திருக்கள்வனூர் கள்வப்பெருமாள் கோயில் Thiru Kalvanoor Temple in Tamil

 திருமாலுக்குத்  குறும்பு செய்வது  என்றால்  படு ஆனந்தம்.  சிறுவயதில் கண்ணனாக தவழ்ந்த காலத்தில் ஏகப்பட்ட  குறும்புகள் செய்து எல்லோரையும்  நடித்து இருக்கின்றார் கிறங்கடித்து இருக்கிறான்.   பின்னரும் கூட  இந்த குறும்புத்தனம் நிற்கவே இல்லை.  இப்படிப்பட்ட குறும்புத்தனமான ஒரு விளையாட்டை காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கள்வனூர் ஸ்தலத்தில் செய்து  பார்வதிதேவி மூலம்  கள்வன்  பட்டத்தையும் பெற்றிருக்கிறார் என்றால் திருமாலின்  விளையாட்டை நாம் எவ்வாறு சொல்வது?

 இந்த வரலாறு திருக்கார்வன வரலாறுதான்.  ஆனால் வித்தியாசம் நிறைய உண்டு. 

 காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்குள்,  கருவறையின் வலது பக்கத்தில் பெருமாள் சன்னதி ஒன்று உண்டு.  மூலவரின் திருப்பெயர் ஆதிவராகப் பெருமாள்.  நின்ற திருக்கோலம்.  விமானம் வாமன விமானம்  தாயார் அஞ்சிலை நாச்சியார்.  தீர்த்தம் நித்ய புஷ்கரணி. அச்வத்த  நாராயணன் என்பவருக்கு திருமால் தரிசனம் கொடுத்த ஸ்தலம்.

 ஒரு சமயம் பார்வதிதேவியும் லட்சுமியும் தனியே அமர்ந்து காஞ்சிபுரம் ஸ்ரீமன் நாராயணன் காமக் கோஷ்டத்திலுள்ள  பஞ்ச தீர்த்தக் கரையில் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.  திருமகளை காணாமல் அவளைத் தேடி வந்த நாராயணன்,  அவர்கள் இருவரும்(லட்சுமியின் பார்வதியும்)  பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்களுக்குத் தெரியாமல் மறைந்து நின்று   ஒற்றுக் கேட்டார்.  ஆனால் இதை பார்வதி தேவி கண்டு பிடித்து 'கள்வன்'  என்று பட்டம் கொடுத்து விட்டாள்.  அன்றிலிருந்து இந்த ஸ்தலம் திருக்கள்வனூர்  என்று வழங்கலாயிற்று.

 இன்னொரு தகவலும் உண்டு

 முன்னொரு சமயம் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் வாக்குவாதம் ஏற்பட  சிவபெருமான் கோபமடைந்து பார்வதிக்கு சாபம் கொடுத்தார்.  உடனே பார்வதி  சிவன் அடிபணிந்து இதற்குப் பிராயச்சித்தம் கேட்டார்.  இந்த காஞ்சிபுரத்திற்கு வந்து ஒற்றைக்காலில் நின்று வாமனரை நோக்கி தவம் செய்தால் தான் கொடுத்த சாபம் நீங்கும் என்றார் சிவபெருமான்.  அதன்படியே  காமாட்சி இங்கு வந்து வாமனரை நோக்கி தவம் செய்து.   காமாட்சி என் பெயர்  பெற்று சிவபெருமானுடன் இணைந்ததாக சொல்லப்படுகிறது.

பரிகாரம்

தாம்பத்திய பிரச்சனையால் பிரிவு  ஏற்பட்டிருப்பவர்கள் இதிலிருந்து மீண்டு மீண்டும் தம்பதிகளாக இணையவும்,  திருமணமாகாத இளம்பெண்களுக்கு திருமணம் நல்லபடியாக விரைவாக நடக்கவும்,  குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்பட்டால் அதை சீர் செய்து நல்லபடியாக கொண்டு வரவும் மற்றவர்கள் அந்தரங்க விஷயத்தில் தலையிட்டு கெட்ட பெயர் வாங்கி மன உளைச்சல் அடைந்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு நல்ல பெயர் எடுக்க வும் முன்னோர்கள் தோஷம்,  இராகு கேது தோஷம் விலகவும் திருக்கள்வனூர் ஸ்தலத்திற்கு வந்து  மனதார பிரார்த்தனை செய்து பெருமாளை வழிபட்டு  சென்றால்  கெடுதல் அத்தனையும் விலகும்.  மனதிற்கு சாந்தியும் நிம்மதியும் கிடைக்கும்.  அப்படிப்பட்ட புண்ணிய ஸ்தலம் இது.

Quickly Find What You Are Looking For