திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் Tirukostiyur Temple in Tamil

வைணவம் என்பது தனி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல.  எல்லோருக்கும் சொந்தம்.  திருமால் எப்படியோ அப்படித்தான் வைணவமும்.  இதில் மூடி மறைக்கக் கூடிய விஷயம் வேறு எதுவும் இல்லை என்பதை ஆன்மீகவாதிகளுக்கு அந்த காலத்திலே சொன்ன ஒரு வரலாற்று சிறப்புமிக்க வைணவத் தலம் திருக்கோஷ்டியூர் தான்.  இதை ஒரு யுகப்புரட்சி என்றுகூட சொல்லலாம்.  அப்படிப்பட்ட புனித மண்ணின் பெருமை வானளாவியது.

 சிவகங்கையில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருக்கோஷ்டியூர்.  5 நிலை இராஜகோபுரம்,  பிரகாரங்களுடன்,  சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் மிக பிரம்மாண்டமான  கோயிலில் மூலவர் ஸ்ரீ ஊரக மெல்லணையான் பெருமாள் புஜங்க சயனத்தில் காட்சியளிக்கிறார்.  உற்சவர் சௌம்ய நாராயணன். திருமகள் பூதேவி தரிசனம்.  திருமாமகள் நாச்சியார்.  தலவிருட்சம் பலாமரம்.  தீர்த்தம் வேத புஷ்கரணி.  விமானம் அஷ்டாங்க விமானம்.

 இந்த கோவில் நான்கு மாடிகளைக் கொண்டது.  ஊரக மெல்லணையான் சயனத் திருக்கோலம்,  தட்சிணேஸ்வர  நரசிம்மன். உத்தரேஸ்வர நரசிம்மன் க்ஷிராப்தி நாதன் ஸ்தித நாராயணனின் ஸந்நிதிகளில் மென்று இருந்த கிடந்த நடந்த கூத்தாடிய திருக்கோலத்தைக் காணலாம்.  இரண்டாவது,  மூன்றாவது மாடுகளில் நின்ற விழுந்த திருக்கோலம்,  நான்காவது மாடியில் எம்பெருமான் ramanujan திருமந்த்ரார்த்த்தை வெளிப்படையாக உபதேசித்தார்.  அதாங்க விமானம் மயனாலும் விஸ்வ கர்மாவினாலும் கட்டப்பட்டவை. ஹிரணியனால்  துன்பம் அடைந்த தேவர்கள் திருமாலிடம் தஞ்சமடைந்தனர்.  அப்போது எப்படி ஹிரண்யனைக் கொள்ளலாம் என்பதை தேவர்களும் பிரம்மா விஷ்ணு சிவன் இங்கு கூடி நரசிம்ம அவதாரம் எடுத்த முடிவு செய்தார்கள்.  எல்லோருமே ஒன்று சேர்ந்து கோஷ்டியாக கூடியதால் திருக்கோஷ்டியூர் என்று பெயர் வந்தது.  ஊருக்கெல்லாம் திருமந்திர உபதேசத்தை,  குருவின்  ஆணைக்கும்  மீறி பொதுமக்களுக்கு சொன்ன ராமானுஜரின் சிலை கோயிலின் நாலாவது மாடியில் நிறுவப்பட்டிருக்கிறது.

 பூதத்தாழ்வார்,  பேயாழ்வார்,  திருமழிசையாழ்வார்,  பெரியாழ்வார்,  திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்து இருக்கின்றனர்.  இக்கோவில் சிவகங்கை சமஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

 பரிகாரம்

 பொழுது விடியும் முன்பே துன்பங்களை சந்திக்கிறவர்களும்  வீண் வம்பு   தொல்லைகளில் மாட்டிக்கொண்டு நீதிமன்றத்தில் கால காலமாக நடந்து கொண்டிருப்பவர்களும் நல்ல  'குரு'  கிடைக்காமல்  திண்டாடி கொண்டிருப்பவர்களும் அடிமைகளாய் பயந்து வாழ்க்கையை வீணாக கிழித்துக்கொண்டு இருப்பவர்களும் மன நிம்மதியைத் தேடி   அலைகிறவர்களும்  திருக்கோஷ்டியூர் ஸ்ரீ ஊரக மெல்லணையான் சன்னதியில் மனம்விட்டு பிரார்த்தனை செய்தால் அவர்களுக்கு சகல விதத்திலும் பெருமாள் அனுகிரகம் கொடுத்து காப்பாற்றுவார்.

Quickly Find What You Are Looking For