திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் Parthasarathy Temple Triplicane in Tamil

கைங்கரியத்திற்கு மறுபெயர் கிருஷ்ணன்.  துன்பம் வரும் பொழுது தோள் கொடுத்து காப்பாற்றுவார் என்பது அசாத்திய நம்பிக்கை.  அகங்காரம் இல்லாமல் தன்னை ஒரு  சாரதியாகவே  மாற்றிக்கொண்டு பாண்டவர்களுக்கு செய்த உதவியால் கெடுதல்  கூட்டமான துரியோதனன்  சந்ததி காணாமல் போயிற்று.  அப்படிப்பட்ட தேரோட்டி கண்ணனாக முறுக்கு மீசையோடு முகத்தில் புன்னகை சிந்தி அருள் பாலிக்கும் ஆனந்தமான திருக்கோயில் தான் சென்னையில் உள்ள பார்த்தசாரதி திருக்கோயில்.

 சென்னை கடற்கரைக்கு  அருகே நகரின் நடுவே  உள்ளது இந்த திருக்கோயில்.  பிருந்தாரண்யம் அல்லிக்குளம் என்று வேறு பெயர்களும் உண்டு.  அல்லி மலர்கள் நிரம்பிய இந்தக் குளத்தை உடைய ஊர் என்பதால் திருவல்லிக்கேணி என்று பெயர் பெற்றது.  ஐந்து நிலை ராஜகோபுரம் இரண்டு பிரகாரம் கொண்டது.  மூலவர் வேங்கட கிருஷ்ணன்.  அருகில் ருக்மணி,  பலராமன் ஸாத்யகி  அநிருத்தர்,  பிரத்யும்னர்  இவர்களோடு சேர்ந்து காட்சி,  ஆனந்த்,  பிரணவ,  புஷ்ப,  சேஷ,  ஸோம மீன அக்கினி விஷ்ணு தீர்த்தங்களும் உண்டு.  இக்குளத்தில் நீங்கள் வசிப்பதில்லை என்பது ஆச்சரியம்.

 ருக்மணி, பலராமர், மார்க்கண்டேயர்,  அர்ஜுனன், பிருகு,  அத்திரி,  மரிசி,  சுமதி,  ஸப்தரோமா, ஜாபலி, தொண்டமான்  போன்றோர் வழிபட்டதாக ஐதீகம்.  அத்திரி முனிவருக்கு அழகிய சிருங்கராகவும்,  மதுமான்  முனிவருக்கு  இராமர் பட்டாபிஷேக  கோலத்தையும் இங்கு காட்டியதாக வரலாறு.   சப்தரோமா முனிவருக்கு கஜேந்திர வரதராக கருட வாகனத்தில் காட்சியும் உண்டு.  திருமகள்,  வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்து பிருகு முனிவரின் குடிசைக்கு அருகில் குழந்தையாக உருவாகி நிற்க அவளுக்கு வேதவல்லி என்று பெயர் சூட்டி  வளர்த்து வந்தார். பிருகு முனிவர் பின்பு திருமால் இளவரசர் வேடம் பூண்டு வேதவல்லியை  மன முடித்ததாக வரலாறு.  குருச்சேத்திரப் போர் பீஷ்மரின்  வில்லால் கண்ணனுக்கு ஏற்பட்ட காயங்களை  இன்றைக்கும் உற்சவ மூர்த்தியின் திருவுருவத்தில் காணலாம்.

 கிருஷ்ணர் குடும்ப ஸமேதராக  எழுந்தருளி  இருப்பதும் பார்த்தசாரதியாக பெரிய மீசையுடன் காணப்படுவார்கள் இங்குதான்.   இக்கோவில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.  திருமங்கையாழ்வார்,  பேயாழ்வார்,  திருமழிசையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. 108 திவ்ய தேசங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

 பிரகாரம்

எதிரிகளை வெல்வதற்கும் எத்தகைய பிரச்சனைகள் வந்தாலும் அதை தீர்ப்பதற்கும் பகவானுடைய கருணை வேண்டும்.  அதை பக்தியால் பெற்றுவிட முடியும்.  அத்தகைய பாக்கியத்தை மிகவும் சுலபமாக பெற்றுத்தரும்  ஸ்தலம் தான் இந்த பார்த்தசாரதி  ஸ்தலம்.  பகவானுக்கு சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் அனைத்து வேண்டுதலையும் பகவான் நிறைவேற்றி வைப்பார்.  மன நிம்மதிக்கு,  மோட்சத்தை அடைய விரும்புபவர்களுக்கும் ஏற்ற மிக அருமையான புனிதத்தலம்.

Quickly Find What You Are Looking For