திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் Srivilliputhur Andal Temple in Tamil

பக்தியில் மிகவும் உயர்ந்து நிற்பவர்கள் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் என்பதற்கு அடையாளமாக எத்தனையோ பேர்களை உதாரணமாகக் காட்டலாம்.  ஆனால் விதி முறையை மாற்றி ஒரு சாதாரண பெண்ணாய் பிறந்து,  திருமாலே தன் கணவனாக அடைந்து பேறு  பெற்றவள் சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் தான்.  தன் கவி திறமையால் இவர் ஆற்றிய தொண்டு இன்று வரை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பெருமை தேடி கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பது மிகையில்லை.

 விருதுநகருக்கு  தென்மேற்காக 45 கிலோமீட்டர் தொலைவில் இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூர்.  மல்லி நாடு -  புத்தூர்,  சம்பதாரண்யம்,  வராக சேத்திரம் என்று வேறு பெயர்களும் உண்டு.  11 நிலை இராஜகோபுரம் உயரம் 192 அடி.  மூலவர்  ரங்கமன்னார்.  தாயார் ஆண்டாள்,  தீர்த்தம் திருமுக்குளம்.  விமானம் ஸம்சன விமானம்.  பெரியாழ்வாரால் நிர்மாணம் செய்யப்பட்டது.  பின்னர் பல்வேறு மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது.  தமிழ்நாடு அரசு முத்திரையில் இடம்பெற்றிருப்பது இந்த  கோயிலின் ராஜகோபுரம் தான்.  பெரியாழ்வாரும்,  ஆண்டாளும் மங்களாசாசனம் செய்து இருக்கிறார்கள்.

 இக்கோயில் இரண்டு பெரிய பகுதிகளாக பிரிக்கப்பட்டு.  ஒன்று வடபத்ரசாயி கோயிலாகவும்,  தென்மேற்கில் நாச்சியார் கோயில் ஆகவும் காணப்படுகிறது.  இந்த இரண்டு கோயில்களுக்கும் இடையே உள்ள நந்தவனத்தில் தான் ஆண்டாள் தோன்றினார்.  ஆண்டாள் கோயிலில் பிரகாரத்தில் வலம் வரும்போது தங்கத் தகடு பொருத்த  பிரணவகிருதி விமானத்தை பார்க்கலாம்.   மண்டூக முனிவர் இத்தலத்தில் தவம் செய்து  பேரு பல பெற்றார்.  கண்டனம் வில்லியும் இத்தலத்தைப்  புதுப்பித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் என்று பெயர் வழங்கலாயிற்று.

 பிராட்டியே ஒரு ஆழ்வாராக அவதரித்து எம்பெருமானுக்கு பெரியாழ்வார் தொடுத்த பூ மாலையை தானே சூடி பார்த்து பின்னர் பெருமாளுக்கு கொடுத்தனுப்பி எம்பெருமானின் மனதைக் கவர்ந்து அவர்  திருக்கரம் பிடித்தார்.  இன்று கூட முதல் நாள் இரவு ஆண்டாளுக்கு சாற்றப்பட்ட  பூமாலையை வடபத்திர சாயிக்கு மறுநாள் காலை முதல் மாலை அணிவிக்கப்படுகிறது.  பெருமாளுக்கு வலப்புறத்தில் ஆண்டாளும்,  இடப்புறத்தில் கருடாழ்வாரும் காட்சியளிக்கின்றனர்.  இது வேறு எங்கும் காண முடியாதது ஆகும்.  ஆண்டாள் அவதரித்த இடத்தில் துளசிச் செடியும் நந்தவனமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 பரிகாரம்

 பாடினால் துன்பம் குறையும்,  அதுவும் பகவான் நாமாவைப்  பற்றி  தன்னை மறந்து பக்தியோடு பாடினார் பகவானே நேரடியாக தரிசனம் கொடுப்பார்.  சாதாரண மனிதன் தானே,  பகவான் எங்கு வரப்போகிறார் தங்கள் குறையை எப்படி தீர்க்க போகிறார் என்று கவலை வேண்டாம்.  பிரார்த்தனைகளை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் வந்து மனமார செலுத்துங்கள்.  உங்கள் துன்பம் படிப்படியாக குறையும்.  நோய்கள் விலகும்.  ஆரோக்கியம் அதிகமாகும்.  செல்வச் செழிப்பும் திருமணத் தடைகளும் விலகி ஆனந்தமான வாழ்க்கையை பெறுவீர்கள்.  இது ஆண்டாள் நமக்காக செய்துவரும் அன்றாடப்  பேருதவி.

Quickly Find What You Are Looking For