பத்ரிநாத் கோயில்
இந்தியா ஒரு புண்ணிய நாடு. புண்ணிய நதிகள் கொண்டது என்பது ஆண்டாண்டு காலமாக உலகம் அறிந்த இரகசியம். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நமக்கு கிடைத்த இமயமலையும் அதன் அடிவாரத்தில் குடிகொண்டுள்ள திருமால் கோவில்களும் தான். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது பத்ரிநாத் என்னும் மிகப்பெரிய புண்ணிய ஸ்தலம்.
டெல்லியிலிருந்து ரிஷிகேஷ் சென்று அங்கிருந்து பேருந்தின் வழியாக 187 மயில் மேல் ஏறிச் சென்றால் பத்ரிநாத்தை அடைந்து விடலாம். கல்கத்தாவிலிருந்தும் வரலாம். பனிபடர்ந்த இந்த இயற்கை காட்சி பகவான் நமக்கு கொடுத்த சீதனம் என்றால் மிகையில்லை. மூலவர் பத்ரிநாராயணன் வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். தாயார் அரவிந்த வல்லி. தீர்த்தம் தப்த குண்டம். ஸ்தல விருட்சம் இலந்தை மரம். விமானம் தப்த காஞ்ச விமானம். நரேனுக்கு தனது தெய்வீக காட்சியை கொடுத்த ஸ்தலம்.
கடல் மட்டத்திலிருந்து 10404 அடி உயரத்தில் உள்ளது இந்தக் கோயில். கங்கை நதிக்கரையோரம் உள்ள கோவிலில் எதிர்க்கரையில் தப்த குண்டம். இது வெந்நீரூற்று உள்ள இலந்தை மரத்தடியில் சதுர் பூஜ்த்தோடு சேவை சாதிக்கிறார். பகவானின் வலப்புறம் குபேரன், கருடன் இடப்புறத்தில் நாரதர் போன்றோர் உள்ளனர். கோவில் பிரகாரத்தில் ஆதிசங்கரருக்கு தனி சன்னதி உண்டு. கோவிலைச் சுற்றி நான்கு புறங்களிலும் பனி மலைகள் சூழ்ந்து இருக்கின்றன. பெருமாள் சாலக் கிராமத்தில் உருவாக்கப்பட்ட மூர்த்தி! பனி கொட்டும் இந்த இடம் தீபாவளியின் போது மூடப்பட்டுவிடும். சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி அன்று திறக்கப்படும். கோயிலுக்கு எதிரே 'வஸுதாரா' என்னுமிடத்தில் பனி மலை நீர்வீழ்ச்சியை பார்க்கலாம். இந்த நீர்வீழ்ச்சியின் பணிகள் பன்த் திவலைகள் நம் மீது பட்டால் பாவம் தொலையும் என்ற நம்பிக்கையும் உண்டு.
பரிகாரம்
மோட்சத்தை பெற விரும்புபவர்களும் வைஷ்ணவனாக பிறந்த ஒவ்வொருவரும் தங்களது இப்பிறவியை புனிதமாகவும் மறுஜென்மம் இல்லாமல் இருக்கவும் பத்ரி நாராயண பெருமாளை பத்ரிநாத்தில் சென்று தரிசிக்க வேண்டியது அவசியம். இந்த கோவிலுக்கு சற்று வடக்கே கங்கை கரையின் ஓரத்தில் 'பிரம்ம கபாலம்' என்னும் பெரிய பாறை இருக்கிறது. இங்கு சிரார்த்தங்கள் செய்தால் அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பதால் மோட்சம் அடைய நமது முன்னோர்களுக்கும் இங்கு சிரார்த்தம் செய்வது நல்லது.