திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில் Thrikkakara Temple in Tamil

இயற்கை  சூழ்நிலையை காண்கின்ற பொழுது, அங்கு செல்வம் நிலைத்து நிற்பதை காண்கிறோம்.  பகவானுக்கு உற்சாகம் ஏற்பட்டால் பக்தர்களை சோதிப்பது இயல்பு. அப்படி ஒரு அற்புத திருவிளையாடலை திருமால் திருக்காட்கரை என்னும் திவ்ய தேசத்தில் செய்திருக்கிறார்.  இது கேரள மக்களுக்கு மட்டுமல்ல,  நமது பாரத தேசத்து மக்களுக்கும் பெருமைதான்.

திருச்சூர் -  ஆலவாய் ரயில்வே நிலையத்திலிருந்து ரயில்வே  மார்க்கமாக   சென்றால்  இருநவகோடி என்ற ரயில் நிலையம் வரும்.  இங்கிருந்து குமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது திருக்காட்கரை.  பேருந்தில் சென்றால் ' ஆலவாய்'  போகும் பாதையில் எட்டு கிலோ மீட்டர் செல்ல வேண்டும்.  நேரடியான பாதை இல்லை.  மூலவர் காட்கரையப்பன்.  தெற்கே பார்த்து தரிசனம்,  நின்ற திருக்கோலம்.  தாயார் பெருஞ்செல்வ நாயகி.  வாத்ஸல்யவல்லி  என்று வேறு பெயரும் உண்டு.  தீர்த்தம் கபில தீர்த்தம்.  விமானம் புஷ்பக விமானம்.

 கோயில் புராண வரலாற்றில் இப்பெருமாளை ' வாமனர்'  என்று நினைத்து வணங்குகின்றனர்.  ஓணம் பண்டிகை மிகவும் விசேஷம்.  முன்பொரு சமயம் ஒரு விவசாயி வாழைத்  தோட்டங்களை ஏற்படுத்தினான்.  ஆனால் வாழைக்குலை ஏற்படவே இல்லை.  எனவே அவன் பொன்னாலான வாழைக்குலை செய்து திருக்காட்கரை அப்பனுக்கு சமர்ப்பித்தான்.  மறுநாளே பகவானுடைய அனுக்கிரகத்தால் வாழை மரங்கள் வளர்ந்து வாழைக்குலைகள் இட்டது.  இதுதான் ' நேந்திரம் வாழை'  என்று மாறிவிட்டதாக ஐதீகம்.

 ஒரு சமயம் அந்தப் பெண் வாழைக்குலை கோயிலில் இருந்து காணாமல் போயிற்று.  இதைக் கண்ட அங்குள்ள அரசன் ஒரு யோகியை சந்தேகப்பட்டு துன்புறுத்தியதால் அந்த முனிவர் தற்கொலை செய்து கொண்டார்.  ஆனால் மறுநாளே காணாமல் போன அந்த பொன் வாழைக்குலை கர்ப்பகிரகத்தில் வந்து சேர்ந்தது.  அரசன் தான் அவசரப்பட்டு ஒரு முனிவரின் தற்கொலைக்கு காரணமாகி விட்டோமே என வருந்தி,  அந்த முனிவரது சாபம் தீர்க்க மூங்கில் கூடை ஏற்படுத்திக் கொண்டு  கோரை கொள்ளியை  வெளிச்சமாக்கி பகவானை வழிபட்டதாக கூறப்படுகிறது.  கபில முனிவருக்கு பகவான் இங்கு பிரத்தயட்சம்  என்பது சிறப்பு.

 பரிகாரம்

முன்னோர்கள் செய்த பாவங்கள் நம்மை தொடராமல் இருக்கவும்,  தெரியாமல் செய்த தப்பினால் வந்த சாபங்கள்  விலகுவதற்கும்,  தோட்டத்தில் காய்கறிகள்,   பழங்கள் எல்லாம் நல்லபடியாக விளைச்சல் பெறுவதற்கும் பிரம்மகத்தி தோசம் போவதற்கும் இங்குள்ள   காட்கரையப்பன் பெருமாளை ஒரு முறை தரிசனம் செய்தால் போதும்.  அத்தனை பாவங்களும் விலகும்.  மோட்சத்திற்கு வழி பிறக்கும்.

Quickly Find What You Are Looking For