திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் Thiruvattaru Temple in Tamil
இயற்கைதான் பகவான் அந்த பகவான் தான் இயற்கை என்பதை நிரூபிக்க திருமால் அவதாரங்கள் நடந்தது. மனங்கவரும் மாலை நேரத்து வெயில் உடலில் பட்டார் புத்துணர்ச்சி ஏற்படும். அப்படிப்பட்ட மாலை வெயிலை தானும் அனுபவிக்கும் பொருட்டு பெருமாள் பள்ளி கொண்ட ஸ்தலம் திருவட்டாறு. வெயில் மட்டுமா பகவான் திருமேனியில் படுகிறது? இல்லை. கங்கையும், தாமிரபரணியும் மாலையாக இருபக்கமும் செல்கின்ற காட்சியும் உண்டு. அப்படிப்பட்ட இயற்கை எழில் மிகுந்த ஊர் தான் திருவட்டாறு.
திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் தொடுவெட்டி என்னும் ஒரு ஊர் வரும். இங்கு இறங்கி சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் வேறு ஒரு பஸ் மூலம் சென்றார் திருவட்டாறு என்னுமிடத்தை அடையலாம். இங்குள்ள பிரசித்தி பெற்ற கோயில் மூலவராக ஆதிகேசவப் பெருமாள் வீற்றிருக்கிறார். புஜங்க சயனம். மேற்கே பார்த்து தரிசனம். தாயார் மரகதவல்லி நாச்சியார். தீர்த்தம் கடல் வாய்த் தீர்த்தம், வட்டாறு, ராம தீர்த்தம். விமானங்கள் அஸ்டாங்க விமானம். அஷ்டாஷார விமானம். பரசுராமனுக்கும், சந்திரனுக்கும் பகவான் தரிசனம் கொடுத்த ஸ்தலம்.
'கேஸி' என்ற அசுரன் தேவர்களை தொல்லைப்படுத்த, தேவர்கள் திருமாலிடம் பிரார்த்தனை செய்தனர். பகவான், கேஸியுடன் போர்புரிந்து அவனைக் கீழே தள்ளி மேலே படுத்துக் கொண்டார். கேஸியின் பத்தினியான ஆஸிரி கங்கையை பிரார்த்திக்க கேஸியைக் காப்பாற்ற கங்கை, தாமிரபரணியுடன் சேர்ந்து வெள்ளமாகப் பெருக்கெடுத்து வந்தாள். இதைக் கண்ட பகவான் பூமாதேவியிடம் அந்த இடத்தை வெள்ளத்தால் பாதிக்காமல் இருக்க உயர்ந்த மேடாக மாற்றச் சொன்னார். பூமாதேவியும் அந்த இடத்தை உயரமாக்க, கங்கை, தாமிரபரணியால் தாமிரபரணியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த இரண்டு நதிகளும் பின்னர் பகவானை சரண் அடைந்து வட்டமாக சுற்றி பிரிந்தது. இதனால் இந்த இடத்திற்கு திருவட்டாறு என்று பெயர் ஏற்பட்டதாக ஐதீகம். ஆதிகேசி என்னும் அரக்கனை பகவான் கொன்றதால் பகவானுக்கு ஆதிகேசன் என்று பெயர் ஏற்பட்டது.
பரிகாரம்
எதிரிகளால் பலவிதமான கஷ்டங்களையும், அவமானங்களையும் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், குடும்ப நபர்களால் சோதனைக் உட்படும்போது துடிதுடிப்பார்கள், நோயினாலும், நீர்சம்பந்த பிரச்சினையாலும் மாட்டிக்கொண்டு முழிப்பவர்கள், மேலும் வெளியே செல்ல முடியாத பிரச்சனைகளால் தினம் தினம் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள். இந்த ஸ்தலத்தில் உள்ள ஆதிகேசவனை தரிசித்து ஆகம விதிப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விட்டால் பகவான் பிரட்தட்சயமாகி வேண்டிய உதவிகளை செய்து காப்பாற்றுவார்.