திருத்துவாரகை

 பிறந்தது பெரிதல்ல,  எப்படி வாழ்கிறோம்  நமக்கு இந்த ஜென்மத்தில் முக்தி கிடைக்குமா என்பது தான் பெரிது.  முக்தி என்பது பகவான் நமது புண்ணியத்திற்கு கொடுக்கும் ஒரு பாராட்டு பத்திரம்.  இந்தியாவில் ஜனங்களுக்கு முக்கிய கொடுப்பதற்காகவே பகவான் ஏழு ஸதலங்களை   நிர்மாணம் செய்திருக்கிறார்.  அவற்றில் முக்கியமாக ஸ்தலமாக இருப்பது திரு துவாரகை ஆகும்.

 பம்பாய்,  அகமதாபாத் வீராமகாம்,  ராஜ்கோட்,  ஜாம்நகர் வழியாக ஒகா  துறைமுகம் செல்லும் பாதையில் துறைமுகத்திலிருந்து சுமார் 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது துவாரகா.  இங்கிருந்து மிகப் பக்கத்தில் இருப்பது துவாரகா கோவில்.  மூலவர் கல்யாண நாராயணன். 'த்வாரகாதீசன்' என்று வேறு பெயரும் உண்டு.  நின்ற திருக்கோலம் மேற்கே பார்த்து தரிசனம் கொடுக்கிறார்.  தாயார் கல்யாண நாச்சியார்.  ருக்மணி லக்ஷ்மிஸ்ரீ  என்று சொல்வதுண்டு.  தீர்த்தம் கோமதி நதி ஸமுத்திர சங்கமம் விமானம் ஹேமா கூட விமானம்.  திரௌபதிக்கு பகவான் நேரடியாகப்  பிரத்யக்ஷம்.

 ஜராசந்தன் எனும் அரக்கன் ஜனங்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்க ஸ்ரீகிருஷ்ணன் சமுத்திர ராஜனிடம் கேட்டு வாங்கி,  விஸ்வகர்மாவை கொண்டு  துவாரகையை உண்டாக்கியதாக வரலாறு.  மோட்சத்திற்கு  துவாரமாக இருப்பதால் துவாரகை என்று பெயர் உண்டாயிற்று.  கோவிலில் இருந்து கீழே இறங்கி சென்றான் கோமதி நதி கடலில் சங்கமம் ஆகும் இடத்தை பார்க்கலாம். ஒக துறைமுகத்திலிருந்து  விசைப்படகு மூலம் தீவு துவாரகையை அடையலாம்.   இங்கேதான் கிருஷ்ணனின் அரண்மனை இருக்கிறது.  கிருஷ்ணன் இங்கு மூலவர்.  இந்த கிருஷ்ணனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் விதவிதமாக அலங்காரம் செய்கிறார்கள்.  இங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் ருக்மணிதேவி தேவிக்கு கோயில் கொண்டு.  பகவான் இங்கு தான் ருக்மணியை விவாகம் செய்து கொண்டார்.

 துவாரகைக்கு பக்கத்தில் சோமநாதர் ஆலயம் இருக்கிறது.  கிருஷ்ணர் வைகுண்டம் போவதற்கு முன்பு சேவை சாதித்த அரசமரத்தடி சயனத்  திருக்கோலத்தை பா'லகா  என்னுமிடத்தில் காணலாம்.  பெரியாழ்வார்,  ஆண்டாள்,  திருமங்கையாழ்வார்,  திருமழிசையாழ்வார் நம்மாழ்வார் ஆகியோர் பாசுரங்களைப் பாடியுள்ளனர்.

 பரிகாரம்

 எதிர்ப்புகள்,  உயிருக்கு பாதுகாப்பின்மை,  எங்கு சென்றாலும் தோல்வி பயம் மனச்சோர்வு மன உளைச்சல் பணக்கஷ்டம் நோய்களினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவரும் தங்கள்  வாழ்நாட்களுக்குள் ஒரு முறை  துவாரகா சென்று பகவான் கிருஷ்ணர் காலடி பட்ட புண்ணிய மண்ணில் இறங்கி பிரார்த்தனை செய்து வந்தால் ஏழு ஜென்ம  பாவமும் விலகும்.  ஏற்றமுடன் பெருவாழ்வு கிட்டும். கிருஷ்ணர், குசேலரை வாழ வைத்தது போல் நம்மையும் நிச்சயம் வாழ வைப்பார்.

Quickly Find What You Are Looking For