. இப்படி திருமால் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை தினமும் அரங்கேற்றி விளையாடிக் கொண்டிருக்கிறார். என்பது அனுபவப்பட்டவர்களுக்குத் தான் தெரியும். ராவணனுக்கும் மோட்சம் கொடுத்த பெருமாள். இராவணனைக் கொன்ற ஸ்ரீராமனுக்கும் கொலைபாதக பிரம்மஹத்தி தோஷத்தை போக்கினார். அத்தகைய சம்பவங்களில் ஒன்று இந்த செம்பொன் செய்கோவிலிலும் நடந்தது என்பது மிகச் சிறப்பு. இந்த கோவில் சீர்காழி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இதுவும் திருநாங்கூரில் உள்ள ஸதலம்.
மூலவர் ஸ்ரீ பேரளுளாளர் பெருமாள், நின்ற திருக்கோலம், வலது புறம் திருமகள் இடதுபுறத்தில் பூமிதேவி. தாயார் அல்லி மாமலர் நாச்சியார். தீர்த்தம் ஹேம புஷ்கரணி, விமானம் கனக விமானம். உற்சவர் செம்பொன்னரங்கர். இந்த கோயிலிலுள்ள குளித்து, 32,000 முறை அஷடாஷர மந்திரத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் இங்கேயே தங்கி ஜபித்தால் அவர்கள் செய்கின்ற, செய்த அனைத்து பாவங்களும் விலகும் என்பது நம்பிக்கை. தை அமாவாசைக்கு அடுத்த நாள் இங்கு நடக்கும் கருட சேவை மிகவும் விசேஷமானது. ருத்ரன், த்ருட் நேத்தரமுனி பெருமாளுக்கு நேரடியாகவே பெருமாள் தரிசனம் கொடுத்ததாக வரலாறு.
இராவணனை வதம் செய்த பின்னர், இராமர் அயோத்திக்குத் திரும்பி கொண்டிருக்கும் பொழுது இந்தத் ஸதலத்தில் தியானம் செய்து கொண்டிருந்த த்ருடநேத்ர முனிவரைச் சந்தித்தார். இராவணனைக் கொன்ற பிரம்மகத்தி தோஷம் நீங்க, தங்கத்தால் ஒரு பசு செய்து அதற்கு இந்த ஆசிரமத்திலேயே பூஜை செய்து அதை ஒரு பிராமணருக்கு தானம் செய்ய வேண்டும் என்று அந்த த்ருட் நேத்ர முனிவர் சொன்னார். இராமனும் அவ்வாறு இந்த ஸதலத்தில் செய்தார். இராமனிடமிருந்து அங்க பசுமை வாங்கிக்கொண்ட அந்தப் பிராமணன். அந்த தங்க பசுவைக் கொண்டு பெருமானுக்கு இந்தக் கோயிலைக் கட்டினான். அதனால் இந்த ஊர் கோயிலுக்கு செம்பொன் செய்த கோயில் என்று பெயர் வந்தது என்று கூறுவர். உண்மையில் மிகச் சிறப்பான அமைப்புகளைக் கொண்டது இந்த கோயில்.
பரிகாரம்
இராமபிரானுக்கு ' பிரம்மஹத்தி' தோசை போன கோவில் ஸதலம் என்பதால் சாதாரண பக்தர்களுக்கும் தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களைப் போக்குவதற்கும் எதிர்கால இல்லற வாழ்க்கையைப் பிரச்சனை இல்லாமல் மாற்றுவதற்கும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் போதும் பசுவைக் கொன்றவர்கள், பிறர் சொத்தை ஏமாற்றி அபகரித்தவர்கள் பொய் சொல்லி மற்றவர்கள் குடும்பத்தை கிடைத்தவர்கள் ஆகிய அத்தனை பேர்களும் தங்கள் தவறுகளை மனதில் வைத்து கஷ்டப்படாமல் இங்கு வந்து பரிகாரம் செய்தால் போதும். திருமால் அவர்களை மன்னித்து பாவங்களைக் களைந்து விடுவார்.